Towards a just, equitable, humane and sustainable society

கதையும் கலையும் – திரு . எழில் அவர்களின் பயிற்சிப்பட்டறை

0
No votes yet
0
Post a comment

எழிலின் எழிலான குரல் வளத்தோடு முதல் பாடல் - அதுவே பயிற்சிப் பட்டறையின் துவக்கம்.

வந்தனம் ஐயா வந்தனம்

வந்த சனம் எல்லாம் குந்தனும் (2)

வரும்போது வாங்கி வந்த வாசமுள்ள சந்தனம்

சந்தனத்தை பூசுங்க சந்தோசமா பாடுங்க

பிச்சி மலரெடுத்து பெரியவங்கள கும்பிட்டோம்

மல்லிகை பூச்சுடும் மாதர்களை கும்பிட்டோம்

குழப்பம் வந்திருக்க இளவட்டங்களைக் கும்பிட்டோம்

சண்டை சத்தம்  செய்யாதிங்க சின்ன பசங்களைக் கும்பிட்டோம்

பாயிருந்தா போடுங்க விசிறி  இருந்தா வீசுங்க

நிக்காதிங்க உட்காருங்க உட்காருங்க நிக்காதிங்க

பின்னாடி இருப்பவரே முன்னாடி  வந்து உட்காருங்க

ஓரசாரம்  நிற்பவரே முன்னாடி  வந்து உட்காருங்க

ஆன்டராய்டு பார்ப்பவரே முன்ன வந்து உட்காருங்க

நீங்க பெத்த புள்ள நானுங்க

பாட்டில் பிழை இருந்தா பொருத்துக்கோங்க !

 

ஆசிரியர்கள் அனைவரும் உற்சாகத்தோடு பங்கேற்க தயாராகினர்

திரு. எழில் :தெருக்கூத்து - அந்தக் காலத்தில் வயலில் உழவு செய்து வரும் மக்கள் மாலையில் இளைப்பாற ஏற்படுத்தப்பட்ட இசை நாடகம் ஆகும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் கூத்துக்கு தேவையான உடை கலை அலங்காரம் அனைத்தையும் தாங்களாகவே செய்து வந்தனர். காலப்போக்கில் இக்கலை அரிதாகி வருவதை பற்றியும் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

    அடுத்ததாக படம் வரைய தேவையான அடிப்படை விதிகளை திரு எழில் மற்றும் திரு இராகேஷ் விளக்கினார்கள். கோடு என்பது இரு புள்ளிகளை இணைப்பது அல்ல. பல சிறுசிறு புள்ளிகளின் இணைந்த ஒன்றே  கோடு ஆகும் என கோட்டின்  தத்துவத்தை விளக்கினர்

    பின்பு ஐந்து வளைவு மற்றும் கோடு பயன்படுத்தி 10 படங்கள் ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தனியே வரையச் சொன்னார்கள். படங்களை எவ்வாறு வரையக் கூடாது என்றும் சில படங்களை வரையவே கூடாது.  ஏனெனில் அவை அனைத்தும் காலம் காலமாக நாம் வரைந்து வரும் படங்களே. உதாரணமாக  வீடு , உதய சூரியன்,மரம், மலை போன்றவை .படங்கள் வரைய தேவையான சில நுணுக்கங்களைக் கற்றுத்தந்தனர் படங்களுக்கு உயிர்அளிப்பது கோடுகள்  என்பதை உணர்ந்தோம்.

படக்கதை உருவாக்கம்:

ஆசிரியர்கள் அனைவருக்கும் காகிதம்,வண்ணங்கள், போன்றவை வழங்கப்பட்டது. காகிதத்தை எட்டு பாகமாக பிரித்து படம் வரைந்து அதை ஒரு படக்கதையாக உருவாக்கினோம். பின்னர் படக்கதை உருவாக்கிய ஆசிரியர்கள் தங்கள் படக்கதையைக் கூறினார்கள். பின்னர்,அதில் ஒரு கதையை எழிலும், இராகேஷும் கதைக்கு  உண்டான அம்சங்களோடு நடித்துக்காண்பித்தனர்.

வண்ணங்களின் பிறப்பு:

    திரு.எழில் : படங்களை மேலும் உயிரோட்டம் உள்ளதாக மாற்ற உதவுவது வண்ணங்கள் என்று கூறினார்.வண்ணங்களின் வகைகள் மற்றும் அதை உருவாக்கும் விதம் பற்றி அறிந்தோம். எந்த வண்ணங்களை கலந்தால் , எந்தெந்த வண்ணங்களை உருவாக்க முடியும் என்பதனை எளிமையாக விளக்கினார் எழில்.

முதன்மை வண்ணங்கள் - நீலம், சிவப்பு, மஞ்சள்

முதன்மை வண்ணங்களை ஒன்றோடு ஒன்று சேர்க்கும் போது பிறக்கும் வண்ணங்களை எடுத்துக் காட்டுடன் இராகேஷ் அவர்கள் விளக்கினார்.

இரண்டாம் நிலை வன்ணங்கள்

நீலம்-  மஞ்சள் = பச்சை

நீலம் - சிவப்பு, =  ஊதா

மஞ்சள் - சிவப்பு =   இளஞ்சிவப்பு

கேப் மாறி போச்சி:

 

ஆம், ஒரு செய்தித்தாள் ஒன்றன் பின் ஒன்றாக சில மடிப்புகளோடு 5 வகை கேப் (ஊயி) ஆகா மாறி விட்டது.

1.    பிஷப் தொப்பி

2.    நேரு தொப்பி

3.    போலீஸ் தொப்பி                    g

4.     பட்டமளிப்பு தொப்பி

5.    இராஜா, இராணி தொப்பி

பெரியவர்கள் ஆகிய எங்களுக்கே ஒவ்வொரு வகை தொப்பியம் செய்து அணியும் போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். நாங்கள் ஒவ்வொருவரும் இராஜாக்களாகவும், இராணிக்களாகவும் மாறிவிட்டோம் அந்த கணத்தில்.

ஒரிகாமி (ஜப்பானின் கலை – காகித மடிப்புக் கலை

காமி- மடித்தல் (மடித்தல்)

ஒரி- காகிதம் (பேப்பர்)

காகித பட்டாம்பூச்சிகள் ஒரிகாமி முறையில் செய்து  பார்த்தோம்.கம்பீரமாக இருந்த எங்களை சிறகடித்து பறக்க செய்தது.  ஆம், காகிதம் மடித்தல் மூலம் அழகான வண்ணத்துப்பூச்சியை செய்து சிறகடித்தோம். அடுத்தபடியாக, நாங்கள் உருவாக்கிய படக்கதையை படக்கதை புத்தகத்தோடு ஒப்பிட்டு பார்த்து அதன் தன்மைகளை அறிந்தோம்.

    எழிலின் இனிமையான குரலில் மேலும் ஒரு பாடல். இந்தமுறை ஆடலும் பாடலுமாக பயிற்சிப் பட்டறை நிறைவடைந்தது.

Grade: 
1, Pre-Primary, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12

Term:

Subject: 
Tamil

0
No votes yet
0
Post a comment