Towards a just, equitable, humane and sustainable society

இரு மொழிகளையும் இணைத்துக் கற்பித்தல்

0
No votes yet
0
Post a comment

நோக்கம்:

மாணவர்கள் தாய்மொழியில் தங்கு தடையின்றி எழுதப் படிக்கவும், ஆங்கிலத்தில் எளிய வாக்கியங்களை எழுதப்படிக்கவும் தெரிந்திருத்தல் நலம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

திட்டம்:

எழுத்துக்கள், சொற்கள், சொற்களை வகைப்படுத்துதல் (kinds of words) ஒருமை பன்மை, காலங்கள், வினா வார்த்தைகள், வாக்கிய வகைகள் மற்றும் நிறுத்தற்குறியீடுகள் போன்றவற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கற்பித்து இரு மொழிகளையும் இணைத்துக் கற்பிக்கத் திட்டம் தீட்டினேன்.

வகுப்பறைச் செயல்பாடுகள்:

தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தி உயிர், மெய், உயிர்மெய் என்று வகைப்படுத்தி பின்பு ஆங்கில எழுத்துக்களுடன் தொடர்புப்படுத்திக் கற்பித்தேன் எ.கா. உ, வு – U. எளிய ஈரெழுத்து வார்த்தைகளை அறிமுகப்படுத்தினேன் ( எ.கா. ஆண், ஊண், காண் & Ban, Pan, Can).

எதிர்ச்சொல் மூலம் வார்த்தைகளை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளித்தேன் ( எ.கா. Big* Small - பெரிய*சிறிய)

சைகைகளின் மூலம் இரு மொழிகளிலும் Action Words - ஐ பட அட்டைகளின் மூலம் பெயர்ச் சொல்லுக்காகப் பயிற்சியளித்தேன். பின்பு சொற்றொடர் பயிற்சி அளித்தேன் ( எ.கா:  A Big Cat – ஒரு பெரிய பூனை).

காலங்கள் – தமிழில் வினைச்சொல்லுடன் சேர்த்தும், ஆங்கிலத்தில் is, Was, has, had எனப் பயன்படுத்தி அறிமுகப்படுத்தினேன்.

வாக்கிய அட்டைகள் மூலம் சிறிய வாக்கியங்களைப் பயிற்சி அளித்தேன்  (எ.கா. I am Eating – நான் சாப்பிடுகிறேன்).

‘நான் – எனபதற்குப் பதிலாக மற்றொருவரை அழைக்க நீ, அவன், அவள், பெயர் என்பது போல ஆங்கிலத்தில் மற்றொருவரை அழைக்க he, she, it & name பயன்படுத்தலாம் என்று பயிற்சி அளித்தேன்.

செயல்பாடுகள்:

மாணவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், எழுத்துகளை அடையாளங்காண இரண்டு மொழிகளிலும் எழுத்து அட்டைகளைத் தயார் செய்தேன். அவற்றைக் கொண்டு பலமுறை பல பயிற்சிகள் செய்தோம்.

ன, ண, ந, ர, ற, ல, ள பயன்படும் இடங்கள் பற்றிப் பயிற்சி அளித்தேன்.

வு, உ, யி, இ,  ஊ, யெ, எ, யே, ஏ, வொ, ஒ, வொ, ஓ பற்றியும் பயிற்சி அளித்தேன்.

தமிழில் உயிர் எழுத்தெல்லாம் விளையாடிக்கொண்டிருந்தன. மெய் எழுத்துகள் எல்லாம் அமைதியாய் இருந்தன. ‘ஏன் எனக்கு உயிர் இல்லை?’ என்று மெய் எழுத்துகள் கேட்டன. ‘நீ கவலைப்படாதே , நாங்கள் உங்களுக்கு உயிர் தருகிறோம் என்று  கூறின உயிர் எழுத்துக்கள்’ - என்று உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகும் விதத்திற்கு  ஒரு கதையை உருவாக்கினேன்.

216 எழுத்துகள் உருவாகும் விதம் பற்றிக் கூறினேன். எழுத்துகளுக்குப்பின் இரண்டெழுத்து வார்த்தைகள் நிறைய படித்தல், எழுதுதல் பயிற்சி அளித்தேன்.

உதாரணம்:

ஆண்    கண்        அரி    பரி    சிரி    பொரி

ஊண்    நாண்    உரி    மரி    திரி    கோரி

உண்        நுண்        எரி    வரி    பிரி

எண்        புண்        ஏரி    காரி    விரி

கண்        தூண்    ஓரி    பாரி    கீரி    

தண்        பெண்    சரி    மாரி    சூரி

பண்        மண்        நரி    கிரி    பூரி

வார்த்தைகள் நிறைய தெரிந்தன. எழுதப் படிக்க எனத் தொடர்புள்ள பயிற்சிகள் கொடுத்தேன்.

க    கா

ங    ஙா

எனப் படிக்கும் போது மாணவர்களுக்குக் குறில், நெடில் ஓசை வேறுபாடு தெரிந்தது.

ஆங்கிலத்தில் Names of the letters, sounds of the letters, vowels and consonant பற்றி விளக்கினேன். பல வார்த்தைகளுக்குப் பயிற்சி அளித்தேன்.

Ban        Man    Tan

Can        Pan

Fan        Ran

சைகை செய்தலின் மூலம் Action Words இரு மொழிகளில் (தனித்தனியாகப்) பயிற்சி அளித்தேன். பட அட்டைகள் மூலம் பெயர்ச்சொல் பயிற்சி அளித்தேன்.

பின்பு சொற்றொடர் பயிற்சி அளித்தேன்.

A  Big Cat        ஒரு பெரிய பூனை

A  Small Cat        ஒரு சிறிய பூனை

A Tall Cat        ஒரு உயரமான பூனை

A Short Cat        ஒரு குள்ளமான பூனை

A Fat Cat        ஒரு குண்டான பூனை

A Thin Cat        ஒரு ஒல்லியான பூனை

Letters Words and Types of sentences முடிந்தவுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் Tenses அறிமுகப்படுத்தினேன்.

Present Tense    Past Tense

Is, am            was

are            were

has, have          had

will            would

be, being        been

தமிழில் வினைச்சொல்லுடன் சேர்ந்தே  காலம் தனியே வருவதில்லை என எடுத்துரைத்தேன். Sentence Cards மூலம் வாக்கியங்கள் எழுதப்பயிற்சி அளித்தேன்.

நான் சாப்பிடுகிறேன்        I am Eating

நான் எழுதுகிறேன்            I am writing

விருப்பமும், முயற்சியும் இருந்தால் நாம் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்ற புரிதல் வந்தது.

இரு மொழிகளை இணைத்ததின் பயன்கள்:

மாணவர்கள் இரு மொழிகளையும் எளிதாய் கற்றுக்கொண்டனர். மாணவர்களிடம் மொழி பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. நாம் அதிகரிக்க வேண்டியது கற்றல் ஆர்வத்தையே தவிர, கற்றல் சுமைகளை அல்ல. விருப்பமும், முயற்சியும் இருந்தால் நாம் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம் என்ற புரிதல் வந்தது.

Author: சுகுணா, அ.தொ.ப, அ.தொ.ப, பங்கூர்.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment