Towards a just, equitable, humane and sustainable society

இயற்கை

இயற்கை

நான்காம் வகுப்பு

 

பாடம் பற்றி:

                                                                                                                                    Class 4 - Tamil - Iyarkai

காட்சிப் படம் ஒன்றை வைத்துஅதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இக்கேள்விகள் மற்றும் பயிற்சிகள்வருணித்தல், சொற்களை உபயோகித்தல் தொடர்பானவை.

இப்பாடம் இயற்கை மற்றும் அதை வருணிப்பதை மைய்யப்படுத்தி இருப்பதால்நமது மரம்கதையைத் தேர்வு செய்துள்ளோம். இக்கதையில் மரம், மரத்தின் பகுதிகள், மரம்வாழ் உயிர்கள் என எல்லாமே வருணிக்கப்பட்டுள்ளது.

“என் மர நண்பன் & நமது மரம்” கதை:

1) கதை வாசிப்பு மற்றும் உரையாடல்:  ஏதேனும் ஒரு கதைப் புத்தகத்தைத் தேர்வு செய்து ஆசிரியர் மாணவர்களுக்குக் கதையை வாசித்து உரையாடலில் ஈடுபட வேண்டும். கதை வாசிப்பு மற்றும் உரையாடலுக்கு உதவும் வகையில் ஆசிரியர் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

a. “என் மர நண்பன்” கதை, https://storyweaver.org.in/stories/33141-en-mara-nanban

b. “நமது மரம்” கதை

c. கதை வாசிப்பு மற்றும் உரையாடல்.

      ஆசிரியர் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

 

2) மரம் பார்வையிடல்: ஆசிரியர் ஊரில் உள்ள ஒரு முக்கியமான மரம் ஒன்றை தேர்வு செய்து அங்கு செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டு உரையாடலாம். ஆசிரியர் அருகிலுள்ள ஒரு மரத்தைத் தேர்வு செய்து அம்மரத்தடிக்கு மாணவர்களை அழைத்துச்செல்ல வேண்டும். மரம் பார்வையிடல் ஆசிரியர் குறிப்பைப் பயன்படுத்தி அவர்களை மரத்தை உற்று நோக்கும் செயலில் ஈடுபடுத்த வேண்டும்.

d. மரம் பார்வையிடல்ஆசிரியர் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

 

3) மர ஆல்பம் தயாரித்தல்: மாணவர்கள் மரம் பற்றிய கையேடு குறிப்பிட்ட தலைப்புகளில் தயாரிக்க ஆசிரியர் திட்டமிட வேண்டும்.  குறிப்பிட்ட இரு தலைப்புகளில் தயரிக்க மாதிரிகள் வழங்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர் குறிப்பும் இணைக்கப் பட்டுள்ளது.

e. “நமது மரம்ஆல்பம் தாயாரித்தல் மற்றும் மாதிரி ஆல்பம் (ஆசிரியர் குறிப்பு)

f. மாதிரி ஆல்பம் – எனக்குப் பிடித்த மரம்

g. மாதிரி ஆல்பம் – எங்கள் ஊரின் முக்கிய மரம்

 

4) ஆல்பம் காட்சிப்படுத்துதல்: மாணவர்களின் ஆல்பத்தைக் காட்சிப்படுத்துதலை ஒரு வகுப்பறை நிகழ்வாக ஏற்பாடு செய்யலாம். இப்படி செய்யுபொழுது  முதலில் வகுப்பறையில் காட்சிப்படுத்தி அவர்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும். மாணவர்களின் இவ்வனுபவப் பகிர்வை செழுமைப்படுத்த வேண்டும். அது சிறப்பானதாக இருக்கும்பொழுது பள்ளி அளவில் ஒருங்கினைக்கலாம்.

 

5) இயற்கை சார்ந்த கதைகள்: குழந்தைகளுக்கு இயற்கை தொடர்பான வாசிப்பை வலுப்படுத்தவும், அவர்கள் மரச்செயல்பாடிகளில் ஈடுபடவும் உதவும் வகையிலான கதைகள் இங்கு இணைத்துள்ளோம்.

hஇயற்கை தொடர்பான கதைகளின் தொகுப்பு – இணைப்பு

 

6) மற்றவைகள்:

  1. https://www.youtube.com/watch?v=yod4OmEmIPk
  2. https://www.youtube.com/watch?v=ReXHHhdhw2g
  3. இயற்கை- மற்றவை – Teacher Reflection – Amolorpavamary – 2016
  4. Teacher Reflection – Santhakumari – 2016
  5. Tree Link - https://www.youtube.com/watch?v=oA4fay_Er7I    and https://www.youtube.com/watch?v=uUMJbFz6V7U 
 

 

Grade: 
4

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy