Towards a just, equitable, humane and sustainable society

தேசிய வாசிப்பு நாள்

0
No votes yet
0
Post a comment

நம் எண்ணங்களே நம் செயல்களை தீர்மானிக்கின்றன.அத்தகைய எண்ணங்களை தீர்மானிப்பது நாம் வாசிக்கும் புத்தகங்கள்  தான்.     காந்தியைப் படித்த மனம் அகிம்சை  மீதும், காரல் மார்க்ஸைப் படித்த மனம் கம்யூனிசத்தின்  மீதும் ஈடுபாடு கொள்வது இயல்பு. நல்ல புத்தகங்களை வாசிக்கும் போது நம் மனம் நம்மையும் அறியாமல் அதில் உள்ள நற்கருத்துக்களின் மீது ஈடுபாடு கொள்ளும். வளரும் பருவத்தில் மாணவர்களிடையே காணப்படும் வாசிப்பு பழக்கமானது அவர்களின் சிந்தனையை விசாலமாக்குவதுடன், அவர்கள் படிக்கும் நற்கருத்துகளும் "பசுமரத்தாணி  போல்” அவர்களின் மனதில் பதிந்து விட ஒரு வாய்ப்பாக அமையும். ஆகவே மாணவர்கள் நல்ல புத்தகங்களை தேடி வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாசிப்பு பழக்கம் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் .நல்ல மனிதன் நல்லதொரு சமுதாயம் படைப்பான்.  சீர்மிகு சமுதாயம் படைக்க  உற்றத் துணையாக இருக்கும் இந்த வாசிப்புப் பழக்க்கத்தை மாணவர்கள்பால் கொண்டு செல்ல வேண்டிய தலையாயக் கடமை நமக்கு உள்ளது.  இந்த ஆண்டு நமது இந்திய அரசாங்கம்  22 – ஆவது தேசிய வாசிப்பு நாளை கொண்டாடியது.

அதன் அடிப்படையில், கேரள நூலக இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் மறைந்த பி.என். பனிக்கர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில்  நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஜுன் 19 , 2018 முதல் ஜுலை 19, 2018 வரை தேசிய வாசிப்பு மாதமாகக் கொண்டாட வேண்டுமென நிதி ஆயோக் அறிவுறுத்தியிருந்தது.   

இதனைப் பின்பற்றி, எங்கள் பள்ளியிலும் ஜூன் 19 , 2018 முதல் தேசிய வாசிப்பு நாள் , தேசிய வாசிப்பு மாதம் ஆகியவை கொண்டாடப்பட்டு வருகின்றன.  அன்றைய தினம் பள்ளியின் துணை முதல்வர் அவர்களின் முன்னிலையில், சமூக அறிவியல் ஆசிரியை திருமதி கு. பச்சையம்மாள் வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தையும், தேசிய வாசிப்பு நாள் விழாவின் காரணத்தையும்பற்றி உரை நிகழ்த்தி தேசிய வாசிப்பு நாளைத் தொடக்கி வைத்தார். தமிழில் “ஒரு பழமொழி உண்டு "கண்டதும் கற்றவன் பண்டிதனாவான்  மாணவர்கள் பாட புத்தகங்களுக்கு அப்பால் நல்ல கதை, கவிதை மற்றும் கட்டுரை புத்தகங்களையும், செய்தி தாள்களையும் நாள்தோறும் படிக்கச் வேண்டும். அவற்றில் உள்ள தகவல்களை உட்கிரகித்து ஆசிரியர்களின் உதவியுடன் அதனை சீர்தூக்கிப் பார்க்க பழக வேண்டும் என்பதனை தன் பேச்சில் சுட்டிக் காட்டினார்.  தேசிய வாசிப்பு மாதத்தை  எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி திலகவதி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். அதன்படி, ஒவ்வொரு நாளும் காலைப் பேரவையில் ஒரு மாணவி பாடலோ, கதையோ, நாட்டுப்புற கலையினையோ செய்து காண்பிப்பார். ஒவ்வொரு நாளும் ஒரு அருமையான தொடக்கத்தை உருவாக்கித் தந்துள்ளது இந்த தேசிய வாசிப்பு நாள் கொண்டாட்டம்.

 

Subject: 
Tamil

Term: Term 1

0
No votes yet
0
Post a comment