Towards a just, equitable, humane and sustainable society

கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு

0
No votes yet
0
Post a comment

தகவல் தொழில்நுட்பம், பாடத்தைக் காட்சிபடுத்திக் கற்பித்தலை எளிமையாக்குகிறது. மாணவர்களின் புரிதல் இதன் மூலம் சுலபமாகியிருக்கிறது. இன்றைய வகுப்புகளில், பயிற்சிக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒரு கருவியாக தொழில்நுட்பம் பயன்படுகிறது. மாணவர்களிடம் கற்றலுக்காகத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்டும்போது, அதை எதிர்காலத்தில் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் கல்விக்கான கருவியாகவும் பார்ப்பார்கள்.

இன்றைய அறிவியல் வளர்ச்சி கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை. இன்று கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.கற்பித்தலுக்கு கரும்பலகையையே நம்பி இருந்த காலம் மாறி, இன்று “Smart class” எனப்படும் கணினி வழிக்கல்வி முறைக்கு வந்துள்ளோம்.மாணவர்களும் கற்றலைச் சுமையாகக் கருதாமல் செயல்வழி கற்றல், செய்து கற்றல், விளையாட்டின் மூலம் கற்றல் என மகிழ்வுடன் கற்கின்றனர். இதற்கு பல்வேறு ஊடகங்களை ஆசிரியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

அவ்வகையில் ஆசிரியர் திரு.ஜேம்ஸ் குமாரும், நானும் மாணவர்களுக்கு 32 inch அளவு கொண்ட LED வண்ணத்திரை வாங்கினோம். அதை 1 மற்றும் 2 வகுப்புகளுக்கு பயன்படுத்தினோம்.

குறிப்பாக,

  • பாடத்தின் ஆரம்பத்தில், பொருளைக் காட்சிப்படுத்தல்.
  • கற்பித்தலின் இடையே, சில செய்திகளை வழங்குதல்.
  • பாடத்தின் இறுதியில், மதிப்பீடு (assessment) செய்தல் அவர்கள் பதில் சொல்ல ஆர்வத்தைத் தூண்டுகிறது.

1) மாணவர்களுக்குக் காட்சிப்படுத்தல் : ‘கூட்டல், கழித்தல் என்றால் என்ன?’ என்பதைக் காட்சிப்படுத்துதல் மாணவர்களைச் சிந்திக்க வைத்தது.

2) தகவல் வழங்க:

ஒருமுறை சொல்லும்போதே மனதில் நிற்கும் வகையான வீடியோக்களைத் தேர்வு செய்து காட்டினேன். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மிக எளிதாக கற்பித்தலும் கற்றலும் நிகழ்ந்தது. மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்வுடனும் கற்றனர்.

3) மதிப்பீடுகள் (assessment) செய்ய:

  • கணித application-கள் google  playstore-ல் பதிவிறக்கம் செய்து மாணவர்களை விளையாட வைத்தேன். இது assessment-க்கு ஒரு அருமையான கருவியாக இருந்தது.
  • மாணவர்கள் எதில் சிரமம் இருக்கிறது என்று எளிதாக காட்டிக்கொடுக்கிறது.

நான்காம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பாடத்தில் (அணையா விளக்கு)வரும் காமராசர் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதற்குப் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை வண்ணத்திரையில் காண்பித்தோம், மாணவர்கள் அனைவரும் உணர்ச்சி மிகுதியில் அழுதே விட்டனர்.

நாம் நடத்தும் வரலாற்று நிகழ்வுகள் வெறும் செய்தியாக இருப்பதைவிட உணர்வைத் தூண்டும் வீடியோவாக இருப்பது சிறந்தது என்பதை உணர்ந்தோம்.

1 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க, spelling game, ABC spelling, word cookies போன்ற application - களையும் பதிவிறக்கம் செய்து பாடம் கற்பிக்கப் பயன்படுத்தினோம்.

மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மாணவர்களை Apps-களை wireless mouse, keyboard  ஆகிவற்றைப் பயன்படுத்தி தங்களது கற்றலைத் தொடர்ந்தனர்.

இதை வகுப்பறையில் TLM ஆகப் பயன்படுத்தி வருவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

தொழில்நுட்ப உபயோகத்தின் நிறைகள்:

  • குழந்தைகள் விளையாடுவதை விரும்புவதால் நன்றாகக்  கவனிக்கிறார்கள் . கணித விளையாட்டுகளும் விதிவிலக்கல்ல.
  • கணிதத்தைப் பயன்படுத்த குழந்தைகள் வியப்போடும் எதிர்பார்ப்போடும் இருப்பார்கள் .
  • குழந்தைகள் கணிதத்தை நடைமுறை வாழ்க்கை திறமையாகக் காண்கிறார்கள், அவர்கள் படிக்க வேண்டிய பாடமாக அல்ல.
  • ஒரே நேரத்தில் வகுப்பில் மாணவர் அனைவரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு காணலாம்.
  • சின்ன வயதில் தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் Smart phone உபயோகிக்கும் போதும் பொழுதுபோக்கைத் தாண்டி அதை கற்றலுக்கான கருவியாகவும்  பார்ப்பார்கள் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.

சிக்கல்கள்:

கணித விளையாட்டை விளையாட நேரம் எடுக்கிறது

ஓர் ஆசிரியராக, கணித விளையாட்டைத் தேர்வு செய்வதா? அல்லது ஒரு பாடம் முடிக்க தீர்மானிப்பதா? என்று கேட்டால், நிறைய ஆசிரியர்கள் தீர்மானிப்பது பாடம் முடிப்பதைத் தான். இந்த பள்ளி ஆண்டின் கணிதப் புத்தகத்தை முடிக்க வேண்டும், இல்லையா?ஆனால் குழந்தைகளை மையப்படுத்திய கற்றலில் (child-centered learning), குழந்தைகளின் திறமைகளை மெருகிட உதவி செய்யவேண்டும். தேர்வுக்குப் பதிலாய் குழந்தையின் (திறமையின்) தேர்ச்சிக்குப் பங்களிப்பதையும்  முக்கியமாகக் கருத்துக்கள். ஏன் பாடத்தை முடிப்பது என் கடமையாக இருந்தாலும், என் குழந்தைகள் ஒரு பாடத்தில்  மாஸ்டர் ஆகிவிட்டார்கள் என்று சொல்வதை என் முக்கியக் கடமையாகப் பார்க்கிறேன்.

ஆசிரியரின் பங்களிப்பு:

வாரத்தில் எத்தனை முறை உபயோகிக்கலாம் என்பதை ஆசிரியர் கவனமாகத் தீர்மானிக்க வேண்டும், ஏனென்றால் வகுப்பில் ஆசிரியரின் பங்களிப்பை ஒரு டிவி முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது என்பது நமக்குத் தெரிந்தது. காட்சிப்படுத்தும் போதும் நாம் கூடவே இருப்பதும் அவசியம்.

Teacher: சபரிநாதன்., தொ.ப.ஆ, அ.தொ.ப. அரங்கனூர்

Subject: 
Upper Primary Maths

Term: Term 3

0
No votes yet
0
Post a comment