Towards a just, equitable, humane and sustainable society

வகுப்பறை மாற்றம்

0
No votes yet
0
Post a comment

Insights:

  • மூன்றாம் வகுப்பில் பிற  பள்ளிச்சூழலில் இருந்து  வரும்  மாணவர்களைக் கற்றலில் ஒருங்கிணைக்கும்  உத்திகள் .
  • குழுவழிக் கற்றல் முறையில் அதிக அளவில் குழந்தைகள் வேகமாகவும்  செம்மையாகவும்  கற்றுக் கொள்கின்றனர்.
  • குழுச்செயல்பாட்டின் மூலம் அனைத்துத் தர மாணவர்களும் கற்றல் கற்பித்தலில் ஒருங்கிணைந்து மேம்படுதல்.

என் பெயர் ஈஸ்வரி நான் தர்மாபுரி அரசு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். இது நகர்ப்புறம் சார்ந்த பள்ளியாகும். ஒரு ஆசிரியராக மாணவர்களுடைய கற்றல் நிகழ்வுகளின் மீதும் அவர்களுடைய ஒழுக்கம் சார்ந்த விஷயங்களின் மீதும் பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்வது என்னுடைய பண்பாகும்.

எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகஇருந்தது. இவ்வாண்டின் துவக்கத்தில் தனியார் பள்ளியிலிருந்த (கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் என்று பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள்) பிற மாநிலத்திலிருந்தும்  மாணவர்கள் மூன்றாம் வகுப்பில் சேர்ந்தனர். எனவே, வகுப்பில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.   இந்தக் குறைபாடுகளைக் களைய எனக்குத் தெரிந்த பல முயற்சிகளை மேற்கொண்டேன். புதிய மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் பயின்று வந்திருப்பதால் இந்தப்பாடத்திட்ட முறையை அவர்களுக்குக் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதில் கற்பித்தலில் மாற்றம் ஏற்படுத்த  சிலமுயற்சிகளை மேற்கொண்டேன்.

நான் கற்றுக் கொண்டவை

கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் நன்குப் படிக்கத் தெரிந்த மாணவிகளேஆர்முடன் பங்கேற்றார்கள். மற்றவர்கள் தொய்வுடன் தனித்தே இருந்தனர். இந்த நிலையில் படிக்க முடிந்த  மாணவர்களையும் பின் தங்கிய  மாணவர்களையும் குழுவாக இணைத்ந்து கற்க  வழி செய்தேன். இந்த உத்தியின் மூலமாக  மாணவர்கள் திறன் மேம்பட்டது.மெல்லகற்கும் மாணவர்களும் கற்றலில் தானாகவே முன்வந்து பங்குபெற ஆரம்பித்தனர். குறிப்பாகக் கற்றலில் குறைபாடு உடைய மாணவர்ளே இந்தக் குழுக்கற்றல அதிக ஆர்வத்துடன்  பங்கேற்றனர். இதனை உற்று நோக்கிய நான் பெரும்பாலான  பாடங்களுக்கு இந்த முறையைப் பின்பற்றினேன், மேலும், மொழிப்பாடத்துடன் மனிதம், சூழ்நிலையியல் ஆகியவற்றை கற்பிக்கும் போது அனைத்துத்தர மாணவர்களும் முன்னேறியது , எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியது.

இவ்வாறு அனைத்து மாணவர்களும் குழுக்கற்றலில்பங்குபெறுவதோடு, அவர்களது தனித்துவமான கற்பனைத்திறனையும், ஓவியம் வரையும் திறனையும் வெளிப்படுத்தினர். இப்போது என் வகுப்பில் பெருவாரியான கற்றல் – கற்பித்தல் துணைக்கருவிகளை மாணவர்ளே செய்கின்றனர். க    தை, கவிதை போன்ற படைப்பாற்றல் திறன்களை  அவர்கள் வெளிப்படுத்தும் போதும்  ஓர் ஆசிரியராக எனக்கு பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. பாடப்புத்தகத்தில் இருக்கிற கதைகளுக்குமாணவர்கள் தாங்களாகவே உருவாக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் துணைக்கருவிகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதை நேரில் கண்கூடாய் உணர்ந்தேன்.

                        

படம்1 தாங்களாகவே கதாப்பாத்திரங்களைச் செய்யும் மாணவர்கள்.

முடிவுரை:

மாணவர்கள் பல்வேறு  கடினமான சூழல்களிலிருந்து வகுப்பறைக்கு நுழைகின்றனர். பொருளாதாரச்சூழலும், வாழ்க்கைச்சூழலும் அவர்களுக்குப் பெரிய இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவதும், தினசரி அவர்களின் வாழ்க்கையும் போராட்டமாகவே இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் தருகின்ற அன்பும், அரவணைப்பும், அக்கறையும் தாண்டிய பற்றும், பரிவுமே வழிகாட்டியாக இருக்கும். ஆரம்ப வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இவ்வகையான முயற்சிகளைச் செய்வதன் மூலம் மாணவர்களின் கற்றல் மேலும் சிறப்படையும்.

Author: Eswari

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment