Towards a just, equitable, humane and sustainable society

பாடம்: செல்லக்குட்டி (பாடல்)

பாடம்: செல்லக்குட்டி (பாடல்)

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 1, பாடம் 3

பார்ப்போம், கேட்போம், புரிதலோடு கற்போம்....

அ.தனமேரி,த.கஜலட்சுமி,ஏ.ஹேமா

வளர்க்கப்படும் திறன்கள்:

· ஓசை நயமிக்க குழந்தைப் பாடல்களைக் கேட்டல்.

  படத்தைப் பார்த்துப் பெயர் சொல்லுதல்

· நேர்க்கோடு, வளைகோடு மூலம் எழுத்துக்களை எழுதுதல்

· ஒத்த ஓசையுடைய சொற்களை இனங்காணுதல்

கற்றல் - கற்பித்தல் துணைக்கருவிகள்:

· மின்னட்டைகள்

· பொருத்துக் கடிகாரம்

· பணித்தாள்கள்

· சொல்தட்டு

· ஒத்த ஓசையுடைய சொற்கள்

ஈடுபடுதல்:

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் மாணவர்களிடம் கீழ்காணும் வினாக்களைக் கேட்டறிதல்.

1. உங்கள் வீட்டில் என்னென்ன செல்லப்பிராணிகளை வளர்க்கிறீர்கள்?

2. உங்களுக்குப் பிடித்த வீட்டு விலங்கு எது?

3. உங்கள் வீட்டில் என்ன விலங்குகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்? ஏன்?

4. யார் வீட்டில் எல்லாம் நாய் இருக்கிறது? இப்போது நாயைப்பற்றி ஒரு பாடல் பாடுவோம்.

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி  போன்ற பதில்களைக் கூறுதல்

மாணவர்கள் தங்களுக்குப்பிடித்தமான விலங்கின் பெயர்களைச் சொல்லுதல்

வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் பெயர்களைச் சொல்லுதல்.

நாயைப் பற்றிய பாடல் ஆசிரியர் பாடப் பாட பின் தொடர்ந்து பாடுதல் 

மதிப்பீடு: மாணவர்களின் பதில்களை ஆசிரியர் ஏற்றுக் கொள்ளுதல், மற்றும் கேள்விகளைப் புரிந்து அதற்கேற்றார் போல் பதில்களைத் தருகின்றனரா என்று நோக்குதல்.

மாணவர்கள் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பாடுகிறார்களா என்று உற்று நோக்குதல். பாடாத மாணவர்களை, முன் வரிசையில் நிறுத்தி, சைகைகளை பின்பற்றச் சொல்லி பாடச் செய்வது .

ஆராய்தல்

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களிடம் பாடப் புத்தகத்திலுள்ள படத்தைக் காண்பித்துப் படத்தில்  உள்ளவைப் பற்றி குழந்தைகளைப் பேசச்  சொல்லுதல் குழந்தைகளுக்குத் தெரிந்த க, ச, த, ந எழுத்துகளில் தொடங்கும் பொருள்களின் பெயர்களையும் குழந்தைகளின் பெயர்களையும் கூறச்சொல்லுதல்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் கல், கண்ணன், தாமரை, நத்தை போன்ற சொற்களைக் கூறல்

மதிப்பீடு: மாணவர்களை ஊக்குவித்து மேலும் சில வார்த்தைகளைக் கூறச் செய்தல் ஆசிரியர் முதலில் கரும்பலகையில் ‘ச’ என்னும் வரிவடிவத்தை எழுதி அதன் மேல் மாணவர்கள் ஒவ்வொருவரையும் விரலால் எழுதச் சொல்லுதல்

மாணவர்  செயல்பாடு: அவ்வாறே மாணவர்களும் கரும்பலகையில் எழுதிப் பழகுதல்

மதிப்பீடு: ஆசிரியர் மாணவர்கள் செய்வதை உற்றுநோக்கி மதிப்பிடுதல் பிறகு மாணவர்களைத் தரையில் வட்டமாக அமர வைத்துச் ‘ச’ எழுத்தைப் படிப்படியாக ஆசிரியர் எழுத வைத்தல்.

அதன் பின் ஆசிரியர் மாணவர்களிடம் மணலைக் கொடுத்து அவ்வடிவத்தின் மேலே எழுதச் செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வமாக மணலைக் கொண்டு எழுதுதல்

மதிப்பீடு: மாணவர்கள் சரியாக எழுதுகின்றனரா என்று மதிப்பிடுதல்

இவ்வாறு மாணவர்களுக்கு மற்ற எழுத்துக்களையும் பயிற்சியளித்தல்

க க் கா

த த் தா

ந ந் நா

ங ங் நா

ற ற் றா

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வமாக மணலைக் கொண்டு எழுதுதல்.

மதிப்பீடு: மாணவர்கள் சரியாக எழுதுகின்றனரா என்று மதிப்பிடுதல், ஒவ்வொரு படியாக மாணவர்களை மதிப்பிடுதல்

விளக்குதல்:

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் ஒரு ‘மாதிரி’ கரகத்தைத் தலையில் வார்த்தையை அறிமுகப்படுத்துதல்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்றல்.

ஆசிரியர் செயல்பாடு:

ஆசிரியர் ஒவ்வொரு எழுத்தாகக் கரும்பலகையில் எழுத மாணவர்கள் அதன் ஒலி வடிவத்தை கூறச் செய்தல்

க ர க ம்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஒவ்வொரு எழுத்தின் ஒலி வடிவத்தையும் சொல்லுதல்

மதிப்பீடு: ஆசிரியர் அவர்கள் சொல்வதை மதிப்பிடுதல்

அடுத்ததாக, காகம் என்ற சொல்லை அறிமுகப்படுத்த ஒரு பாடலைப் பாடுதல்.

‘தாகம் உள்ள காகம் ஒன்று

சுற்றிச் சுற்றி வந்தது;

குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப் பட்டது;

என்ன செய்தது? என்ன செய்தது?

பிறகு ஒரு ஜாடியை

வீட்டின் முன்னே கண்டது;

எட்டி எட்டி பார்த்தது

எட்டவில்லை தண்ணீர்;

என்ன செய்தது? அது என்ன செய்தது?

சிறிய கற்களைக் கொண்டு வந்து அந்த ஜாடியின் உள்ளே போட்டது;

தண்ணீர் மேலே வந்தது;

தாகம் தீரக் குடித்தது,

சந்தோஷமாய் பறந்தது;

ஆகையாலே நாமுமே முயற்சி செய்ய வேண்டுமே!

இவ்வாறு ஒவ்வொரு சொல்லையும் கரகம், காகம், தச்சர், சக்கரம், தாத்தா, நகம், நாய், பாகற்காய், கம்பம், யாழ், மாதம், தந்தம், சாயம், தங்கம், காயம் சம்பவங்களாகவோ, பாடலாகவோ,கதையாகவோ கூறிப்பொருள் விளங்கக் கற்பித்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆசிரியரைத் தொடர்ந்து பாவனைகளுடன் பாடுதல்.

மதிப்பீடு: ஆசிரியர் மாணவர்களின் மகிழ்ச்சியை அனுபவித்தல். எல்லோரும் பங்கேற்கிறார்களா என்று கவனித்தல்.

விரிவாக்குதல்:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் மாணவர்களிடம் அவர்கள் வீட்டில் உள்ள பழையப் பாடப்புத்தகங்கள், வார இதழ்கள் இவற்றில் அவர்களுக்குத் தெரிந்த எழுத்துக்களை வெட்டி சொற்களை அமைத்து எடுத்து வரச் செய்யலாம்.

மாணவர் செயல்பாடு:

மாணவர்கள் அவர்களுக்குத் தெரிந்த எழுத்துக்களை வெட்டி வருதல்

மதிப்பீடு: மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் செய்து வந்ததை மதிப்பிடுதல்

ஆசிரியர் செயல்பாடு:

அன்றாட வாழ்க்கையில் மாணவர்கள் அனுபவித்த ஒலிகளைப் பாடலாகப் பாடி அந்த ஒலிகள் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றி பேச வைத்தல்.

பட்…பட்…பட்டாசு வெடிக்கும்

டம்…டம்…டம்..டமாரம் அடிக்கும்

பட…பட…பறவை சிறகடிக்கும்

மட..மட…மரம் முறிந்து விழும்

தட…தட.. புகைவண்டி ஓடும்

பாடலைப் பாடிய பிறகு ஆசிரியர்

ஒலியைக் கூற மாணவர்கள் நிகழ்வை கூற, ஆசிரியர் நிகழ்வைக் கூறல், மாணவர் ஒலியைக் கூறலாம்

பட்….பட்… -- பட்டாசு வெடிக்கும்

டம்…டம்… -- டமாரம் அடிக்கும்

மாணவர் செயல்பாடு:

மாணவர் உற்சாகத்துடன் பாடலைப் பாடுதல்

மதிப்பீடு:

பின் வரும் பயிற்சித் தாளின் மூலம் மதிப்பிடுதல்

மதிப்பிடுதல்:

ஆசிரியர் செயல்பாடு: ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகளைச் செய்ய வைத்தல்.

சொல் தட்டு:

ஆசிரியர் மாணவர்களிடம் சொல் தட்டினைக் கொடுத்துச் சொற்களை உருவாக்கச் செய்தல்.

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வமுடன் சொற்களை உருவாக்குதல்

மதிப்பீடு: மாணவர்கள் உருவாக்கிய சொற்களை மதிப்பிடுதல்.

ஆசிரியர் செயல்பாடு : மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் படங்களையும், படங்களுக்குரிய சொற்களையும் தனித்தனி எழுத்துக்களாக வெட்டி வைத்திருக்கும் பெட்டியை மாணவர்களிடம் கொடுத்துப் படத்திற்கு ஏற்ற சொற்களைச் சேர்க்கச் சொல்லுதல்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் ஆர்வமுடன் சொற்களை உருவாக்குதல் ஆசிரியர் செயல்பாடு: நகரும் எழுத்து ஆசிரியர் பின்வரும் நகரும் கட்டத்தைக்கொடுத்துப் புதிய சொற்களை உருவாக்கச் செய்தல்

மாணவர் செயல்பாடு: மாணவர்கள் நகரும் கட்டத்தை வைத்து புதிய சொற்களை உருவாக்குதல்

ப ட் ட ம்

ம ட் ட ம்

ச ட் ட ம்

க ட் ட ம்

மதிப்பீடு: மாணவர்கள் உருவாக்கிய சொற்களை மதிப்பிடுதல்

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1