Towards a just, equitable, humane and sustainable society

என் பந்து (பட்டம் விடலாம் கதை)

0
No votes yet
0
Post a comment

ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், ‘என் பந்து’ என்ற பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள, குழந்தைகளுக்குத் தெரிந்த வார்த்தைகளின் எழுத்து வடிவங்களை ஒலியுடன் இணைக்க உருவாக்கப்பட்ட கதை.

ஒரு ஊருல ஒரு பாப்பா இருந்துச்சாம். அன்னைக்கி சன்டே. ஸ்கூல் லீவு. அதனால அந்த பாப்பாவுக்கு ரொம்ப போரடிச்சுதாம். அதனால அவளோட ப்ரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிக்கிட்டு விளையாட போச்சாம். “என்ன வெளையாடலாம்?” அப்படீன்னு எல்லாரும் யோசிச்சாங்க. உடனே ஒரு பையன் ஓடிப்போயி ஒரு பம்பரத்தை எடுத்துக்கிட்டு வந்தான். அவன் பம்பரம் விடரத எல்லாரும் பாத்து சந்தோஷமா குதிச்சாங்க. ஆனா பம்பரம் சுத்தல…. ஏன்னா, மழ பேஞ்சு தர பூரா ஈரமா இருந்துச்சி. பாப்பாவும் அவளோட ப்ரண்ட்ஸும் சோகமா ஆயிட்டாங்க. என்ன வெளையாடலாமுன்னு எல்லாரும் யோசிச்சாங்க. அப்போ பாப்பா தூரத்துல ஒரு பட்டம் பறப்பத பாத்தா. அத பாத்த எல்லாரும் “பட்டம் விடலாம், பட்டம் விடலாம்” ன்னு கத்தினாங்க. ஆனா பட்டம் இல்லயே! என்ன செய்யரது?

எல்லாரும் ஓடிப்போயி அவங்க அவங்க வீட்டுல இருந்து பழய பேப்பர், நூலு, குச்சி எல்லாம் எடுத்துகிட்டு வந்தாங்க. பாப்பா ஒரு பாய் எடுத்துகிட்டு வந்தா. நாம செய்யிர பட்டம் அழுக்காயிடக் கூடாது இல்லா அதனால தான். எல்லாரும் இதுல உக்காந்துகிட்டு பட்டம் செய்யலாம். பாப்பா அங்க இருந்த மாமரத்துக்கு கீழ பாய விரிச்சி போட்டா. மாமரத்துல நெறய பூ, மாம்பழம் எல்லாம் இருந்துச்சி. படபடன்னு காத்து வீசுச்சி. காத்துல மரமெல்லாம் அடுச்சி. பேப்பர் பறக்காம பத்திரமா புடிச்சிக்கிட்டு எல்லாரும் உக்காந்தாங்க.

ஐயோ! எனக்கு பட்டம் செய்ய தெரியாதே! எல்லாரும் சொன்னாங்க. யார் செய்வாங்க? ஒரு ஐடியா. நம்ம தமிழ் பாடத்துல பட்டம் செய்ரது எப்பிடின்னு இருக்கு. பாப்பா போயி புத்தகத்த எடுத்து வந்தா. அத பாத்து பட்டம் செஞ்சாங்க. நான் கலர் பென்சில் வச்சிருக்கேன்னு சட்ட பையில இருந்து கலர் பென்சில எடுத்தான். நம்ம பட்டத்துல படம் வரையலாமான்னு சொல்லி அவங்களுக்கு பிடிச்ச படங்கள வரஞ்சாங்க. பட்டம் ரெடி. பட்டத்த பறக்க விட்டு எல்லாரும் ஜாலியா வெளையாடனாங்க.

ஆசிரியர்கள் சூழலுக்கு ஏற்றவாறு கதை போக்கை மாற்றிக்கொள்ளலாம்.

Grade: 
1

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment