Towards a just, equitable, humane and sustainable society

பனைமரச் சிறப்பு

பாடத்திட்ட வழிகாட்டி : 'பனைமரச் சிறப்பு’ - ஆசிரியருக்கான பாடத்திட்ட வழிகாட்டியானது பனைமரத்தின் பல்வேறு சிறப்புகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில்   எளிய முறையில், பனைமரப் பொருட்கள் மற்றும் பனைமரப் பறவைகளின் படங்களின் உதவியுடன், ஆசிரியர் -மாணவர் உரையாடலை செறிவுடையதாக்கி மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்திப் பாடநோக்கங்களை அடையச்செய்ய வழிகாட்டுகிறது. (TA5121)
செயல்திட்ட நடவடிக்கை - 1 - கைவினைப் பொருள்கள் செய்தல்: பனைஓலை மற்றும் பனைப்பொருள்களைக் கொண்டு கைவினைப் பொருள்களை செய்தல். (TA5122)
செயல்திட்ட நடவடிக்கை -2 - புத்தகம் எழுதுதல் வாசித்தல்: மாணவர்களை அருகமை மரங்களை உற்றுநோக்க வைத்து மரங்களையும் அவற்றின் பாகங்களையும் வரைந்து அவற்றிற்குரிய பெயர்களோடு  எழுதி வரச் சொல்லுதல். எழுதிய தாள்களைத் தொகுத்துப் புத்தகம் தயார் செய்தல். (TA5123)
செயல்திட்ட நடவடிக்கை - 3  - கள வழிக் கற்றல்: பனைமரம் மற்றும் பனைசார் பொருட்களைப் பற்றி  நேரடியாக அறிந்துகொள்ளும் வண்ணம் மாணவர்களை பனைசார் களங்களுக்கு அழைத்துச் செல்லல்/செல்லவைத்தல்.  (TA5124)
செயல்திட்ட நடவடிக்கை – 4 - பனை மரப்பாடல்கள் : பனைமரத்தின் பாகங்களையும் பயன்களையும் விளக்கும் 3 பனைமரப் பாடல்களை இசையோடு சேர்த்து மாணவர்களைப் பாடவைத்தல். (TA5126)
கூடுதல்  வளம் : புதுச்சேரி மாநில அரசின் சின்னங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.  (TA5125)

Grade: 
4

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy