Towards a just, equitable, humane and sustainable society

3வது வகுப்பறை வளங்கள் – விலங்குகள்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது கதைகள். அதிலும் விலங்குகள் பற்றிய கதைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. குழந்தைகளின் ‘சிந்திக்கும் திறனை வளர்க்கும்’ செயலை அதிக அளவில் செய்பவை கதைகளே. கௌதாரியும் முயலும் என்ற கதையை நடத்தத் தேவையான கூடுதல் வளங்கள் உங்களுக்காக.

1. கதை கூறல்:

வால்களின் கதைகள்: ஆசிரியர் என்ற கதையை மாணவர்களுக்குக் கூறுவார். ஒரு சிறுமி தோட்டத்தில் விளையாடிவிட்டுத் திரும்பி வரும் வழியில் தான் பார்த்த வால்களுக்குச் சொந்தமான விலங்குகளை அனுமானிக்கும் ஒரு கதை இது. மாணவர்களைச் சிந்திக்க வைக்க ஏற்ற கதை.

2. விலங்குகளின் படங்கள்: ஆசிரியர் படங்களைக் காட்டி கதையைக் கூறுவதற்காக விலங்குகளின் கோட்டுப் படங்கள் உள்ளன. கதை கூறிய பிறகு கோட்டுப்படங்களுக்கு வண்ணமிட்டு அவற்றின் வால்களைத் தனியாக வெட்டி எடுத்து விடவேண்டும். மாணவர்கள், வால்களை அவற்றின் விலங்குகளோடு பொருத்த வேண்டும்.

3. உரையாடல் வினாக்கள்: கதைகூறும் போது மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் கேட்கக்கூடிய மாதிரி வினாக்கள்

4. சிந்தனையைத் தூண்டும் கதைகள் சில:

சிறுகுழுக்களில் அமர்ந்து மாணவர்கள் இக்கதைகளை வாசிக்கலாம். அவர்களைச் சிந்திக்கச் செய்யும் வினாக்கள் சிலவற்றை ஒவ்வொரு குழுவிற்கும் ஆசிரியர் கொடுக்கலாம். குழுவில் வாசித்து, வினாக்களுக்கான விடையை விவாதித்துப் பின் மாணவர்கள் வகுப்பில் தத்தம் புரிதலையும் விடைகளையும் பகிர்ந்து கொள்வர்.

5. கதைசார் செயல்பாடுகள்: மீண்டும் சிறு குழுக்களில் மாணவர்கள், கீழ்க்காணும் ஏதேனும் ஒரு செயல்பாட்டைச் செய்யலாம். (உ.ம்.)

  • கதைக்கான முகமூடிகளைச் செய்தல்
  • கதையை நாடகமாக நடித்தல்
  • கதாபாத்திரங்களை ஆராய்தல்
  • கதையில் தங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயங்களைக் கூறுதல்
  • கதையை அடிப்படையாகக் கொண்டு, ஏதேனும் 5 வினாக்களை எழுதுதல்

6. தன்வரலாறு எழுதுதல்: மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விலங்கின் தன்வரலாறு எழுதுதல். அவ்வாறு எழுதுவதற்கு முன், சில தன்வரலாறு கதைகளை வாசித்துப் பார்த்தல். சில தன்வரலாறு கதைகள்,

  • ஒரு புழுவின் கதை
  • சுறுசுறுப்பான எறும்பு
  • சிலந்தி! சிலந்தி!!
  • சர்ப்பி எனும் பாம்பு
  • சுத்தமான பூனை

மாணவர்கள் ‘தன்வரலாறு’ எழுதுவதற்கான படிநிலைகள்

 

7. புதிர்களை அறிவோம்பணித்தாள்:

மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் இப்பணித்தாளில் சில விடுகதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றை வாசித்து, விடைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். 

8. மேலும் சில செயல்பாடுகள்:

8a. விலங்குகள் பாடல்கள் வீடியோக்கள்

ராஜா சின்ன ரோஜா பாடல்

 

 

நண்பர்கள் பாடல்

 

 

விலங்கியல் பூங்கா பாடல்

 

 

 8b. விலங்குகள் கதைகள் வீடியோக்கள்:

 

பலசாலி பன்றி – கதை

 

 

கிணற்றுத் தவளை – கதை

 

 

புத்திசாலி மான் – கதை

 

   

8c. மாவு கலைப்பொருட்கள் செய்தல்:

பொதுவாக வகுப்புகளில் நாம் களிமண்ணைக் கொண்டு பலவிதமான உருவங்களைச் செய்யக் கற்றுக் கொடுப்போம். அவையனைத்தும் ஒரே வண்ணத்தில் இருக்கும். குழந்தைகள் எப்போதுமே வண்ணங்களை விரும்புவர். வண்ணமயமான சைனா களிமண் வாங்குவது அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சிரமம். சுலபமாகவும் மலிவாகவும் சைனா களிமண் போன்ற பொருளை நாமே செய்வதற்கான செயல்முறையும் மாதிரி பொம்மைகளும்.

8d. படக்கதையைப் பார்த்து கதை கூறல்:

இப்படக்கதையில் 8படங்கள் உள்ளன. ஆசிரியர் இவற்றை வெட்டி எடுத்து மாணவர்களிடம் கொடுத்து கதையின் வரிசைப்படி அடுக்கச் சொல்லலாம். பின் அவர்கள் அடுக்கிய வரிசைப்படி அவர்களின் கதையைக் கூறச் சொல்லலாம்

 

8e. என்னைக் கண்டுபிடி:

இப்புத்தகத்தில் அரிய விலங்குகள் மறைந்திருக்கும். அவற்றை மாணவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் அவற்றைப் பற்றிய தகவல்களை வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தேடிப்பார் – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

 

 

Ref: Most of the books are taken from: https://storyweaver.org.in/

 

 

 

 

 

 

 

 

Grade: 
3

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy