Towards a just, equitable, humane and sustainable society

யார், யார், யார்? -இயற்கை

  

இயற்கை”        

இயற்கை  தலைப்பை பாடப்பொருளாக வைத்து கீழ்கண்ட தமிழ்ப்பாடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குழந்தைகள் இயற்கை சூழலுக்கு நெருக்கமாக வாழ்கின்றனர், வாழ விரும்புகின்றனர். இயல்பான அந்நிகழ்வை மையப்படுத்தி பல பாடங்கள் உள்ளன. மொழிப்பாடத்தில் இயற்கையுடனான அவர்களது அனுபவத்தை இன்னும் ஆழமாக்கவும், மாணவர்கள் தங்களுடைய உள்ளூர் விஷயங்களுடன் இணைந்து உறவாடவும், மகிழ்ச்சியாக வாசித்தலில், வரைதலில், எழுதுதலில் ஈடுபடவும் இச்செயல்பாடு உதவியாக இருக்கும். மரம், செடி, காடு போன்ற கதைகளின் மையமாகக் கொண்டு குறிப்பிட்ட வகுப்பிற்கான பாடங்களைத் திட்டமிட முயற்சித்துள்ளோம். இச்செயல்பாடுகள் மற்ற வகுப்புகளுக்கு எடுத்துச்செல்லக் கூடியதாகவும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இங்குள்ள பாட்த்திட்டத்தைத் தங்கள் வகுப்பறைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம், அப்படியே பின்பற்றலாம், இதில் உள்ள சில செயல்பாடுகளை மட்டும் எடுத்துக்கொண்டும் செயல்படலாம்.        

 

இரண்டாம் வகுப்பு

யார், யார், யார்?

 

பாடல் பற்றி : அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல். காற்றின் செயல்பாடுகள் மற்றும் தன்மையை அழகாக விவரிக்கிறார். பாடல் கேள்வி கேட்கும் திறனை மையமாகக் கொண்டுள்ளது. பாடப்பொருள்  இயற்கையின் அம்சமான காற்றை மையப்படுத்தி உள்ளதோடு இப்பாடத்தின் பயிற்சிகளாக கேள்விகேட்டு பதிலளித்தல்,  விடுகதை, புதிர் பகுதியாக இரு படங்களுக்கு இடையே யுள்ள வேறுபாடுகளைக் கண்டுபிடித்தல் என அமைந்துள்ளது.

இப்பாடத்தை  இரண்டு பிரிவாகப் பிரித்து செயல்பாடுகளை வடிவமைத்துள்ளோம். முதல் பகுதி கதைப்பகுதி. இரண்டாம் பகுதி பாடமான பாடலை வாசித்தல், பாடுதல் என வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

 

செயல்பாடு - 1

  1. கதையை வாசித்துத் திட்டமிடல்: “இவ்வுலகம் எனக்குப்பிடிக்கும்”  என்ற கதைப் புத்தகத்தை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் கதைப் புத்தகத்தை வாசித்துவிட்டு வகுப்பறையில் கதை வாசிப்பிற்கான நுட்பங்களைப் பயன்படுத்தி கதை வாசித்துப் பின் மாணவர்கள் வாசிப்பைத்தொடர சொல்ல வேண்டும். இக்கதையில் வாசிப்பு என்பது பட வாசிப்பாக மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வரி வாக்கியம் உள்ளது. அதிலும் “எனக்கு” என்னும் வார்த்தையும் “புடிக்கும்” என்னும் வார்த்தையும் எல்லா பக்கத்திலும் உள்ளது. காற்று, மழை, நிலா, அம்மா…போன்ற வார்த்தைகளும் பழக்கமானவை.  

1. இவ்வுலகம் எனக்குப்பிடிக்கும் கதை பற்றிய குறிப்பு இணைக்கப் பட்டுள்ளது

 

  1. மாணவர்களுக்குக் கதை வாசித்தல்: மாணவர்களுக்கு ஆசிரியர் கதையை வாசித்துக் காட்டவேண்டும். கதை வாசிக்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய சில நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

2 கதை வாசிப்பு நுட்பங்கள்:

  1.  கதை வாசித்த அனுபவங்களைக் கேட்டு அறிதல்: வாசித்த கதை அனுபவத்தைப் பற்றி அறிய, கதை எப்படி இருந்தது. படிக்க முடிந்ததா? எதெல்லாம் ஈஸியா இருந்தது போன்ற உரையாடல்கள் மூலம் கதையின் புரிதலையும், வாசிப்பு அனுபவத்தையும் கேட்டு அறியலாம். 
  2. கதையில் இருந்தது போல் அவர்கள் நிஜ வாழ்வில் அவர்களுக்குப் பிடித்தவைகள் பற்றி கேட்டு  அறிதல்: குறிப்பாக ஆசிரியர் இயற்கை என்றால் ஒவ்வொருவரும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். உணவு என்றால் ஆளுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
  1. எனக்கு இட்லி புடிக்கும்.
  2. எனக்கு சோறும் மீன் குழம்பும் புடிக்கும்.
  3. இப்படித் தொடர்ந்து, மரங்கள், பழங்கள், உறவுகள் என சொல்லி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்.
  4. எனக்கு மாம்பழம் புடிக்கும். ஏன்னா இனிக்கும்.
  5. எனக்கு ஆயா புடிக்கும். ஏன்னா கதை சொல்லுவாங்க.

 

  1. எனக்குப் புடிக்கும் புத்தகம் தயாரித்தல்: மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த ஐந்து விஷயங்களை வரைந்து, எனக்கு …புடிக்கும் என எழுத வேண்டும். ஏன் என்று அவர்கள் கூறும் காரணத்தை ஆசிரியர் பட்த்துக்குக் கீழ் எழுதலாம்.
  2. அவர்கள் வரைந்த ஐந்து பேப்பரையும் சேர்த்து ஒரு புத்தகம்போல் ஆக்கவேண்டும்.
  3. எனக்குப் புடிக்கும் புத்தகம் தயாரிக்கும் வழிமுறை:​
  4. மாதிரி புத்தகம் இணைக்கப் பட்டுள்ளது.

 

புத்தகத்தின் மூலம் வீட்டிலுள்ளோரிடம் உரையாடச்செய்தல்:அவர்களுக்குப் புடித்தமாணவர்களிடமெல்லாம் அதைக் காட்டி அவர்களுக்கு என்ன புடிக்கும் ஏன் என்று கேட்டு வரச்செய்தல் வேண்டும்.  அவர்கள் கேட்டு வந்ததை வகுப்பில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

 

செயல்பாடு 2:

  1. புதிர் போடுதல்: பாடலுக்குள் செல்லுமுன் மாணவர்களிடம் விடுகதைகள் கேட்டு பதில் சொல்லவைத்தல். அவர்கள் விடுகதை கேட்கும்படி செய்தல் என துவங்க 
  2. வேண்டும்.

5. மாதிரி விடுகதைகள் இணைக்கப்பட்டுள்ளன.

  1.  . கேள்வி/ விடுகதை/ புதிர் உரையாடல்: மாணவர்கள் கேள்வி பற்றியும் அதன் அவசியம் பற்றியும் புரிந்துகொள்வது முக்கிய  பாட நோக்கமாக இருப்பதால் அது பற்றி புரிதலை ஏற்படுத்த ஒரு உரையாடலை மேற்கொள்வது அவசியம்.

 

6. கேள்வி/ விடுகதை/ புதிர் உரையாடல் (ஆசிரியர் வழிகாட்டி) இணைக்கப் பட்டுள்ளது.

 

 

  1. புரிதலோடு பாடல் வாசிப்பு: பாடப் புத்தகத்திலுள்ள படங்களைக் காட்டி மாணவர்கள் பார்க்கிற நிகழ்வுகளை மாணவர்களின் மூலமாகவே சொல்ல வைத்து சொற்றொடர்களை உருவாக்கி மாணவர்களைப்  பேசவும்,  பாடவும், வாசிக்கவும் வைத்தல்.

7.  யார் யார் பாடச்செயல்பாடு ஆசிரிய வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது

 

  1. கேள்வி பதில் தொடர்பான பாடல்கள்: ஆசிரியர் மாணவரிடையே புரிதலுணர்வை அதிகமாக்கும் வகையில் கீழ்க்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.  பாடப்புத்தகத்தில் உள்ள படத்தை அனைத்து மாணவர்களிடமும் காண்பிக்க வேண்டும். படத்திலிருந்து பாடல் வரிகளை மாணவர்கள் இயல்பாகக் கூறுவதைப்போல் உரையாடல் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் வழிகாட்டி மாதிரியிலுள்ள  சில வினாக்களை எழுப்பலாம். மாணவர்கள் கூறும் பதிலை மையமாக வைத்து பாடல் வரிகளை அமைக்க வேண்டும்.
  2. பாடல் பாடுதல்; குழந்தைகள் வாசிக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பாட வைக்க வேண்டும
  3. புதிர் பாடல்கள்: கேள்வி கேட்பது தொடர்பாக வெவ்வேறு பாடல்கள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.  அவற்றை மாணவர்கள் பாட சொல்லிக் கொடுக்கலாம். கீழ்கண்ட பாடல்கள் உள்ளன. ஓரிரு பாடல்களைப் பாடவைப்பது சிறப்பாக இருக்கும்.

 8. கேள்வி கேட்பது தொடர்பாக மற்ற பாடல்கள் இணைக்கப் பட்டுள்ளது.

7. மற்றவை -

1. https://www.youtube.com/watch?v=vQnsu67Es-c

  

 

 

 

Grade: 
2

Subject: 
Tamil

Term: Term 1