Towards a just, equitable, humane and sustainable society

ஆசிரியரின் அணுகுமுறை – மாணவர்களின் ஊக்கம், கற்றலின் மேம்பாடு பற்றிய ஓர் ஆய்வு

0
No votes yet
0
Post a comment

பொருள்: எமது பள்ளியில் 7- ஆம் வகுப்பு மாணவிகளின் மேம்பாடு குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை பாவித்து.

ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் நுழையும் பொழுது 4 அல்லது 5 மாணவிகள் மேசை அருகில் அவர்களுக்குரிய பிரச்சனைகளோடு நிற்பர். அதில் சொந்தப்  பிரச்சினை, வகுப்பறை, குடும்பப் பிரச்சினை ,  எம் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களுடன் பிரச்சினை என நிறைய பிரச்சனைகளைக் கூறுவார்கள். அப்பொழுது தான் எனக்குப்  புரிந்தது. ‘நாம் ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு அன்னையாகவும் செயல்பட்டால் வகுப்பில் பல மாற்றங்களைக் கொண்டுவர முடியும்’ என்பதே அது .

இவை அனைத்தையும் சரி செய்து ஓரளவு சமாளித்துப் பாடம் ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கேட்கும் கேள்விகள் என்னைத் திணறடிக்கச் செய்யும். ஆனால், அவர்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறினாலே பாடம் எளிதாக முடிந்துவிடும் என்ற தெளிவையும் எனக்களித்தது.

  1. எ.டு : சுவாசித்தல் பாடத்தில் நட்சத்திர மீன் starfish எப்படி சுவாசிக்கும்? மற்றும் ஊர்வன, மரவட்டை, கரப்பான்பூச்சி என எல்லா விலங்குகளைப் பற்றிய கேள்விகளும் ஓர் அலசலில்.
  2. மனிதன் சுவாசிக்கும் பொழுது O2வை  மட்டும் வளிமண்டலத்தில் இருந்து  பிரித்து சுவாசிக்கிறான். புகை மற்றும் தூசிகளை அவனால் வடிகட்டிச்  சுவாசிக்க முடியாதா? ஏன்?

இப்படி இன்னும் பல...

எனவே,அவர்களின் கேள்விக்குப் பின்னால் உள்ள கருத்துக்களோடு அதற்கான செயல் விளக்கங்களையும்  இணையதளத் தேடல் மூலம் கண்டறிந்து முடிந்தவரை செயல் விளக்கங்களாகப்  பாடம் நடத்தியதால் அவர்களுக்கு எளிய முறையில் என்னால் புரிய வைக்க முடிந்தது.

ஒரு வகுப்பறையில் ஒரு செயல் செய்வதே அதிகம். இருந்தாலும் பல செயல்முறைகளை வகுப்பில் பயன்படுத்திய பொழுது   அவர்களிடம் ஆர்வம் காணப்பட்டது. இதன் மூலம்  90% மாணவிகளிடம் ஈடுபாடு அதிகரித்ததைப் பார்க்க முடிந்தது.

பாடம் நடத்தும் போதோ (அ ) இடையிலோ ஏதோ ஓர் சந்தர்ப்பத்தில், தினமும் நடக்கும், பார்க்கும் அறிவியல் நிகழ்ச்சி, சாதனைகளை மாணவிகளிடம் விவரிப்பேன்

எ.டு – K.R. Sridhar ( Bloom energy) அவர்களின் இயற்கை மின் உற்பத்தி சாதனம் பற்றிக் கூறினேன்.

கற்றலில் உள்ள இடைவெளியைச் சரி செய்தல்:

மாணவர்களுக்குக் கற்றலில் உள்ள இடைவெளியைச் சரி செய்ய  தினமும் நடத்தியப் பாடத்தைப் படிக்க உற்சாகப்படுதினேன். அப்பொழுது அவர்களுக்குப்  பொருள்  தெரியாத வார்த்தைகளுக்கு அகராதி பார்த்துப் பொருள் எழுதக் கூறினேன்.

மாணவர்களிடம் ஆங்கிலம் வாசித்தல், மற்றும் எழுதுதலில் குறைகள் இருந்தன. அதைச் சரி செய்ய  வகுப்பில் ஆசிரியர் இல்லாத பொழுது நன்றாக படிக்கும் மாணவர்களைக் கொண்டு, ஏற்கனவே நடத்திய பாடத்தைப் பிறமாணவர்களைப் படிக்க வைத்ததன் மூலம் 90% மாணவர்கள் ஆங்கிலம் படிக்கின்றனர். இது நான் என் வகுப்பில் சோதித்துக் கண்டறிந்த உண்மையாகும்.

அடைவுகள்:

    மாணவர்களுடன் ஆசிரியராக மட்டுமல்லாமல், அன்னையாகவும் பழகியதால் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஆசிரியரிடம் வந்து கூறினால்  நம்முடைய  பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை மாணவர்களிடையே ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதோடு நல்ல முன்னேற்றமும் அடைந்தார்கள்.

அனைத்து மாணவ-மாணவிகளிடமும் இது போன்ற தாய்-சேய் உறவுமுறையைப் பேணுவதன் மூலம் அவர்களைக்  கல்வியில் மட்டுமல்லாது வாழ்விலும் முன்னேற்றலாம் என்பது நான் என் சொந்த ஆசிரியப்பணி அனுபவத்தில் கண்ட உண்மை.

Author: R.Jamuna, TGT TPGGHSS,Ariyankuppam,

Grade: 
7

Subject: 
Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment