Towards a just, equitable, humane and sustainable society

பொருளுணர்ந்த வாசிப்பு (Comprehension)

மொழி என்பது கருத்துப் பரிமாற்ற கருவியாக இருந்து வருகிறது. மேலும் மொழி சிந்திப்பதற்கும், உணர்வதற்கும், வினைபுரிவதற்கும் ஊன்றுகோலாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. மொழி கற்றல் மற்றும் கற்பித்தல் பல்வேறு படிநிலைகளையும் திறன்களையும் உள்ளடக்கியது. இவற்றில் ஒன்றான  பொருளுணர்ந்த வாசிப்பு (Comprehension)  முக்கியப் பங்கு வகிக்கிறது.

நாம் வாசிக்கும் புத்தகம், கதை, விளம்பரம் என எதுவாக இருந்தாலும் அதில் கூறப்பட்டுள்ள உட்கருத்தை உள்வாங்கி வெளிக்கொணர்வது பொருளுணர்தல் எனப்படுகிறது. இத்திறன் மாணாக்கரின் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. எவ்வாறெனில், பாடங்களைப் படித்துப் புரிந்து கொள்ள, செய்தித்தாளின் உள்ள செய்திகளை அறிந்து கொள்ள என பட்டியல் நீண்டுக் கொண்டேபோகும்.

தமிழ்நாடு பாடத்திட்ட வரைவு இத்திறனை நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மொழிப்பாடத்தில் ஒரு பகுதியாக வரையறுத்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு

  • செய்தி, நிகழ்ச்சி அறிவிப்புகள், நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ்கள், துண்டறிக்கை/ வெளியீடுகளைப் படித்துப் பொருளுணர்தல்.
  • உரைப்பகுதிகளைப் படித்து அதிலிருந்து கேட்கப்படும் பல்வேறு வகையான வினாக்களுக்கு விடையளித்தல்.
  • எளிய பட விளக்கங்கள், எண் விவர அறிவிப்புகள், வரைப்படங்கள் ஆகியவற்றைப்படித்து பொருள் உணர்தல்.

நான்காம் வகுப்பு

  • செய்தித்தாள்கள், சுவரொட்டிகள், அறிவிப்புகள், விளம்பரங்கள், ஆகியவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளுதல்.

 

இத்திறன்களை கருத்தில்கொண்டு கீழ் உள்ள பயிற்சித்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Grade: 
4, 5

Term: Term 3

Subject: 
Tamil

Request Printed Copy