Towards a just, equitable, humane and sustainable society

கற்றலுக்கு ஏதுவான களப்பயணம்

0
No votes yet
0
Post a comment

அரசு மேல்நிலைப் பள்ளி, சேதராப்பட்டு.

களப்பயணத்தின் நோக்கம்:

மாணவர்களுக்கு வகுப்பறை ஒன்று மட்டுமே கற்றலுக்கான இடம் அல்ல. எந்த ஒரு பாடப்பொருளையும் ஏட்டுக் கல்வியாக மட்டுமே கற்பித்தால், மாணவர்கள் பள்ளித் தேர்வில்  மட்டுமே தேர்ச்சி அடைய இயலும். ஆனால், அதையே களப்பயணமாக அன்றாட வாழ்வோடு தொடர்புப்படுத்தி வாழ்வின் உயிர் வளத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அறியச்செய்தால் மாணவர்கள் அனைத்தையும் உணர்ந்து கற்றுக் கொண்டு வாழ்வின் அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி அடைவார்கள்.

ஆரண்யா காடு மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது. மனிதர்களின்  முறையற்ற செயல்களால் அழிவின் விளிம்பிற்குச் சென்று கொண்டிருக்கும் காடுகளை, மனிதர்களின் முயற்சியாலேயே உருவாக்கவும், புதுப்பிக்கவும் முடியும் என்பதை மாணவர்களை உணரச்செய்யவே இக்களப்பயணம்.

திட்டமிடல் மற்றும் தயார்ப்படுத்துதல்:

திட்டமிடாத களப்பயணம் ஒரு இன்பச்சுற்றுலாவாக மட்டும் அமைய வாய்ப்புள்ளது.எனவே, மாணவர்கள் கற்பதற்கான உரிய மனநிலைக்கு உற்சாகத்துடன் தயார் செய்ய சுவாரஸ்யமான கேள்விகள் கொடுக்கப்பட்டன .

தங்களுடைய சுற்றுச்சூழலைப் பற்றித்  தெரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் அவர்களைச் சிந்திக்க வைக்கும் விதமாக

  • உங்கள் வீட்டில் பாம்பு அல்லது பூரானைப் பார்த்தால் என்ன  செய்வீர்கள்?
  • தேனீக்கள் அழிக்கப்பட்டால் மனித இனம் அழிய வாய்ப்புள்ளதா?

போன்ற கேள்விகளும், அரிய வகை மரம் மற்றும் பறவை இனங்களை அறியச் செய்யும்  விதமாக

  • கடினமான மரங்களாகக் கருதப்படும் மரங்கள் யாவை?
  • வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புறாக்கள் யாவை?

போன்ற பல கேள்விகளின் விடையாக மாணவர்கள் கண்டறிந்தவற்றை ஒரு கட்டுரை வாயிலாக வெளிப்படுத்த அறிவுறுத்தினோம்.

அடைவுகள்:

இதன் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டவை,

  • தங்கள் இருப்பிடத்தின் சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து, பண்படுத்த என்னென்ன செயல்களைக்  கடைப்பிடிக்க வேண்டுமென்று கற்றுக்கொண்டார்கள்.
  • அனைத்து உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும் மற்றும் உயிர்களின் பல்வகைத் தன்மையைக் காப்பதன் அவசியத்தையும் புரிந்து கொண்டார்கள்.
  • முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விவாதங்களின்  மூலம் மாணவர்களின் புரிதல் மேம்பட்டது.
  • அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை  அறிவியல் கண்ணோட்டத்தில் காணத் துவங்கினார்கள்

வருங்காலத் திட்டம்:

  • சூழ்நிலையியல் பாடத்திற்கு உள்ளூர் சுற்றுச்சூழலைத் தொடர்புபடுத்திக் கற்பிப்பது என முடிவு செய்தேன்.
  • அறிவியல் பாடத்தினை மொழி, சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களோடு தொடர்புப்படுத்திக் கற்பிப்பது  கற்றலை மேம்படுத்தும் என்பதால்  இனி வரும் நாட்களில் அறிவியலைப் பிற பாடங்களோடு இணைத்துக் கற்பிக்க முயற்சிக்கப் போகிறேன்.

Teacher: Anitha and Santanalakshmi

Subject: 
Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment