Towards a just, equitable, humane and sustainable society

நகைச்சுவைக் கதைகள் – பாகம் 1

நகைச்சுவைக் கதைகள் – பாகம் 1

கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் கட்டிப்போடும் மந்திரக்கயிறு. அதிலும் நகைச்சுவைக் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதே இல்லை. குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதிலும் அவர்களை புத்தகம்பால் கவர்வதிலும் இத்தகைய கதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறையில் பயன்படுத்த ஏற்ற வகையில் சில கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள இரண்டையும் எங்களிடம் கேட்டுப் பெறலாம்.

  • மாணவர்கள் வாசிக்க ஏதுவாக பெரிய வண்ண படங்களும் பெரிய எழுத்துக்களும் கொண்ட கதை புத்தகம்
  • கதைச்சுருக்கமும் சில வகுப்பறைச் செயல்பாடுகளும் (மாதிரிகளுடன்) அடங்கிய ஆசிரியர் குறிப்பு

சாப்பாட்டு ராமன் (ஆதாரம்: Story weaver) (TAM209B1 - TAM209B2)

ஒரு எலி தனக்குக் கிடைத்த ஒரு லட்டுவைத் தன் வீட்டிற்குள் கொண்டு செல்ல பல முயற்சிகள் செய்தது. இறுதியாக ஒரு யோசனை தோன்றியது. லட்டு வீட்டுக்குள் சென்றது. ஆனால் எலி!!!  Read more

குட்டியூண்டு முயல் (ஆதாரம்: Book for Children) (TAM209C1 - TAM209C2)

ஒரு தோட்டத்தில் ஒரு கேரட் அளவே இருந்த குட்டி முயல் ஒன்று இருந்தது. அது சின்னதாக இருப்பதால் எப்போதும் கவலையாக இருந்தது. தினந்தோறும் அது மற்றவர்களோடு தன் அளவை ஒப்பிட்டுக் கொள்ளும். மற்ற முயல்கள் கேலி பேசின. ஒரு நாள், Read more…

தாத்தா பூ எங்கே போகிறது? (ஆதாரம்: Book for Children) (TAM209D1 - TAM209D2)

ஒரு தோட்டத்தில் தாத்தா பூ செடியிலிருந்து விதைகள் பறக்கத் தொடங்கின. பறக்கும் வழியில் ஒரு விதை மற்ற சில விதைகளையும் செடிகளையும் சந்திக்கிறது. அவை எப்படி அங்கு வந்தன, மண்ணில் புதைந்து முளைத்தன என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது. ஊசியிலைச் செடி, அவரை, தாமரை, ஒட்டுமுள் செடி. Read more…

அம்மா எங்கே? (ஆதாரம்: Tulika) (TAM209E1 - TAM209E2)

கிரண் தன்னுடைய அம்மாவை சமையலறையில், மாடி முகப்பில், புத்தகங்களுக்கு இடையில், கட்டிலுக்கு அடியில், கணினி முன்...  என்று அனைத்து இடங்களிலும் தேடுகிறான். Read more…

சானைக்காரன் சலீம் (ஆதாரம்: Tulika) (TAM209F1 - TAM209F2)

சலீம் ஊர் ஊராகச் சென்று பல பொருட்களுக்குச் சானை தீட்டுவான். ஆனால், அவன் குடும்பத்துக்குத் தேவையான பணம் கிடைக்காததால், புதிய ஒரு ஊருக்குச் சென்றான். வழியில் காட்டில் ஒரு சிங்கம் அவனைத் தடுத்து, அதன் பற்களையும் நகங்களையும் சானை தீட்டச் சொன்னது. அதற்கு பதிலாக ஒரு பரிசு கொடுத்தது. இதே போல்…  Read more…

மேலும்,

  1. ஆசிரியர் குறிப்பில் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளை வகுப்பறையில் செய்து, மாணவர்களின் படைப்புகளை எங்களுக்கு ‘கற்றல் பயணம்’ (students’ contest)-க்கு அனுப்பி வைக்கலாம்.
  2. உங்களில் வகுப்பறை அனுபவங்களை அடுத்த திசைமானியின் வாயிலாக அனைத்து ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
  3. மாணவர்கள் இக்கதைகளை நாடகமாக நடித்து அவற்றை வீடியோக்களாகவும் அனுப்பலாம்.

Term: Term 1

Subject: 
Tamil

Request Printed Copy