Towards a just, equitable, humane and sustainable society

நல்லொழுக்கங்கள்

வகுப்பு – 2, 3, 4 & 5

கருப்பொருள் – நல்லொழுக்கங்கள்

மொழி வகுப்புகள் மொழித்திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் ‘நல்லொழுக்கங்களைப்’ பற்றி விவாதித்து அவற்றை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இரண்டாம் பருவத்தில் இடம்பெற்றுள்ள பல பாடங்கள் ஒழுக்கங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக,

வகுப்பு 2 – ஓடிவிளையாடு பாப்பா

வகுப்பு 3 – விடியல், திருக்குறள் கதைகள்

வகுப்பு 4 – ஒளிமயமான எதிர்காலம்

வகுப்பு 5 – வெற்றியின் முதல் படி, மூதுரை, திருக்குறள், பெண்கல்வி, ஒற்றுமையே பலம், கும்மியடி பெண்ணே!

போன்ற பாடங்களாகும்.

ஒழுக்கங்கள் பெரும்பாலும் கேட்கப்படுவதால் வளர்க்கப்படவில்லை; ஒவ்வொருவரும் உணர்வதால் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.  மாணவர்களை உரையாடலில் ஈடுபடுத்தத் தேவையான கதைகளையும் வினாக்களையும் சூழலைக் காட்சிப்படுத்திப் பார்க்க ஏதுவாக படங்களையும் கொண்டுள்ளது இக்கட்டுரை. மேலும் மாணவர்கள் எந்த அளவிற்கு உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அறிய, சில குழு மற்றும் தனிச் செயல்பாடுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

கதை 1 (TAM203A - TAM203H)

நாக்கை வம்புக்கு இழுத்தது. அது நாக்கிடம், “ஏ நாக்கே! நானே உன்னை விட உயர்ந்தவன்”என்றது. “நான் தான் பல ருசிகளைத் தெரிய வைக்கிறேன்” என்றது நாக்கு. “நான் தான் உணவைக் கடித்து நொறுக்குகிறேன்” என்றது பல். இப்படியாக சண்டை தொடர்ந்து... (Read more)

கதை 2 (TAM206A - TAM206C)

ஆற்றங்கரையில் ஒரு குரங்கும் ஆமையும் வாழ்ந்து வந்தன. ஒருமுறை ஆற்றில் ஒரு வாழை மரம் மிதந்து வந்தது. குரங்கும் ஆமையும் வாழை மரம் வைக்க ஆசைப்பட்டன. வாழை மரத்தின் மேல்பாகத்தை அடம்பிடித்து குரங்கு எடுத்துக்கொண்டது. சிலநாட்களுக்குப் பிறகு... (Read more)

கதை 3 (TAM207A - TAM207E)

ஒரு காட்டில் ஒரு சிங்கம் மிகுந்த பசியோடு இருந்தது. அதற்கு ஏதாவது உணவு கிடைக்குமா என்று காடு முழுவதும் தேடி அலைந்தது.  அது ஒரு குகையைப் பார்த்தது. உணவு சாப்பிட்டு விட்டு தன் குகைக்குத் திரும்பி வந்த நரி தரையில் சிங்கத்தின் கால்தடத்தைப் பார்த்தது. (Read more)

மேலும்.

இக்கதைகளுக்கான வண்ணப் படங்கள், உரையாடல் கேள்விகள், வகுப்பறைச் செயல்பாடுகள், வீடியோக்கள்...

இணைப்புகள்:

I. பாடத்திட்டங்கள்:

  1. பாடத்திட்டம் – பல்லுக்கும் நாக்குக்கும் சண்டை (TAM203A)
  2. பாடத்திட்டம் – குரங்கும் ஆமையும் வாழை நட்ட கதை (TAM206A)
  3. பாடத்திட்டம் – பேசும் குகை (TAM207A)

II. பட அட்டைகள்:

  1. பட அட்டை - பல்லுக்கும் நாக்குக்கும் சண்டை (TAM203B)
  2. பட அட்டை - குரங்கும் ஆமையும் வாழை நட்ட கதை (TAM206B)
  3. பட அட்டை - பேசும் குகை (TAM207B)

III.வீடியோக்கள்:

  1. ஒற்றுமையே பலம் – https://www.youtube.com/watch?v=FsO-XCszTZY (TAM203D)
  2. வேடனும் புறாக்களும் – https://www.youtube.com/watch?v=UdCbxJr2Ev0 (TAM203E)
  3. சிங்கமும் மாடுகளும் - https://www.youtube.com/watch?v=L_Dj26nHFdg (TAM203F)
  4. நான்கு நண்பர்கள் – https://www.youtube.com/watch?v=eky1SCBmKHw (TAM203G)
  5. பேசும் குகை - https://www.youtube.com/watch?v=nbpL-6rJ2JY (TAM207D)
  6. பேசும் ஆமை -   https://www.youtube.com/watch?v=M1KF6_9HHHM (TAM207E)

IV. செயல்பாடுகளுக்கான ஆசிரியர் குறிப்பு:

  1. காமிக் கதை உருவாக்குதல் (TAM203C)
  2. நாடகம் நடித்தல் (TAM206C)
  3. கதைவரைபடம் தயாரித்தல் (TAM207C)

V. கதை புத்தகம்

  1. நான்கு நண்பர்கள் (TAM203H)

ஆசிரியர் கவனத்திற்கு,

  1. ஆசிரியர்கள், தங்கள் வகுப்பிற்குத் தேவையான எந்த ஒரு கற்றல் வளத்தையும் கேட்டுப் பெறலாம்.
  2. ஆசிரியர் குறிப்பில் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளை வகுப்பறையில் செய்து, மாணவர்களின் படைப்புகளை எங்களுக்கு ‘கற்றல் பயணம்’ (students’ contest)-க்கு அனுப்பி வைக்கலாம்.
  3. உங்களில் வகுப்பறை அனுபவங்களை அடுத்த திசைமானியின் வாயிலாக அனைத்து ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
  4. மாணவர்கள் இக்கதைகளை நாடகமாக நடித்து அவற்றை வீடியோக்களாகவும் அனுப்பலாம்.

Term: Term 2

Subject: 
Tamil

Request Printed Copy