Towards a just, equitable, humane and sustainable society

பெரியாரைத் துணைகொள்

0
No votes yet
0
Post a comment

குறிக்கோள்:

1. நாட்டுப் புறக்கதைகளைக் கேட்டல் மற்றும் புரிந்து கொள்ளல்

2. கேட்ட கதையைத் தத்தம் சொந்த மொழிநடையில் எழுதுதல்.

3. நிறுத்தற்குறியீடுகளோடு கதையை வாசித்தல்.

4. சிறுகதைகளை வாசித்தல்.

5. சொந்தமாகக் கதை உருவாக்குதல்.

செயல்பாடு 1:

மாணவர்கள் தங்கள் குடும்பத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் பற்றித் தெரிந்தவற்றை விவரித்துக்கூறச் சொல்லுதல்.

செயல்பாடு 2:

மாணவர்களுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், வயதானவர்களுக்கும் எவ்வாறான உறவுகள் இருக்கின்றன. மாணவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள மாணவர்களிடம் கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டல்.

1. பெரியவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?

2. உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் உங்களுக்கு எது பிடிக்கும்?

3. உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் உங்களுக்கு எது பிடிக்காது?

4. பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேட்பீர்களா?

5. பெரியவர்கள் உங்களைத் திட்டியது உண்டா?

6. எதற்கெல்லாம் அவர்கள் உங்களைத் திட்டுவார்கள்?

செயல்பாடு 3:

ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள கதையை நிறுத்தற் குறிகளுக்கு ஏற்ப படிக்க உதவுதல். படித்த பின்பு, கதையில் கூறும் கருத்தைப் பற்றி விவாதித்தல்.

கேள்விகள் :

1. அரசன் நாட்டில் உள்ள முதியவர்களை நாடு கடத்தச் சொன்னது சரியான முடிவா?

2. பெரியவர்களின் தயவு, ஆலோசனை நாம் வாழ்வதற்குத் தேவையா? ஏன் நமக்குத் தேவை?

3. கதையில் வரும் அரசினர் விருந்தினர் கேட்ட கேள்விக்கு எவ்வாறு விடை கிடைத்தது?

4. மதிவாணன் ஏன் அரசின் ஆணையை மதிக்க வில்லை? அவனின் செயல் சரியா?

5. மதிவாணன் அரசின் ஆணையை மதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

செயல்பாடு - 4

பாடத்தைப் படித்து அதிலுள்ள கருத்தைக் கலந்துரை- யாடிய பின்னர், மாணவர்களைக் குழுவாக பிரித்துப் படித்த கதையை, ஒவ்வொரு மாணவரும் குழுவில் வரிசையாகக் கூற வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு மாணவர் “ஒரு நாட்டில் ஒரு அரசன் இருக்கிறான், அவன் பெயர்” என்று கூறினால், அடுத்த மாணவன் அதன் தொடர்ச்சியாக “அவன் பெயர் வேங்கை மன்னன், அவன் சிறு வயதில் அரசனான்” என்று கூறுவான். இவ்வாறாக மாணவர்கள் தொடர்ந்து கதை கூறுவார்கள்.

இவ்வாறு மாணவர்கள், ஒரு குழுவில் கூறும் தொடரை, மற்ற குழுவில் உள்ள மாணவர்கள் சிறுவெள்ளைத்தாளில் குறித்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் கதையைக் கூறிய பிறகு, குறிப்பெடுத்த சிறு வெள்ளைத் தாளை பெரிய அட்டையில் ஒட்ட வேண்டும்.

செயல்பாடு - 5 ஆசிரியர் மாணவர்களுக்கு, “பெரியோரைக் கேளுங்கள்” வீடியோவைத் திரையிடுதல். திரையிட்ட பின்பு, மாணவர்களிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்டுக் கலந்துரையாடலை நிகழ்த்துதல்.

கேள்விகள்: 1. மரத்தில் படர்ந்து இருந்த அழகான கொடியை ஏன் பெரிய பறவை அழிக்கச் சொன்னது?

2. ஏன் பெரிய பறவை மரத்தில் இருந்த கொடியை அச்சுறுத்தலாகக் கருதியது?

3. மரத்தில் படர்ந்த கொடியைச், சிறிய பறவைகள் அப்படியே விட்டுவிடச் சொல்வது சரியா?

4. பறவைகள் ஆபத்தில் சிக்கியதற்கு மரத்தில் படர்ந்த கொடிதான் காரணமா?

செயல் திட்டம்: மாணவர்களைத் தங்கள் தாத்தா, பாட்டியைப் பேட்டி எடுக்கச் சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு யாரெனும் தாத்தா, பாட்டி இல்லையென்றால் பக்கத்து வீட்டில் இருக்கும் அல்லது ஊரில் இருக்கும் பெரியவர்களைப் பேட்டி எடுக்க வேண்டும். பேட்டி தாத்தா, பாட்டியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாகவோ, அவர்களின் தொழில்களைப் பற்றியோ இருக்கலாம், பாண்டிச்சேரியின் வரலாறு பற்றியோ, பெரியவர்களின் மரபு சார்ந்த அறிவாகவோ அல்லது, சமையல், விளையாட்டு பற்றியோ இருக்கலாம். பேட்டி எடுக்கும் நபர்களை மாணவர்களே புகைப்படம் எடுத்து ஒரு சிறு புத்தகமாக உருவாக்கலாம்.

மாதிரி நேர்க்காணல் கேள்விகள்:

1. உங்களுடைய பெயர் மற்றும் உங்கள் பெற்றோர்களின் பெயர்களைக் கூறுக.

2. எந்த வருடம் அவர்கள் வாழ்ந்தார்கள்?

3. அவர்கள் அப்போது எந்தத் தொழிலைச் செய்து வந்தனர்?

4. அவர்களுக்கு உணவு எப்படிக் கிடைத்தது?

5. அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை வேலை உணவு உண்டார்கள்?

6. எந்த வகையான உணவுகளை அவர்கள் உண்டார்கள்?

7. அவர்கள் என்ன என்ன விளையாட்டுகளை விளையாடினார்கள்?

8. அவர்கள் பள்ளிக்கூடம் சென்றார்களா?

9. அவர்களுக்குப் பிடித்த ஆசிரியார் யார்? ஏன் பிடிக்கும்?

10. உங்களுடைய சிறந்த நண்பர்கள் யார்? ஏன் அவர்கள் சிறந்த நண்பர்கள்?

இவைப்போன்றக் கேள்விகளை நேர்காணலுக்கு முன்பே மாணவர்கள் குழுவாகவோ, தனியாகவோ ஆசிரியரின் துணையுடன் எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். நேர்க்காணலின் போது, மாணவர்களைப் பெறும் பதில்களைச் சிறிய புத்தகத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் பேட்டி எடுத்து வந்தவுடன், அவர்களைக் குழுவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு குழுவும் அவர்கள் பேட்டி எடுத்து எழுதி வந்த குறிப்புகளைக், கதையாகக் கூறக் கேட்கவும். அனைத்துக் மாணவர்களும் கதையைக் கேட்க வேண்டும். மற்ற மாணவர்கள், கேட்ட கதையிலிருந்து அவர்களுக்குப் பிடித்த கதையை, மீண்டும் அவர்கள் மொழியில் கதையாக எழுத வேண்டும். மாணவர்கள் எழுதிய புதிய கதையைக் கதைப் புத்தகமாக வெளியிடலாம்.

 

 

 

 

Grade: 
4

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment