Towards a just, equitable, humane and sustainable society

இனிப்புப் பாடல்

செயல்திட்டம்

நோக்கங்கள் :

  • பாட முடிவில் மாணவர்களிடம் மேம்படக் கூடிய திறன்கள் :
  • பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுதல் திறன்
  • பாடலின் மையக்கருத்தினைப் புரிந்துகொள்ளும் திறன்
  • கேட்ட / படித்த பாடலைப் பற்றிக் கருத்தாடும் திறன்.
  • உரிய ஒலிப்புடன் பொருள் விளங்க படிக்கும் திறன் மற்றும் சொல்லாற்றல் திறன்
  • பாடல்களைத் தன் சொந்த நடையில், தன் கருத்துக்களோடு  இணைத்துச் சொல்லும் திறன்.
  • பல்வேறு ஊர்களின் உணவுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் திறன்.

செயல்பாடு 1 – முன்னறிவைச் சோதித்தல்

ஆசிரியர் மாணவர்களுக்குத் தெரிந்த இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்களைப் பற்றிப் பேசி அவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களின் பெயர்களை எழுத வைப்பார்.

  1. தீபாவளிக்கு என்னென்ன இனிப்பு மற்றும் காரவகைகளைச் சாப்பிடுவீர்கள்?
  2. உங்களுக்குப் பிடித்த இனிப்பு மற்றும் காரவகைகளின் பெயர்களை எழுதுங்கள்.

செயல்பாடு 2  – பாடல் அறிமுகம்

ஆசிரியர் பாடலின் உட்பொருளைப் பற்றிய சிறிய அறிமுகம் செய்துவிட்டுப் பாடலைப் பாடிக்காண்பித்து மாணவர்களையும் பாடவைப்பார். இரண்டிரண்டு வரிகளாகப் பாடிவிட்டு வரிகளைக் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவார். ஒவ்வொரு தின்பண்டம் / ஊர் குறித்த உரையாடலை எளிய கேள்விகளின் வழி ஆசிரியர் மேற்கொண்டு பாடலின் மையக்கருத்தை விளக்குவார்.

  1. லட்டு சாப்பிட்டுள்ளீர்களா? எந்த ஊரின் லட்டு சிறப்பு வாய்ந்தது என்று உனக்குத் தெரியுமா ?
  2. கோதுமை அல்வா சாப்பிட்டுள்ளீர்களா? எந்த ஊரின் கோதுமை அல்வா சிறப்பு வாய்ந்தது என்று உனக்குத் தெரியுமா

செயல்பாடு 3 -  குழுச்செயல்பாடு

ஆசிரியர் பாடலை மாணவர்களிடம் கொடுத்து தனியாகவும் குழுவாகவும் வெவ்வேறு முறைகளில் அவர்களைப் பாட/படிக்கவைப்பார். (எ.டு) - ஒவ்வொரு வரியின் முதற்பாதியை ஒரு குழுவினரையும் இரண்டாவது பாதியை ஒரு குழுவினரையும் பாடுமாறு ஆசிரியர் செய்வார். ஆசிரியர் மாணவர்களின் தனி/குழு நடவடிக்கைகளை

மேற்பார்வை செய்து உடனடியாகப் பின்னூட்டங்களை வழங்குவார்.

செயல்பாடு 4 – பாத்திரமேற்றல்

ஊர்களின் பெயர்ப்பலகை தாங்கிய மாணவர்களிடம் சென்று பிற மாணவர்கள் இனிப்புகளை வாங்கி வருமாறு பாத்திரமேற்றலை வகுப்பில் செய்து காண்பிக்கலாம்.

ஆசிரியர் : நீ திருப்பதிக்குப் போய் லட்டு வாங்கிட்டு வா / உனக்கு என்ன பிடிக்கும்? ( லட்டு ) / லட்டு வாங்க நீ எந்த ஊருக்குப் போகணும்?

மாணவர்கள் : உரிய ஊர்ப்பெயர்ப் பலகை தாங்கிய மாணவனிடம் சென்று இனிப்புகளை வாங்கி வருவர்.

செயல்பாடு 5 -  மாதிரிப் பாடல்களை உருவாக்குதல்

ஆசிரியர் மாணவர்களின் சொந்த மொழியில் அதே போன்ற பாடல் வரிகளை உருவாக்க வைப்பார்.

மாணவர்களின் பாடல் உருவாக்குதல் செயல்பாட்டை எளிதாக்க ஆசிரியர் மாதிரிப் பாடல் வரிகளை மாணவர்களுக்கு வழங்குவார்

“பாண்டிச்சேரிக்குப் போகலாம் பாக்கு மிட்டாய் வாங்கலாம்”

“பாகூருக்குப் போகலாம் பால்கோவா வாங்கலாம்”

செயல்பாடு 6  - மதிப்பீடு

ஆசிரியர் மாணவர்களை மீண்டும் ஒருமுறை படிக்க/பாடச் செய்து விட்டு வினாத்தாளை மாணவர்களிடம் வழங்கி உரிய பதில்களை எழுதுவதற்கான வழிமுறைகளை வழங்குவார்.

Grade: 
3, 4, 5

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy