Towards a just, equitable, humane and sustainable society

நெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரியகோவில்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5, பாடம் 4

இவ்வளவு பெரிய கல்லை அவ்வளவு உயரத்திற்கு ...

மு.சாந்தகுமாரி,இரா.நடேசன் வசந்தி,நல்.கருணாநிதி,வா.வீரப்பன்,சு.கவிதா

நோக்கம்:

· பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்

· இணைப்புச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

· உறவு முறைக் கடிதம் மற்றும் நாட்குறிப்பு எழுதுதல்

ஈடுபடுதல் :

கீழ் கண்ட வினாவிற்கு விடையெழுதி அதைப் பொதுவில் வாசிக்க வைத்தல்.

· உனக்குச் சுற்றுலா போகும் வாய்ப்பு கிடைத்தால் எங்கு செல்ல விரும்புவீர்கள்? ஏன்?

· விழித்தது முதல் உறங்குவது வரை என்னென்ன செய்வீர்கள்?

வரிசைப்படுத்திச் சொல்லுதல்.

மாணவர்கள் எழுதிய வினாக்களுக்கான விடையை அவர்களே வாசிக்காமல் மற்ற மாணவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து மற்றவர் வாசிக்கும்படி செய்தல் வேண்டும். இதன் மூலம் மற்றவர்கள் அப்பத்தியைப் படிக்க முடிகிறதா என்பதையும் கேள்வியைப் புரிந்து எழுத முடிகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு நாளின் நிகழ்வைப் பற்றி பேசும்பொழுது அவர்களுக்கு நாட்குறிப்பின் அவசியத்தைக் கூறி, அவர்களை எழுதத் தூண்டலாம்.

ஆராய்தல்:

· தஞ்சைப் பெரியகோவில் தொடர்பான வீடியோ போட்டுக் காட்டுதல்.

· தஞ்சைப் பெரியகோவில் புகைப்படங்களை மாணவர்களிடம் கொடுத்துக் குழுவில் கலந்துரையாடச் செய்தல்.

· அவர்கள் ஊரில் உள்ள கோவில்/மசூதி/ சர்ச் ஆகியவற்றைப் பார்த்து, பார்த்ததைப் பற்றிப் எழுதியும், வரைந்தும் வரலாம் அல்லது வீடியோ  பார்த்து முடித்ததும்,

அது தொடர்பான உரை யாட ல் களை மேற்கொள்ளலாம்,

புகைப்பட உரையாடலில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ப ட த் தி ற்கே ற் ற கேள்விகளைக் கொடுத்து அதற்கான பதிலைப் பொதுவில் பகிர்தல் வேண்டும்.

அ வ ர் க ள் எ ழு து ம்போழுதே பத்திகளாகப் பிரித்து எழுதுவது பற்றி எடுத்துக் கூற வேண்டும். மாணவர்கள் பார்த்து, எழுதி வந்தவற்றை வாசிக்க வைத்து பின் அவற்றைச் சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டும்.

விளக்குதல்:

பாடத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒரு பத்தி என்ற வகையில் வாசிக்க வைக்க வேண்டும்.

இரண்டாவது முறையும் அப்படியே செய்ய வைக்கலாம். அப்படிச் செய்யும்பொழுது ஒவ்வொரு பத்தியை வாசித்து அப்பத்தி தொடர்பான கேள்விகளைத் தயார் செய்து கேள்விகள் கேட்க வேண்டும். (உ.ம்) பத்தியை வாசித்ததும், கேட்பதற்கான கேள்விகள். கேள்வி கேட்பதற்கு முன் எந்தக் குழந்தைக்கான கேள்வி என்பதைக் குறிப்பிட்டுப் பின் கேட்பது நல்லது.

1. கடிதம் எழுதியது யார்?

2. காலாண்டு விடுமுறையில் எங்கு சென்றார்கள்?

3. தஞ்சாவூரில் ஓடும் ஆறின் பெயர் என்ன?

· இணைப்புச் சொற்கள் பற்றி

மாணவர்களுக்கு விளக்க வேண்டும். அதற்குத் தேவையான படங்கள் மற்றும் மாதிரிகளைத் தயாரித்து வைத்திருத்தல் நல்லது. இணைப்புச் சொல்லின் வகைகளை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் விளக்க வேண்டும். இதற்கு இணைப்புச் சொற்களை அட்டையில் தயாரித்து வைத்திருத்தல் நல்லது.

விரிவாக்குதல்:

· மாணவர்கள் ஒவ்வொருவரையும் தங்களுடைய பயணம் பற்றிக் கடிதம் எழுத வைக்க வேண்டும். அவர்கள் எழுதிய கடிதத்தைத் தபாலட்டையில் எழுதிப் பள்ளி முகவரி எழுதித் தபால் பெட்டியில் போடவேண்டும். இக்கடிதத்தை வகுப்பில் உள்ள சகமாணவர்களில், அவரவருக்குப் பிடித்த யாரேனும் ஒருவருக்கு அனுப்பலாம்.

· மூன்று நபர்கள் உள்ள குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் கீழ்க்கண்ட படங்களைக் கொடுக்க வேண்டும். அப்படங்களிலுள்ள இணைப்புச் சொற்களைக் கண்டுபிடித்து எழுத வேண்டும்.

கண்டுபிடித்த இணைப்புச் சொற்களை வரிசைப்படுத்தி வகுப்பறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

· வெடி வெடிப்பது போன்ற காட்சி!

· குழந்தைகள் விளையாடும் காட்சி!

· அழும் மற்றும் சிரிக்கும் குழந்தைகள் உள்ள படம்

மதிப்பிடுதல்:

· பாடப் புத்தகத்திலுள்ள பயிற்சிகள்

· இணைப்புச் சொற்களுக்கான பயிற்சித்தாள்.

ஓங்கி---------------

சீராட்டி-----------------

வா. வீரப்பன், தொ.ப.ஆ., அரசு தொடக்கப் பள்ளி, ஐயங்குட்டிப்பாளையம்

சு. கவிதா, தொ.ப.ஆ., அரசு தொடக்கப் பள்ளி, மணவெளி (அ)

வெள்ளை--------------

· வார்த்தைகளைக் கொடுத்து வாக்கியங்களை  \பத்திகளை உருவாக்கச் சொல்லுதல்.

1வெற்றி தோல்வி

2. கண்ணும் கருத்தும்

3. முன்னும் பின்னும்

4. மெதுவாய் பொறுமையாய்

· பத்திகளைத் தேர்வு செய்து கேள்விகளுடன் வழங்க வேண்டும். வினாக்களுக்குக் குழுவில் பதில் எழுத வேண்டும்.

 

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 1