Towards a just, equitable, humane and sustainable society

விலங்குகள் பற்றிய புதிர்கள்

0
No votes yet
0
Post a comment

வகுப்பு:   மூன்று  

பாடம்:  சூழ்நிலையியல்

 

விலங்குகள் பற்றிய புதிர்கள்

 

நோக்கம்நம்மைச்சுற்றியுள்ள மரங்கள்செடிகள்கொடிகள் , விலங்குகள்பறவைகள்பூச்சிகள் இவற்றை உற்றுநோக்குதல் அவற்றின் சிந்தித்தல் திறனைத் தூண்டுதல்

 

கீழ்க்கண்ட புதிர்களுக்கு விடை சொல்லத் தூண்டுதல்

 

1

  1.      இது ஒரு வீட்டு விலங்கு 

புல்லை விரும்பிச் சாப்பிடும் 

இரண்டு சிறிய கொம்புகள் உண்டு சிறிய வால் உடையது. 

விடைஆடு 

 

2

  1.      நிலத்திலும் வாழும் நீரிலும் வாழும் 

மழைநீரைக்கண்டால் ஆனந்தம் 

பாம்புக்குப்   பிடித்த உணவு 

விடைதவளை

 

3

  1.       ஆபத்து என்றால்  

தன் ஓட்டுக்குள்ளே 

ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளும். 

மெதுவாக நகரும். 

விடைஆமை 

 

4

  1.       பொறுமைக்கு உதாரணம் 

அதன் நிறம் கருப்பு 

சேற்றுத் தண்ணீரிலே இருப்பது பிடிக்கும்  

வளைந்த கொம்புகள் உடையது 

விடை: எருமை

 

5

  1.       முதுகில் மூன்று கோடுகள் இருக்கும் 

பழங்களைக்  கொறித்துத் தின்னும் 

அழகான வாலுண்டு 

மரத்தில் வாழும் 

விடை: அணில்

 

6

  1.       மனிதனுக்கும் இந்த விலங்குக்கும் 

நெருங்கிய தொடர்புண்டு 

நீண்ட வாலுண்டு. 

மரத்துக்கு மரம் தாவும் . 

 விடை: குரங்கு

 

7

  1.      குட்டிச்சுவர் ஓரம் இருப்பேன் 

காலால் உதைப்பேன் 

என் முகத்தில் விழித்தால் 

நல்லது நடக்கும் என்பார்கள் 

பொதி சுமக்கப்  பயன்படுவேன் 

விடைகழுதை

 

8

  1.       பல  வண்ணங்கள் உடையது 

பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் 

தேனைத்தேடி பூவை நாடி பறந்து செல்லும் 

 விடைவண்ணத்துப்பூச்சி 

 

9

  1.       கருப்பு நிறம் உடையது 

சங்கீதம் பாடி அனைவரையும் 

கவர்ந்திழுக்கும் பறவை  

 விடைகுயில் 

 

10

  1.       ஒற்றைக்காலில் தவம் இருக்கும் 

ஆனால் முனிவர் அல்ல  

நீண்ட அலகு உடையது 

 அதன் நிறமோ வெண்மை 

 விடைகொக்கு

 

11

  1.       பறக்கும் பறவை அல்ல 

பூச்சி வகையைச் சேர்ந்தது 

தமிழ் உயிரெழுத்துக்களில் 

ஓர் எழுத்தைக் குறிக்கும் 

 விடை 

 

12

  1.       நான்கு கால்கள் இருக்கும் 

ஆபத்து காலத்தில் வாலை துண்டிக்கும்  

சுவரைக்  கண்டால் ஊர்ந்து சென்று 

ஒட்டிக்கொள்ளும். 

 விடைபல்லி

 

13

  1.       கடிவாளம் போட்டு 

கண்கட்டி விட்டு 

நேராகப்  பார்த்து செல்லும் 

வேகத்துக்கு சொந்தக்காரர் 

 விடைகுதிரை

 

14

  1.       சிவப்புக்  கொண்டை உடையது 

கூரைக்கு சொந்தம் கொண்டாடும்  

காலையில் கடிகாரத்துக்கு பதிலாக  

ஆளை எழுப்பப்  பயன்படும். 

 விடைசேவல்

 

15

  1.       என் இருப்பிடத்திற்குத் தகுந்தவாறு 

என் நிறத்தை மாற்றிக் கொள்வேன் 

 விடைபச்சோந்தி

 

16

  1.       காவல் துறையில் பணியாற்றுவேன் 

திருடர்களைத் தேடி கவ்விப்பிடிப்பேன் 

 என்னிடம் ஜாக்கிரதையாக இருக்கனும் 

மோப்பசக்தி அதிகம் உடையவன் 

 விடைநாய்

 

17

  1.       என்னை அடித்தாலும் 

உதைத்தாலும் என் உடம்பில் இருந்து 

வரும் இரத்தம் நிறமற்றது 

நான் வீட்டிலும் இருப்பேன் 

நான் ஒரு பூச்சி வகையைச் சேர்ந்தவன் 

தரையில் ஓடுவேன் சில நேரங்களில் பறப்பேன். 

விடைகரப்பான் பூச்சி

 

18

  1.       கடவுளின் வாகனம் நான் 

வீட்டிலும் இருப்பேன் 

என்னை அடிக்கமாட்டார்கள் 

ஆனால்துரத்திவிடுவார்கள் 

 விடைஎலி 

 

19

  1.       நின்று கொண்டே தூங்குவான் 

தூண்கள் போன்ற கால்கள் உடையவன் 

முறம்போன்ற காதுகள் உடையவன் 

நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு இவன்தான் 

விடையானை

 

20

  1.       சாரை சாரையாய் செல்பவன் 

சுறுசுறுப்பாய் இருப்பவன் 

உழைப்புக்குப் பேர்போனவன் 

 விடைஎறும்பு

 

21

  1.       தண்ணீரிலே கூட்டமாக நீந்துவான் 

தட்டையான அலகு உடையவன் 

இரண்டு கால்களிலும் சவ்வு உடையவன் 

இவனைக்  கழுத்தைப் பிடித்து தூக்குவார்கள் 

விடைவாத்து 

 

22
  1.       படகு போன்ற உடலமைப்பு உடையவன் 

துடுப்பைப் பயன்படுத்தி நீந்துவான் 

நீர்நிலைகளில் இருப்பான் 

விடைமீன்

 

இதுபோன்ற புதிர்களை மாணவர்களிடம்  கேட்கும்போது அவர்களுக்குள் உற்சாகம் ஏற்படுகிறதுமேலும் அவர்கள் புதிர்களுக்கான விடையை முதல் குழு அல்லது இரண்டாவது குழு  மூன்றாவது குழுவில் அறிகிறார்களா என்பதையும் நாம்அறியமுடிகிறதுமாணவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் அமைகிறதுவகுப்பறையை உற்சாகப் படுத்தும் ஒரு செயல்பாடாகவும் இருக்கிறதுமேலும் குழு செயல்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறதுஒரு குழு கேள்வி கேட்க மற்றொரு குழு பதில் சொல்வதற்கும் இந்த செயல்பாடு பயன்படுகிறது.

 

Grade: 
3

Subject: 
EVS

Term: Term 1

0
No votes yet
0
Post a comment