Towards a just, equitable, humane and sustainable society

திருவிழாக்கள்

முன் மழலையர் கல்வி

கருப்பொருள் - தேசிய திருவிழாக்கள்   

பொங்கல் விழா - பொங்கல் செயல்முறை (இம்மாதிரியே மற்ற எல்லா பண்டிகைகளுக்கும் பின்பற்றலாம்).

முதல் நாள்

முதல் நாள் பொங்கல் விழா பற்றி குழந்தைகளுடன் உரையாடி பின்னர் வாய்மொழியாகக் கதைக்குள் செல்லலாம்.  

I. ஆசிரியர் குழந்தைகளுடன் பொங்கல் விழா எவ்வாறு கொண்டாடினார்கள் என்று கேட்கலாம். குழந்தைகள் சொல்வதைக் கரும்பலகையில் வரைந்து அதற்குரிய சொற்களை எழுதலாம். 

II. வரைபடங்கள் மற்றும் பட அட்டைகள் மூலமாகப் பொங்கல் செய்வதற்கான செயல்முறைகளைப் பற்றி விவாதிக்கலாம். 

இரண்டாம் நாள்

கதை மற்றும்  செயல்பாடுகள்

1) கதை சொல்லல் - பொங்கல் பண்டிகை  

இந்தப் பாடத்தில் பொங்கல் செய்முறையைப் பற்றி வருகிற வார்த்தைகளை  எல்லாம் இரண்டாம் நாளில், ஒவ்வொன்றாகக் கரும்பலகையில் வரைந்து அம்புக்குறியிட்டு எழுதவும். இதன் மூலமாகக் குழந்தைகள் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் மற்றும் வரிசைப்படுத்துதல் ஆகிய திறன்களை அடைவர். 

குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் படத்தைக் காண்பிக்கும் போது அதனுடன் சேர்த்து வார்த்தையையும் காண்பிக்க வேண்டும். 

2) வண்ணமிடுதல் - கோடிட்ட படங்களில் - பொங்கல் பானை, கரும்பு, பசுமாடு, காளை மாடு. (குறிப்பு: வண்ணம் தீட்டலுக்குப் பதிலாக வேறு செயல்பாடுகளை ஆசிரியர் திட்டம் தீட்டலாம் . எ.கா - பிட் போஸ்டிங், மண் கொண்டு ஒட்டுதல், பஞ்சு கொண்டு ஒட்டுதல். ஒன்று அல்லது இரண்டு செயல்பாடுகளை  மாணவர்களின் ஆர்வம் மற்றும் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு திட்டம் தீட்டலாம். 

மூன்றாம் நாள்

கதை - வலுவூட்டல்(Reinforce)

1. படங்களைக் கண்டறிந்து பொருத்துதல் - ஆசிரியர் படத்தைக் காண்பித்து அதற்குரிய வார்த்தையையும் காண்பித்தல் (வட்டமாக உட்காரவைத்துச் செய்தால் அதிக பயனைத் தரும்.) 

2. கோடிட்ட படங்களுக்கு வண்ணம் இடுதல். (இரண்டாம் நாளுடைய மூன்றாம் குறிப்பு) 

நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களில்

1. மூன்றாம் நாளுக்குரிய செயல்பாடுகள். 

2. குழந்தைகள், பட அட்டையில் உள்ள வார்த்தைகளைப் பார்த்துக் கோடிட்ட படங்களுக்குக் கீழாக எழுதலாம். 

3. விழாக்கள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு படத்தைக் குழந்தைகள் வரையலாம். 

மற்ற வாய்ப்புகள்

கதை கூறலுக்குப் பதிலாக கதை மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஆசிரியர் கதையில் வருகிற படங்களைக் கரும்பலகையில் ஒட்டியோ அல்லது Flannel board – ன் மேல் உப்பு காகிதம் பயன்படுத்தி குழந்தைகளுக்குக் காட்சி மற்றும் செவிப்புல உள்ளீடுகள் கொடுக்கலாம். 

Grade: 
Pre-Primary

Term: Term 3

Subject: 
ECE

Request Printed Copy