Towards a just, equitable, humane and sustainable society

 சொல்லாதே சொல்லாதே 

வகுப்பு – 2 பாடம் -2

 சொல்லாதே சொல்லாதே 

 நோக்கம்: 

இரண்டாம் வகுப்பில் உள்ள ‘சொல்லாதே சொல்லாதே’ என்ற பாடம் மாணவர்களின் ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் விதமாக அமைந்துள்ளது. குழந்தைகளின் எழுதுதல் திறனை வளர்க்கும் விதமாக, பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்தாக, மாணவர்கள் தங்களைச் சுற்றி உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் பண்புகள் அல்லது பயன்பாடுகளை ஆராய்ந்தறியும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

கலந்துரையாடல்: 

பறவைகள், விலங்குகள் மற்றும் குழந்தைகளைப் பற்றிப் பேச வைப்பதற்காகக் காடு, வானம் மற்றும் பள்ளி பற்றிய பொதுவான உரையாடலை ஆசிரியர் தொடங்கலாம். இதன் வழி பறவைகளுக்கு வானம் எவ்வளவு தூரமாக உள்ளது என்பதையும் விலங்குகளுக்கு காடு எவ்வளவு இருளாக உள்ளது என்பதையும் பற்றிப் உரையாடலாம். 

படங்களுடன் பெயரைப் பொருத்துதல்: (TA5117) மாணவர்களிடம் அவர்கள் பார்த்துள்ள விலங்குகளைப் 

பற்றியும்  அவைகளின் தனித்திறன்களைப் பற்றியும் உரையாடலாம். பின்பு பயிற்சித் தாள்களைக் கொடுத்து விலங்குகளின் பெயர்களை அதற்குரிய படங்களுடன் 

பொருத்தச் செய்தல்.

பாடல்: (TA5116)

‘சொல்லாதே சொல்லாதே’ பாடலை ஆசிரியர் முதலில் பாடிவிட்டு மாணவர்களைப் பாடச்செய்யலாம். அதன்பிறகு பிறவிலங்குகளைப் பற்றிய ஒரு காணொளியை மாணவர்களுக்குக் காண்பிக்கலாம்.  

https://www.youtube.com/watch?v=Sz8lEgGk0LE

https://www.youtube.com/watch?v=PZ0cB7f1gy8

 

கதை கூறல்: (TA5109 - TA5115) மாணவர்கள் தங்களது சொல்வளத்தை மேம்படுத்திக் 

கொள்வதற்கு முக்கியச் சொற்கள் திரும்பத் திரும்ப வருமாறு எழுதப்பட்டுள்ள கதைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர் தகுந்த  உடல் மொழியோடும் முகபாவங்களோடும் கதையை கதைக்க வேண்டும். சில விலங்ககளுக்கே உரிய தனித்தான ஒலிகள் இக்கதையில் கொடுக்கப்பட்டுள்ளன.  

(புலி வருகிறது,  சிலந்தி சிலந்தி )

எழுதுதலுக்குத் தயார் செய்தல்: மாணவர்களை எழுதுவதற்குத் தயார் செய்யும் வகையில் புள்ளிகளை இணைத்து விலங்குகளைக் கண்டறிந்து வரைதல். வண்ணம் தீட்டுதல் அல்லது ஒட்டுதல் செயல்பாட்டின் மூலம் கோட்டோவியங்களை

முழுமைப்படுத்துதல். விலங்குகளின் பெயர்களை மாணவர்களே சொந்தமாக எழுதலாம். மாணவர்கள் வரைந்துள்ள விலங்குகளைப் பற்றி ஆசிரியர் ஓரிரு வாக்கியங்களை கரும்பலகையில் எழுதி 

மாணவர்களை எழுதச் சொல்லலாம்.

 

ஆசிரியர் குறிப்பு:  (TA5108)

குழந்தைகள் தாங்கள் கேட்ட கதைகளை நாடகமாக நடிக்கலாம். ஆசிரியர் அவற்றை வீடியோக்களாகப் பதிவுசெய்யலாம். அல்லது குழந்தைகள் கேட்ட கதைகளைப் ‘படக்கதைகளாக’ உருவாக்கலாம்.  

 

 

Grade: 
2

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy