Towards a just, equitable, humane and sustainable society

காடு எம் வீடு - இயற்கை

காடு எம் வீடு

ஐந்தாம் வகுப்பு

 

பாடம் பற்றி:

காட்டிலுள்ள விலங்குகள் தங்களுக்குள் காடு அழிவது பற்றியும் நீரின்மை பற்றியும் உரையாடுகின்றனர். அவ்வுரையாடலில் மனிதர்கள் எப்படியெல்லாம் காடுகளை அழிக்கின்றனர் என்று விலங்குகள், மனிதர்களைக் குற்றம் சாட்டுவதோடு மரக்கன்றுகளை நட்டு நீரூற்றி வளர்க்கின்றன. உரையாடலை மையப்படுத்தி புவி வெப்பமாகுதல் பற்றிய உரையாடல் நடக்கிறது.

 

பாடச்செயல்பாடு பற்றிய குறிப்பு:

பூமி சூடாகுதல் பற்றி அறிந்து கொள்ளவும் மொழித்திறன்களைப் பெறவும் குறிப்பிட்ட செயல்பாடுகளை முன் வைத்துள்ளோம். முதல் பகுதி பூமி சூடாகுதல் குறித்த ஆவணப்படம் பார்த்து அது பற்றி பேசுதல். பூமி சூடாகுதலிலிருந்து பூமியை மீட்டெடுக்கும் படியான கதை ஒன்றும் உண்மைக்கதை ஒன்றும் இணைத்துள்ளோம். அதை மாணவர்கள் குழுவாகப் பிரிந்து கதை வாசிப்பு, கதை சொல்லல், கதை சார்ந்த எழுத்து வேலைகளில் ஈடுபடுதல் எனச் செயல்படுவர். இச்செயல்பாடுகளை வரிசைபடுத்தி, ஆசிரியர் திட்டமிடலுக்கான குறிப்புகள், வழிகாட்டி , ஆவணப்படத்திற்கான இணைப்பு மற்றும் மாணவர்களுக்கான பயிற்சித்தாள் இணைக்கப்பட்டுள்ளது.

 

ஆவணப்படம் திரையிடல்:

காடு எம் வீடு பாடத்தைப்பற்றிக் கூறி , பூமி வெப்பமாகுதலை இன்றைய சூழலுடன் இணைத்து அறிமுகப்படுத்த வேண்டும்.

 

(ஆவணப்படம் இணைக்கப்பட்டுள்ளது )

 https://www.youtube.com/watch?v=Z64NrwbbK0M

https://www.youtube.com/watch?v=eembgLv9rwQ

 

 

 

 

 

ஆவணப்படத்தின் மூலம் பாடப் பொருளை விளக்குதல்:

பூமி சூடாகுதல் பற்றிய ஆவணப் படத்தைத் திரையிட வேண்டும்.

படத்தில் பார்த்தவற்றைப் பற்றி உரையாட வேண்டும். ஆசிரியர்  உரையாடும் பொழுது நமது இன்றைய வாழ்வியல் முறையை உதாரணமாக எடுத்துப் பேசலாம்.

 

3.ஜாதவின் காடு

4. தண்ணீர் காடு

(கதைப் புத்தகங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கதை வாசிப்பிற்கு மாணவர்களைத் தயாரித்தல்.

ஆசிரியர் மாதிரிக்கதை ஒன்றைக் காட்டி, புத்தகத்திலுள்ள கதையின் சில பகுதிகளை வாசித்து, எப்படி செய்ய வேண்டுமென எடுத்துக்கூற வேண்டும்.

மாணவர்களைக் குழுவாகப் பிரித்து – ஒவ்வொரு குழுவும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை, தொடர் வாசிப்பு பற்றிய விளக்கம், குழுவிலுள்ளவர்களுக்கான பொறுப்பு ஆகியவற்றை எடுத்துரைக்க வேண்டும்.

 

கதை வாசிப்புச் செயல்பாடு:

குழு 1:ஜாதவின் காடு

குழு 2:தண்ணீர் காடு:

என இரண்டு குழுவாக மாணவர்கள் பிரிந்து கதையை வாசிப்பர். குழுவைப் பொருத்து ஒவ்வொரு கதையையும் குழுவிற்கு மூன்று அல்லது நான்கு எனக் கொடுக்கலாம்.

-இரண்டு குழுவும் தனித்தனியாக ஆசிரியரின் ஆலோசனையைப் பின்பற்றி கதை வாசிப்பர்.

கதையைப் பற்றி குழுவில் உரையாட வைக்க வேண்டும்.

வகுப்பறையில் அக்கதையை எப்படி சொல்வது, யார் யார் எந்த பொறுப்பெடுப்பது. எந்த முறையில் சொல்வது…

அடுத்தடுத்த குழுச்செயல்பாடுகளுக்கும் மாணவர்கள் இதே குழுவை மையமாகக் கொண்டு செயல்படல் வேண்டும். ஏனெனில் வாசிக்கும் கதையை மையப்படுத்தியவை அவை.

5 வாசிப்பு நுட்பங்கள் - இணைக்கப்பட்டுள்ளது

5) கதை சொல்லல் செயல்பாடு:

ஒவ்வொரு குழுவும் அவர்கள் திட்டமிட்டபடி கதையை வகுப்பறையின் மையத்தில் சொல்லவைத்தல்.

இரண்டு குழுவும் ஒன்றன்பின் ஒன்றாகக் கதை சொல்லி முடித்ததும் கதை கேட்ட குழு, கதை சொன்ன குழுவிடம் கேள்வி கேட்பது, பாராட்டுவது என வைத்துக் கொள்ளலாம்.

கதை அடிப்படையிலான செயல்பாடுகள்:

ஒவ்வொரு குழுவிறிற்கும் திட்டம் -1 , திட்டம்- 2  என இங்கு இரண்டு குழுச்செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வாய்ப்பிருந்தால் இரண்டையும் செய்ய முயற்சிக்கலாம்.  கதையை மையமாகக் கொண்டு இச்செய்ல்பாடு இருப்பதால்  கதைப்புத்தகம் அவர்களுடன் இருக்க வேண்டும்.

 

6.   குழுச்செயல்பாடு திட்டம் இணைக்கப் பட்டுள்ளது

 

கதையை மையமாகக் கொண்ட பயிற்சித்தாள்:

கதையை மையமாகக் கொண்ட பயிற்சித்தாள் இணைக்கப் பட்டுள்ளது.இது மாணவர்கள் தனித்து செயல்படும்படியான பயிற்சித்தாள். அதைக் குழுவாக செயல்படுத்த வேண்டுமானால் , கதையிலிருந்து 10 கேள்விகளை உருவாக்குக, என்பதை 30 / 50 கேள்விகள் உருவாக்குக என மாற்றியமைக்கலாம்.

பயிற்சித்தாள் இணைக்கப் பட்டுள்ளது. 

7. ஜாதவின் காடுபயிற்சித்தாள்

8. தண்ணீர் காடு - பயிற்சித்தாள்

மரம் தொடர்பான பாடல்கள்:

மாணவர்கள் காடு பற்றிய ஆழமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதை மகிழ்ச்சியாக பாடித்திரிய சில பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களையே கூட இசையமைக்கச் சொல்லி பாடச்சொல்லலாம். வாய்ப்பிருந்தால் தாளங்களை இணைக்கலாம்.

9. மரம் சார்ந்த பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது. முழுப்பாடல்கள் நூலகத்தில் உள்ளன.

இப்பாடத்திற்கான மற்ற செயல்பாடுகள்/ அனுபங்கள்:

 

 

Grade: 
5

Subject: 
Tamil

Term: Term 1