Towards a just, equitable, humane and sustainable society

கோலிக்குண்டு ஆடலாம்

(வகுப்பு 4 &5 )

பாட நோக்கங்கள்:

  • பாடமுடிவில் மாணவர்களின் கீழ்க்கண்ட திறன்கள் மேம்படும்
  • விழிப்புணர்வுப் பாடல்களைக் கேட்டுப் புரிந்து கொள்ளுதல்
  • எளிய செயல் திட்டங்களைக் கேட்டுப் புரிந்து செயல்படுதல்
  • அறிந்த எளிய தலைப்புகளில் இயல்பாகவும் சரளமாகவும் பேசுதல்
  • குரல் ஏற்ற இறக்கத்துடன் பொருள் விளங்குமாறு படித்தல்
  • நிகழ்வுகளை / அனுபவங்களை விவரித்து எழுதுதல்
  • குழு மனப்பான்மை மற்றும் குழுக்கற்றல்

செயல்பாடு : 1 பாடப்பொருளை முன்னறிவுடன் இணைத்தல்

முன்னறிவுடன் பாடப்பொருளை இணைத்துக் கற்பிக்கும் வகையில் ஆசிரியர் எளிய கேள்விகளைக் கேட்டு மாணவர்களை ஊக்கப்படுத்துவார்.

  1. கோலிக்குண்டு விளையாடியிருக்கிறீர்களா?
  2. இந்த விளையாட்டிற்கு என்ன பெயர்?
  3. ஏதேனும் ஐந்து ஊர் / பாரம்பரிய விளையாட்டுக்களின் பெயர்களை எழுதவும்.
  4. உனக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு விளையாட்டைப் பற்றிப் பேசவும்.

செயல்பாடு :  2   கோலி விளையாடல்

ஆசிரியர் மாணவர்களை  ஒவ்வொருவராக அழைத்து கோலிக்குண்டுகளை உருட்டி குழிக்குள் போடுமாறு கூறுவார். ஆசிரியர் கூறும் வழிமுறைகள் பெரும்பாலும் பாடல்வரிகளில் உள்ள சொற்களைக் கொண்டதாக இருக்கும்.

a) குழியை நோக்கிக் கவனமாய்ப் போடுங்கள்.

குழியை நோக்கி எப்படிப் போட வேண்டும்?

b) விரல்களால் நன்றாகக் குறி வையுங்கள்.

எதைப் பயன்படுத்திக் குறிவைக்க வேண்டும்?

c) குழியில் கோலிக்குண்டைப் போடுங்கள்.

கோலிக்குண்டை எங்கே போட வேண்டும்?

d) உங்களுடைய குறி / எண்ணம் முழுவதையும் குழியின் மீதே வையுங்கள்.

உங்களுடைய எண்ணம் முழுவதும் எங்கே இருக்க வேண்டும்?

e) எண்ணத்தைச் சிதற விடாதீர்கள். எண்ணத்தை உங்களை விட்டு விலக விடாதீர்கள்.

எதைச் சிதறவிடக்கூடாது?

மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவினரையும் தனியாக அழைத்து கோலிக்குண்டுகளைக் குழியில் போடச்செய்வார். சரியாகக் குழியில் கோலிக்குண்டுகளைப் போடும் மாணவர்களை ஆசிரியர் பாராட்டுவார்.

செயல்பாடு – 3:  பாடல் அறிமுகம்

தகுந்த உடல்மொழியுடனும் உரிய குரல் ஏற்றத்தாழ்வுகளுடனும் ஆசிரியர் பாடல்வரிகளைப் பாடிக்காட்டுவார். ஒவ்வொரு வரிக்கும் உரிய ஆசிரியரின் உடல் மொழியையும் குரல் ஏற்ற இறக்கங்களையும் மாணவர்களை ஆசிரியர் கவனிக்கச் செய்வார்.

ஓரிருமுறை ஆசிரியர் பாடிக்கட்டிய பிறகு, மாணவர்களைப் பின்தொடர்ந்து பாடச்செய்வார்.  ஓரிரு முறை மாணவர்கள் பின்தொடர்ந்து பாடிய பிறகு பாடல் அடங்கிய தாளை ஆசிரியர் மாணவர்களிடம் வழங்கிவிட்டு பாடல் வரிகளைப் பார்த்துக்கொண்டே பாடுமாறு அறிவுறுத்துவார். அனைத்து மாணவர்களும் சரியாக உச்சரிக்கிறார்களா? உரிய உடல்மொழியோடு இணைத்துப் பாடுகிறார்களா என்பதை ஆசிரியர் கவனித்து உடனடியாகப் பின்னூட்டங்களை வழங்குவார்.

செயல்பாடு – 4: சந்தத்தை மாற்றிப் பாடுதல் /  பாடலின் மையக்கருத்தை விளக்குதல்

பாடலின் சந்தத்தை மாற்றி வேறொரு எளிய சந்தத்தைப் பயன்படுத்தி ஆசிரியர் ஓரிரு வரிகளைப் பாடிக்காட்டுவார். புதிய சந்தத்தைப் பயன்படுத்தி மாணவர்களைப் தொடர்ந்து பாடச்செய்வார்.

எண்ணங்களும் கவனமும் எவ்வளவு முக்கியமானவை என்றும், எவ்வாறு இலக்கைத் தீர்மானித்து அதன் அடிப்படையில் செயலாற்றுவது என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ஜுனன் எவ்வாறு இலக்கைக் குறிபார்ப்பான் என்பதை விளக்கும் கதையை மாணவர்களிடம் கூறுதல்.

செயல்பாடு – 5:   பாடலை மாணவர்கள் குழுவாகப் பாடுதல் / வாசித்தல்

முதல் வரியைச் சிறுவர்களும், இரண்டாம் வரியைச் சிறுமிகளும் என அடுத்தடுத்த வரிகளை மாற்றி மாணவர்களை ஆசிரியர் பாடச்செய்வார். தன்னார்வத்தின் பேரில் முன்வரும் ஓரிரு மாணவர்களைத் தனியாகப் பாடச் செய்து பிற மாணவர்களைக் கவனிக்கச் செய்வார். மாணவர்கள் அமரும் இடவரிசைப் படி ஒவ்வொருவரும் பாடலின் ஒவ்வொரு வரியையும் பாடுமாறு ஆசிரியர் வலியுறுத்துவார்.     

செயல்பாடு – 6: மதிப்பீடு

1. கோலி விளையாடிய / பாடலைப் பற்றிய அனுபவங்களை 5 எளிய சொற்றொடர்களில் எழுதுதல்.

2. ஏதேனும் ஒரு பாடல் வரியை அடி பிறழாமல் எழுதுதல்.

கோலிக்குண்டு விளையாட்டு : கூடுதல் தகவல்கள் மற்றும் வளங்கள்

 

Grade: 
3, 4, 5

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy