Towards a just, equitable, humane and sustainable society

கூடி ஆடி மகிழ்வோம்.....

கூடி ஆடி மகிழ்வோம்.....

சமச்சீர் கல்வி தமிழ், வகுப்பு 3,பாடம் 1

அ.லலிதா ப்ரியதர்ஷனி,ர.நடேசன் வசந்தி

நம் வாழ்வோடு கலந்த வர்ணனைச் சொற்களை நம்முள் வசப்படுத்துவது எப்படி?

குறிக்கோகள்

பாடலிலுள்ள வருணனைச் சொற்களை அறிதல்.

பாடலை மகிழ்ச்சியுடன் பாடச் செய்தல்.

சுயமாக சிந்தித்து எழுதும் திறனை வளர்த்தல்.

ஈடுபடுதல்:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் ஒரு பையில் தோட்டத்திலிருந்து சேகரித்த இலைகள், பூக்கள், கூழாங்கற்கள், விதைகள், புற்கள் போனவற்றைக் கொண்டு வருதல். மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து “A” “B”  என்று பெயரிடுதல். “A” பிரிவிலிருந்து ஒரு மாணவன் முன் வந்து ஒரு பொருளை எடுத்து பார்த்தபின் மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் அப்பொருள் என்ன என்பதை “பி” குழு மாணவர்கள் கண்டுபிடிக்க ஏதுவான குரிப்புகளை அளித்தல். அந்த பொருளின் பெயரைச் சொல்லக் கூடாது. உதாரணமாக கூழாங்கல்லைக் கையில் கொடுத்து கேட்டால் மாணவன் பின்வரும் குறிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக அளிப்பான்.

உருண்டையாக இருக்கும்

வழுவழுப்பாக இருக்கும்

வெள்ளையாக இருக்கும்

இவ்வாறு மூன்று குறிப்புகளில் அடுத்த குழு மாணவர்கள் அந்த பொருள் என்ன என்று கண்டுபிடித்து விட்டால் அந்த குழுவிற்கு 1 புள்ளி அளிக்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு பொருளைப் பற்றி விவரித்து கண்டுபிடிக்க வைக்க வேண்டும்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ‘கண்டுபிடி’ விளையாட்டின் மூலம் வர்ணனைச் சொற்களை அவர்களை அறியாமலேயே பயன்படுத்துவர்.

மதிப்பீடு: ஆசிரியர் மாணவர்கள் வர்ணனைச் சொற்களைச் சரியாகப் பயன்படித்தினரா என்பதைக் கவனித்தல்.

ஆராய்தல்:

மாணவர்களிடம் அவர்கள் பார்த்த பொருள்கல் எங்கிருந்து கொண்டு வரப்பட்ட என்பதை யூகிக்கச் சொல்லுதல். மேலும் பல குறிப்புகள் அளித்து “தோட்டம் எனும் சொல்லை அவர்கள் வாயிலாக வரவழைத்தல்.

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களிடம் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அவர்களைச் தோட்டத்தைப் பார்வையிடச் செய்தல். தோட்டத்தில் அவர்களுக்குப் பிடித்தவற்றையோ அல்லது தோட்டத்தையோ வரைந்து வண்ணமிடச் சொல்லுதல்.

மாணவர் செயல்பாடு: அவர்கள் பார்த்த செடிகள், மரங்கள், பூக்களை வரைந்து வருவர். ஆசிரியர் அப்படங்களைச் சுவற்றில் ஒட்டுதல். ஒவ்வொரு மாணவரையும் அழைத்து அவர்களின் படத்தையும் அவர்களின் நண்பர் வரைந்த படத்தையும் ஒப்பிட்டுக் கூறச் செய்தல்.

மதிப்பீடு:

இதன் மூலம் மாணவர்களின் வருணனைச் சொற்களைப் பயன்படுத்துவர். தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால் ஆசிரியர் தோட்டத்தின் படங்கள் இரண்டைக் காட்டி, அவற்றில் இருக்கும் மரங்கள், செடிகள், பூக்கள், பற்றி ஒப்பிடச் செய்யலாம். உதாரணமாக, பின்வரும் இரண்டு படங்களைக் காட்டலாம். (அடுத்த பக்கத்தில் உள்ளது).

விளக்குதல்:

செயல்பாடு: வருணனைச் சொற்களைப் புரிய வைத்தல்.

ஆசிரியர் செயல்பாடு: மாணவர்கள் பயன்படுத்திய வருணனைச் சொற்களை ஆசிரியர் கரும்பலகையில் எழுதி

அதைப் படித்துத் காண்பித்தல். ஒரு பொருளின் தன்மையை கூறுவதே வருணனைச் சொற்கள் என்பதை மாணவர்களுக்குச் கூறுதல்.

செயல்பாடு: 2 பாடலைப் பாட வைத்தல்

ஆசிரியர் செயல்பாடு: “கூடி ஆடி மகிழ்வோம’ பாடலை ஆடியோவில் மாணவர்களைக் கவனமாகச் கேட்கச் செய்தல். பின் ஆசிரியர் அப்பாடலைப் பாட மாணவர்களையும் சேர்ந்து செய்கையுடன் பாடச் சொல்லுதல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் கூடி ஆடி மகிழ்வோம் பாடலை உற்சாகத்துடன் பாடுதல்.

மதிப்பீடு: மாணவர்கள் சரியாக பாடுகிறார்களா என்று ஆசிரியர் உற்று கவனித்தல்.

செயல்பாடு: 3

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் பாடலிலுள்ள 4 பத்திகளையும் 4 வரைபடத்தாளில் எழுதிக் கொள்ள வேண்டும். மாணவர்களை நான்கு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பத்தியைக் கொடுத்தல். வரிசைப்படி மாணவர்கள் குழுவாக செய்கையுடன் பாடலைப் பாடச் செய்தல்.

தோட்டம் நல்ல தோட்டம் – நம்மைச்

சொக்க வைக்கும் தோட்டம்

கூட்டமாக, நாமும், ஒன்றாய்க்

கூடி ஆடும் தோட்டம்

வண்ண வண்ண

மலரால் – நம்மை

மகிழ வைக்கும் செடிகள்

தின்னத் தின்னப் பழங்கள் – மேலும்

தின்னக் கொடுக்கும் தோட்டம்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் குழுவாக செய்கையுடன் பாடுதல்.

செயல்பாடு:4

ஆசிரியர் செயல்பாடு: பின்னர் மாணவர்களை பாடலில் உள்ள வருணனைச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறச் செய்தல்.

நல்ல தோட்டம் வண்ண மலர்

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் பாடலில் உள்ள வருணனைச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறல்.

மதிப்பீடு: ஆசிரியர், மாணவர்கள் சரியாக வருணனைச் சொற்களைச் கண்டுபிடிக்கிறார்களா என்று கவனித்தல்.

விரிவாக்குதல்:

செயல்பாடு:1

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் “கூடி ஆடி மகிழ்வோம்” பாடலின் நகலை (ஜெராக்‌ஸ்) மாணவர்களிடம் கொடுத்தல். அதிலுள்ள வருணனைச் சொற்களைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கி அதற்குப் பதிலாக அதற்கு பொருத்தமான வேறு வருணனைச் சொற்களை இட்டு நிரப்பச் செய்தல்.

சரியாகச் செய்த மாணவர்களைப் பாராட்டுதல். எழுதத் தயங்கும் மாணவர்களிடம் பல் வினாக்கள் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தி எழுத வைத்தல்.

தோட்டம் நல்ல தோட்டம் – நம்மைச் சொக்க வைக்கும் தோட்டம்

கூட்டமாக நாமும், ஒன்றாய்க்

கூடி ஆடும் தோட்டம்

தோட்டம் அழகான தோட்டம் – நம்மை

மகிழ வைக்கும் தோட்டம்

குழுவாக நாமும் – ஒன்றாய்ச் சேர்ந்து ஆடும் தோட்டம்.

மாணவர் செயல்பாடு: இதன் மூலம் மாணவர்கள் வருணனைச் சொற்களை எவ்வாறு எங்கு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்கிறார்கள். மேலும் தன்னுடைய கற்பனைத் திறத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

செயல்பாடு:2

ஆசிரியர் செயல்பாடு:

கீழ்க்காணும் வினாக்கள் மூலம் தோட்டத்தைப் பற்றி வினவுதல்:-

  1. தோட்டம் எப்படி இருந்தால் உங்களுக்குப் பிடிக்கும்?
  2. தோட்டத்தில் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?
  3. தனித்து விளையாட பிடிக்குமா இல்லை கூடி விளையாட பிடிக்குமா?
  4. 3, 4 பேர் சேர்ந்து இருந்தால் நாம் எப்படி அழைப்போம்?

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் அவர்களுக்கு எந்த மாதிரியான தோட்டம் பிடிக்கும், தோட்டத்தில் அவர்கள் எவ்வாறு உணர்வார்கள். அவர்களுக்கு எவ்வாறு விளையாட பிடிக்கும் என்பதைப் பற்றி பேசுவார்கள்.

செயல்பாடு: 3

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் தோட்டம் என்ற தலைப்பிர்கு ஏற்றாற் போல் ஒரு பெயர்ச்சொல்லைக் கொடுத்து (பூ, தோட்டம், பறவை, பழம், நிலா, மரம்) அவர்களை அந்த பெயர்ச்சொல்லை வர்ணிக்கும் வர்ணனைச் சொற்களைக் கண்டுபிடிக்கச் சொல்லல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் அவரவர் குழுவில் கலந்து ஆலோசித்து பின்வருமாறு வர்ணனைச் சொற்களைப் பயன்படித்தி எழுதுவார்கள்.

உதாரணம்: நிலா முழுநிலா, வட்ட நிலா ,வெள்ளை நிலா

மதிப்பீடு: ஆசிரியர் ஒவ்வொரு குழுவிற்கும் சரியாக வர்ணனைச் சொற்களைச் பயன்படுத்தத் தெரிகிறதா என்று கவனிப்பர்.

மதிப்பிடல்:

செயல்பாடு:1

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் மின்னட்டைகளில் ஒரு வண்ணத்தில் பெயர்ச்சொற்களையும் மற்ற வண்ணத்தில் வருணனைச் சொற்களையும் எழுதிச் தனித்தனியாக இரண்டு பெட்டிகளில் போடுதல், ஒவ்வொரு மாணவனாக முன்வந்து ஒரு பெட்டியில் பெயர்ச் சொற்களை எடுத்து அதற்குப் பொருத்தமான வருணனைச் சொற்களை மற்ற பெட்டியிலிருந்தும் தேர்வு செய்யுமாறு கூறுதல்.

உயரமான            ஒட்டகச்சிவிங்கி

கருமையான       காகம்

வட்டமான          வளையல்

அழகான               ரோஜா

செயல்பாடு: 2

ஆசிரியர் செயல்பாடு:

மாணவர்களிடம் பின்வரும் பாடல் எழுதப்பட்டதாளைக் கொடுத்து அதைக் கவனமாகப் படித்து அதிலுள்ள வருணனைச் சொற்களை அடிக்கோடிடுமாறு கூறுதல்.

சின்னச் சின்ன பந்து

சிறுமி ஆடும் பந்து

வண்ண வண்ண பந்து

 வானில் பாயும் பந்து

குட்டி கையால் தட்டினால்

குதித்து ஓடும் பந்து…

மதிப்பீடு: சரியாக அடிக்கோடிட்ட மாணவர்களைப் பாராட்டுதல். முழுமையாக பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு ஆசிரியர் பாடலைப் படித்துக் காண்பித்து அதிலுள்ள வருணனைச் சொற்கள் தெரிகிறதா என்பதை மதிப்பீடு செய்தல்.

செயல்பாடு: 3

“கூடி ஆடி மகிழ்வோம்” பாடலை மாணவர்களை தனித்து மற்றும் குழுவாகப் பாடச் செய்து மதிப்பிடல்.

Grade: 
3

Subject: 
Tamil

Term: Term 1