Towards a just, equitable, humane and sustainable society

இன்றைய காந்திகள்

0
No votes yet
0
Post a comment

காந்தியைப் பற்றிய மீனாட்சி அவர்களின் கதை மற்றும் பாடல் குறித்த காணொளியைப்  பார்த்த பின்,

அனந்தநாயகி, தலைமையாசிரியை:

எங்கள் பள்ளியிலும் இந்த காணொளியைக் கண்டோம். ஒரு மாணவன் காந்தியின் காணொளியில் நீல நிறத்திக்குப் பதிலாக மஞ்சள் நிறத்தை பயன்படுத்தலாம் என்றான். ஆசிரியர் ஒருவர் அந்தக் காணொ ளியில் ஒரு ‘அலங்காரமான’ என்ற வார்த்தை குழந்தைகளுக்கு அறிமுகமில்லாது இருக்கலாம் என்றதோடு ஒரு விரிவுரையும் தேவை என்று பரிந்துரைத்தார்.  எங்கள் பள்ளியில் ..... போது காந்தி 150 பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து, காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த அட்டைப் படங்களை மாணவர்கள் அரித்ததோடு மட்டுமில்லாமல், பெற்றோர்களும் கண்டு வியப்புற்றனன்ர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக.

 

பத்து துறைகளில் பல்வேறு தரப்பட்ட மனிதர்களிடம் காந்தியக் கொள்கைகள் பலதரப்பட்ட கோணங்களில் ஒளிந்திருப்பதை இப்புத்தகம் எனக்கு வெளிப்படுத்தியது. அவர்கள் யாவரும் காந்தியின் உறவினரோ சமகாலத்தவரோ அல்லர். காந்தியியம் என்பது அனைத்து மக்களுக்கான, மற்றவர்களை துன்புறுத்தாத வாழ்வியல். மனிதர்கள் அவ்வாறு வாழும் பொழுது  அவர்களே காந்தியாகவும் மாறுகிறார்கள் என்பது இப்புத்தகத்தின் ஆசிரியரின் (பாலசுப்ரமணியம் முத்துசாமி) உரை. காந்திஜியை டெல்லிக்கு சுதந்திர தின  கொண்டாட்டத்திற்காக அழைக்க, காந்தியோ இங்கு(கல்கத்தாவில்) இந்து-முஸ்லீம் சண்டை போட்டு கொண்டிருக்க அவருக்கோ கொண்டாட்டங்களில் இடம்பெற  மனமில்லை என்றார்.

 

வர்கீஸ் குரியன்: அமுல் (Anand Milk Union Limited) நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பில் பதவி வகிக்கும் போது, கிராமப்புற விவசாயிகள் குறிப்பாக பால் வியாபாரிகள் மற்றும் அவர்களின் குடும்பம் பயன்பெற, அவர்களிடமே நேரடியாகக் கொள்முதல் செய்ய சங்கங்கள் எற்படுத்த அறிவுரைப் படுத்தினார். அவரும்  கிராமப்புற மேம்பாட்டை முன்னெடுப்பதுனாலே அவரும் காந்தியே! 

லட்சுமி சந்த் ஜெயின்:  விடுதலைப் போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவரும் ஆவார். அகதிகள் போராட்டம் செய்யும் பொழுது மக்கள் அவர்களை வெளியேற்ற பரிந்துரைத்த பொழுது, அவர்களும் நம் குழந்தைகளே என்று கூறி காத்தவரும் இவரே. இந்தியாவின் முதல் பெரும் சில்லறை அங்காடியை ஏற்படுத்த பரிந்துரைத்தவரும் இவரே. அதிகாரங்களை மக்களிடமே அளித்தலே மனிதர்களை மேம்படுத்தும் செயலாகும் என்று உறுதியாக நம்பினார்.

பங்கர் ராய்: ஐ.ஏ.ஸ். போன்ற பெரிய படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அவர் கிராமங்களில் தங்கி சேவை செய்தார். இராஜஸ்தானில் பெண்கள் இரு பெரும் விஷயங்களை வாழ்க்கையை செலவு செய்தனர். ஒன்று நீர், மற்றொன்று விறகு. இவ்விரண்டும் கிடைக்காத கிராமம் ஒன்றில் வெறும்பாதக் கல்லூரி(Barefoot College) ஒன்றை நிறுவினார்.  இக்கல்லூரி சூரிய ஒளிசக்தி, நீர், கல்வி, சுகாதாரம், கைவினைப் பொருட்கள் எனப் பலதலங்களில் பணிபுரிய, 81 நாடுகளில் இருந்து  இக்கல்லூரியை நோக்கி படையெடுத்து வந்தனர். இக்கல்லூரியானது கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்க முன்னுராதனம் என்று கூறலாம்.

 ஆசிரியர்.ராஜேஷ்  

அரவிந்த் கண் மருத்துவக் குழுமம்: கண் அறுவை சிகிச்சைகாக ஒரு லென்ஸின் விலை 140ல் தயாரித்தது இந்நிறுவனம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் 1000 ரூபாய்க்கும் மேல். ஏழை மக்களுக்களில்  பெரும்பாலானோர் கண் பாதிப்புற்றுள்ளனர் என்பதை உணர்ந்த பின்னர், சரி செய்ய முயற்சித்த தேடலே பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் பயனளிக்கிறது இந்த லென்ஸ் தயாரிப்பினால்.

இலா பட்: இந்தியாவிலுள்ள தொழிலாளர்களில் 92% பேர், முறைசாரா தொழில்களில் பணிபுரிபவர்கள். இதில் பணிபுரியும் தொழிலாளர்களில் குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர ‘சேவா’ என்னும் நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு, பெண் உறுப்பினர்களுக்கான நிலையான வருமானம், மருத்துவ வசதி, குழந்தை நலம் போன்றவற்றிற்காக பாடுபட்டது.   

அபே பேங்க்: இன்றியமையாத தேவைகளுள் ஒன்று சுகாதாரம். சுகாதாரமற்ற அவர்களது வாழ்வியல், மரணத்திற்கு  காரணமானதை உணர்ந்த அபே, கட்சிரோலி  (மஹாராஷ்டிரா) என்ற பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில்  அவர்களுடன் தங்கி அவர்களுக்கு சேவை புரியத் தொடங்கினார். பேங் ஒரு எளிய ஆனால் தீவிரமான தீர்வைக் கண்டுபிடித்தார். கிராமப்புற பெண்களுக்கு குழந்தை பிறந்த பராமரிப்பில் பயிற்சி என்பதே அது. பேங்கின் கட்சிரோலி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் 800,000 கிராமப் பெண்களுக்கு இப்போது ஆஷா திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

இந்த காந்தியர்களைப் போலவே மேலும் நான்கு காந்தியர்களைப் பற்றி இப்புத்தகம் எடுத்தியம்புகிறது. இப்புத்தக வாசிப்பினால் நெகிழ்வுற எங்களுடைய கல்வி வள மையத்தைத்(ERC) தொடர்பு கொள்ளவும்.

இன்றைய காந்திகள்-புத்தக திறனாய்வு

புத்தக திறனாய்வு செய்தோர்:

1)அனந்தநாயகி, தலைமையாசிரியை,

அ.தொ.ப, நைனார்மண்டபம்.

2)இராஜேஷ், தொ.ப.ஆ,

அ.தொ.ப, கொடாத்தூர்.

Grade: 
Pre-Primary, 1, 2, 3, 4, 5, 6, 7, 8

Term:

Subject: 
English, EVS, Primary Maths, Science, Social Science, Tamil

0
No votes yet
0
Post a comment