Towards a just, equitable, humane and sustainable society

பாரதி ஆத்திச்சூடி

பாடத்தைத் திட்டமிடல்:

பாரதியின் ஆத்டிச்சூடியை நடத்தத் திட்டமிடும் பொழுது  பாடத்தை வாசித்தேன். வாசிக்கும்பொழுது எப்படி இப்பாடத்தை நடத்தப்போகிறோம் என்று பயமாக இருந்தது. அவர்களுக்கு இது கொஞ்சம் கூடுதலாகவே இருந்த்துபோலிருந்தது. அதோடு ஆத்திச்சூடியிலுள்ள சில விஷயங்கள் தேவையா என்ற கேள்வியும் இருந்தது. இருந்தபொழுதும் பாரதி நமக்குப் பழக்கமானவர் என்பதால் பாடத்தைக் கடந்து செல்லலாம் என்ற ஒரு முடிவுடன் பயணித்தேன்.

ஆத்திச்சூடியை வாசித்தல்

  • பாரதியையும் ஆத்திச்சூடியையும் புரிந்து கொள்ள சினிமா மற்றும் கதை.
  • எழுத பாரதி சினிமாக்காட்சிகள்
  • பாரதி வரைதல்
  • பாரதி பாடல் பாடுதல்
  • ஆத்திச்சூடியை மீண்டும் வாசித்தல், சேர்ந்திசைத்தல், எழுதுதல் …

என்பது போன்ற திட்ட்த்தை வகுத்துக்கொண்டு வகுப்பறைக்குச் சென்றேன்.

முதல் செயல்பாடாக அவ்வையின் ஆத்திச்சூடியை சொல்லும்படி கேட்டேன். மாணவர்கள் சேர்ந்தும் வரி தவறாமலும் அழகாகவும் சொல்லி முடித்தனர். அத்தனை பேரும் ஞாபகம் வைத்திருந்தது வியப்பாகவே இருந்தது. அறம் என்றால் என்ன என்று கேட்டபொழுது, நன்றாகப் படிக்க வேண்டும், தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டும், பெரிய வேலைக்குப் போக வேண்டும் என விதவிதமாகக் கூறினர். புத்தகத்தை எடுத்து ஆத்திச்சூடியை வாசித்து அதற்கான அர்த்தத்தை அவர்களுக்குக் கூறினேன்.

மகிழ்ச்சியான சிங்கம் கதையை மாணவ்ர்களுக்குக் கூறினேன். அதைக்கூறி, அச்சம் தவிர், ஏறுபோல் நட ஆகிய இரண்டு ஆத்திச்சூடிக்கான விளக்கத்தைப்பற்றி யோசிக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் மாணவர்கள் சிங்கம் கறி திங்கும் அதனால் “ஊண் மிக விரும்பு” ம் இக்கதைக்கு பொருந்துவதைக் கண்டு பிடித்தனர். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆண்மை தவறேல் என்பதற்கு வீரமாக இரு என்று இருக்கிறது. இருபாலரும் வீரமாக இருப்பது பற்றி இருந்தால் நல்லது. அதை நல்ல ஆண் மகனாக இருத்தல் வேண்டும் என விளக்கம் அளித்தேன். நான் நினைத்ததை விட இப்பாட்த்தை மாணவர்களுக்கு புரிதல் ஏற்படும் வகையில் நடத்தமுடிந்தது.

பாரதிப்படத்தில் ஆத்திச்சூடிக்குப் பொறுத்தமான சில பகுதிகளை மட்டும் திரையிடுவது என்ற என் திட்ட்த்தை மாற்றி முழுப் பட்த்தையும் திரையிட்டேன். ஆனால் அவ்வப்பொழுது பட்த்தை நிறுத்தி அவர்கள் பார்த்த்து பற்றி பேசினோம். நான் கேட்டாலே ஆத்திச்சூடிக்கான கதையைக் கூறுவது என்ற அர்த்த்த்துடன், பாரதி ஏறுபோல் நடந்தார், பாரதி அச்சமில்லாமல் பேசினார் என விளக்கத்துவங்கினர். பாரதியின் முழுப்பட்த்தையும் பார்த்து முடித்தோம்.

படத்தைப் பார்த்து முடித்தபின் பாரதியின் கதையை இவ்வாறு சொன்னார்கள்:

பாரதிக்கு சின்னபுள்ளையிலயே கல்யாணம் பண்ணார்கள். அந்தப்பெண் அழுதாங்க; பாரதியை போலிஸ் புடிச்சிட்டு போனாங்க. அவரைப்பார்க்க ஜெயிலுக்கு பாக்கப்போனப்ப உடல; பாரதி பாண்டிச்சேரியில ஒளிஞ்சி இருந்தார்; பாரதி பாறை மேல கணக்கு போட்டார்; பாரதி யானை அடிச்சிடுச்சி.

பாரதியின் படம் வரையும்படி கூறினேன். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாரதியை வரைந்தனர். விதம் விதமான பாரதியை என் பிள்ளைகள் வரைந்திருந்தனர். எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடம் காட்டி மகிழ்ந்தேன்.

பாரதியின் பாடல்களை சேர்ந்திசைத்தனர்: ஓடி விளையாடு பாப்பா இரண்டாம் வகுப்பில் இருந்ததால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சேர்ந்து சத்தமாக சொன்னார்கள். கத்துவது போலிருந்தது. ராகமாகப் பாடுவோம் சினிமாவில் பாடியதுபோல் என்று கூறி பாடப்பழக்குஇனேன். ஓடிவிளையாடு பாப்பா, பாரதசமுதாயம் வாழ்க… பாடல்களைப்பாடி பழகினோம். எப்படித்துவங்குவது, எங்கு ஏத்தவேண்டும், அதற்கான சைகை என்ன, என்றெல்லாம் சொல்லிக்கொடுத்து பாடலைப் பழகினோம். அவர்கள் அதைக்கற்றுக்கொண்டு பாடிய பொழுது ஏதோ பெரிய வேலை செய்வதுபோல் இருந்தது.  இப்படிப் பல பாடல்களைக் கற்றுத்தர வேண்டும் என எண்ணியுள்ளேன்.

பாரதியின் ஆத்திச் சூடியை சேர்ந்து சொல்லப்பயிற்சி எடுத்தோம். ஆத்திச்சூடியின் முதல் வரியைச் சொல்லி முடித்தவுடன் இரண்டு முறை மேசையில் தட்டுவேன். பிறகு இரண்டாவது வரி. இவ்வாறாக அடுத்தடுத்த வரிகளைப் பாடிப் பழகினர்.

அது முடிந்ததும். ஆத்திச்சூடியை வாசிக்க வைத்தேன். உடலினை உறுதி செய் என்ற படத்திற்கு ஏற்ற ஆத்திச்சூடியை அவர்கள் எடுத்து எழுத வேண்டும்.

ஆத்திச்சூடி  எழுதி இருந்தால் அவர்கள் அத்ற்கேற்ற பட்த்தை வரைய வேண்டும்.

மாணவர்கள் இப்பாடத்தில் எதையெல்லாம் கற்றுக்கொண்டார்கள் என்று கேட்டு தொகுத்தேன். “ பாரதி படம் பார்த்தோம். ஆத்திச்சூடிக்கு விளக்கம் தெரிந்து கொண்டோம். சிங்கம் கதை, வரைந்தோம், பாடினோம்…” பாடம் முடிந்தது.

சுபாஷினி – அ. தொ.ப நோணாங்குப்பம்

Grade: 
3

Subject: 
Tamil

Term: Term 1