Towards a just, equitable, humane and sustainable society

விரலோடு விளையாடு

வகுப்பு – 1 பாடம் -2

விரலோடு விளையாடு

நோக்கம்: 

முதலாம் வகுப்பில் உள்ள ‘விரலோடு விளையாடு’ என்ற பாடம் மாணவர்களின் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் விதமாக அமைந்துள்ளது. குழந்தைகளின் எழுதுதல் திறனை வளர்த்தல், தங்களைச் சுற்றி உள்ள பொருள்களை உற்று நோக்கி, ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்தறிதல் மற்றும் வரிசைப்படுத்துதல் திறனை வளர்த்தல் ஆகிய நோக்கங்களை மாணவர்கள் அடையத் துணைபுரியும் வகையில் பாடபுத்தகத்தைக் கடந்து சில வகுப்பறைச் செயல்பாடுகளும் கற்றல்-கற்பித்தல் வளங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நினைவுகூறல்: கடந்த பாடத்தை நினைவுபடுத்தக் கீழ்க்காணும் வீடியோக்களைக் காட்டி, வகுப்பறை விவாதங்களைத் திட்டமிடலாம்.

https://www.youtube.com/watch?v=iDCz97gUqKs 

https://www.youtube.com/watch?v=nJbd1rPVE8w

பாடல்: ஆசிரியர் பாடபுத்தகத்தில் உள்ள பாடலைத் தக்க உடலசைவுகளோடும் உச்சரிப்போடும் பாடி மாணவர்களைப் பாடச்செய்தல்

வேறுபட்டதைக் கண்டுபிடித்தல்: மாணவர்கள் பொருட்களை வேறுபடுத்திப்பார்க்கும் வகையில் வகுப்பறை விளையாட்டுகளும் பயிற்சித்தாள்களும் கொடுக்கப்பட்டுள்ளது

நிகழ்வுகளை வரிசைப்படுத்துதல்: வரிசைப்படுத்துதல் திறன் என்பது மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கான வகுப்பறைச் செயல்பாடு கொடுக்கப்பட்டுள்ளது

எழுதுதலுக்குத் தயார் செய்தல்: மாணவர்களை எழுதுவதற்குத் தயார் செய்யும் வகையில் பல விளையாட்டுகளும் விளக்கங்களும் வீடியோக்களும் உள்ளன.

https://www.youtube.com/watch?v=efKYPm7xaMk

https://www.youtube.com/watch?v=sTiKcWE6ndI

https://www.youtube.com/watch?v=p__ZRdYXRXk

https://www.youtube.com/watch?v=3NkrCBtNv6w

https://www.youtube.com/watch?v=WzkU-_kgpvo

ஆசிரியர் குறிப்பு: வகுப்பறைச் செயல்பாடுகள், மொழி விளையாட்டுகள், துணைகருவிகள் போன்றவற்றிற்கான விளக்கங்களும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளும் இக்குறிப்பில் உள்ளன.

Grade: 
1

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy