Towards a just, equitable, humane and sustainable society

1 மற்றும் 2 வகுப்பறை வளங்கள் – விலங்குகள்

வகுப்பு 1 - பாடி ஆடி விளையாடலாம், ஆலமரத்துல விளையாட்டு, நாய்க்குட்டியைத் தேடி

வகுப்பு 2 – தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு

 

விலங்குகள் பாடல்கள் (ref: Story weaver.org)

நாயி வால பாரு

நல்லா வளஞ்சி இருக்கு

வாயி லிருந்து நாக்கு

வழிஞ்சி வெளியே கிடக்கு!

மாட்டு வாலு நாளும்

மணியை போல ஆடும்

ஊட்ட முள்ள பாலை

உனக்கு அள்ளிக் கொடுக்கும்

கொரங்கு வாலு நீளம்

குறும்பு ரொம்ப அதிகம்

மரத்தி ஏறி ஓடும்

மனுஷன் போல இருக்கும்

 சிங்க வாலு வானில்

சீறி நிற்கும் பாரு

தங்கள் ஆணை என்று

தாழ்ந்து வணங்கும் ஊரு

குதிர வால பாரு

குஞ்சலத்த போல

மதுர செல்லும் சால

மகிழ்ந்து ஓடும் மேல

முதல வால நீட்டி

முழிச்சி முழிச்சிப் பார்த்தா

கதறி ஓடும் ஊரு

கலங்கும் நெஞ்சு ஆத்தா

பாம்புக் கெங்க வாலு

பாம்பு தானே வாலு

தாம்புக் கயிறப் போல

தரையத் தழுவி ஊரும்

அணிலு வாலு பெரிசு

அழகு ரொம்பப் பவுசு

துணியப் போல மென்மை

தூய்மை யான மனசு

 

விலங்குகள் கதைகள்: (ref: Story weaver.org)

 

அவையெல்லாம் யார் சாப்பிட்டது: காட்டில் எதுவும் வீணாகப் போவதில்லை. எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு விடும். கழுகுகளும், கரையான்களும், எறும்புகளும், காட்டுப் பன்றிகளும்…

 

ஒருவேளை: ஷ்யாமிற்கு ஒருவேளை நீளமான கழுத்து இருந்தால்… நீளமான கால்கள் இருந்தால்… பெரிய காதுகள் இருந்தால்… பானைபோன்ற வயிறு இருந்தால்…

 

கொஞ்சம் சிரிங்க: மானுக்கும் முயலுக்கும் ஓட்டப் பந்தயம். மான் கீழே விழுகிறது. மற்ற விலங்குகள் உதவுகின்றன. அனைவரும் சேர்ந்து சிரிக்க வைக்கின்றன.

 

குளத்தில் இருந்த குறும்புக்கார மீன்கள்: கிச்சுவும் விச்சுவும் குளத்திற்கு மீன் பிடிக்கச் செல்கிறார்கள். இருவரும் தூண்டில் போட்டு இழுத்தார்கள்… இழுத்தார்கள்… அய்யோ!!!

 

டிங் டாங்: குழந்தை தூங்கப் போகிறது. அது என்ன சத்தம் டிங் டாங்… ட்ரிங், ட்ரிங்… டாங், டாங்… ர்ரிங், ர்ரிங்… எப்படி தூங்குறது!!!

பறவைகள் பேசும்: ஆனால் நமக்குப் புரிவதில்லை. ட்வீஈஈஈஈ… ஹூஹூஹூ… பக் பக் பக்… க்வாஆஆஆ க்வாஆஆஆ…

 

விளையாட்டுகள்: (Ref: Montessori -At home guide- 101 activities)

தண்ணீரை மாற்றுதல்: ஒரு டம்ளரில் இருந்து மற்றொரு டம்ளருக்கு.

பயன்கள்: பொறுமை, கவனம், கை-கண் ஒருங்கிணைதல், சுதந்திரமாகச் செயல்படுதல், எழுதுவதற்குக் கைகளைத் தயார்படுத்துதல்

தொட்டு உணர்தல்: வழுவழுப்பான மற்றும் சொரசொரப்பான பொருட்களைத் தடவிப் பார்த்துப் பிரித்தல்

பயன்கள்: புலன்களைப் பயன்படுத்தி, காரணம் அறிந்து பொருட்களை வகைப்படுத்தும் திறன்

 இடுக்கியைக் கையாளுதல்: தட்டில் இருக்கும் அரிசியை ஒரு சிறிய இடுக்கியால் எடுத்து வேறொரு கிண்ணதிற்கு மாற்றுதல்

பயன்கள்: கை தசைகள் வலிமை, கவனம், பொறுமை, மிகச் சிறிய பொருட்களை கையாளும் திறன்

வண்ண மணிகளைக் கோர்த்தல்: வண்ண மணிகளை நூலில் கோர்த்தல்

பயன்கள்: பல வண்ணங்களை அழகுணர்ச்சியுடன் கையாளும் திறன், வண்ணங்களை அறிதல், எழுதுவதற்குக் கைகளைத் தயார்படுத்துதல்

விதைத்தல்: குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒரு விதையை ஊன்றி, வளர்ச்சியைக் கவனித்தல்.

பயன்கள்: உற்றுநோக்கும் திறன், உணர்திறன்

கவர் போடுதல்: பரிசுப்பொருள் உள்ள அட்டைபெட்டிக்குக் கவர் போடுதல்

பயன்கள்: நுண்தசை வளர்ச்சி, செயல்முறை வரிசை அறிதல்

 

ஓட்டை போடுதல்: ஒரு தாளில் விரும்பிய வடிவத்தை வரைந்து, அந்த கோட்டின் மீது பன்ச்சிங் மெஷின் கொண்டு ஓட்டை போடுதல்

பயன்கள்: நுண்தசை வளர்ச்சி, கவனம், வடிவங்களை அறிதல்

சமநிலை படுத்துதல்: ஒரு பெரிய வட்டம்போட்டு அதன் மேல், கையில் ஒரு மணியைப் பிடித்தபடி ஒவ்வொரு மாணவராக நடக்க வேண்டும். மணியிலிருந்து ஓசை வரக்கூடாது.

பயன்கள்: உடலை சமநிலை படுத்துதல்

வகுப்பறை செயல்பாடுகள்:

வண்ணம் தீட்டுவோம்: [ref- google images]

மாணவர்கள் கோட்டுப் படங்களின் வண்ணம் தீட்டுவதில் அதிக ஆர்வம் உடையவர்கள் மேலும் இதன் மூலம் விலங்குகளின் வெளித்தோற்றத்தை உற்றுநோக்குவர். 

 

வெட்டு… ஒட்டு… கண்டுபிடி…

 வெட்டு… ஒட்டு… கண்டுபிடி…

 

 

 

 

 

 

 

 

கோடுகளை இணை

 வெட்டி எடு

 

 

 

 

 

 

 

 

மறைந்திருப்பதைக் கண்டுபிடி

 மறைந்திருப்பதைக் கண்டுபிடி

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெட்டி எடு

 கோடுகளை இணை

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy

Comments

sasirekha's picture
sasirekha

good article