Towards a just, equitable, humane and sustainable society

கதை என்னும் மந்திரக்கோல்

கதைகூறல் மூலமாக மழலையர்களுக்கு வாசித்தலின் மீது ஓர் ஈடுபாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சி.

கதை – கற்றலுக்கான சூழல்

அன்னையின் கைவிட்டு ஆசிரியரின் கையைப்பிடிக்கும் குழந்தைக்குக் கற்றல் சூழ்நிலையை உருவாக்குவது என்பது ஒரு கடினமான செயலாகும். குழந்தைக்கு ஏற்ப கற்றல் சூழ்நிலையை உருவாக்குவதை விட தன்னம்பிக்கையையும், அன்பையும் ஆசிரியர் அளிக்க வேண்டும். இவ்விரண்டையும் குழந்தைகள் மனதில் கொண்டு வந்துவிட்டால் பெற்றத்தாயையும் விட ஆசிரியரையே அக்குழந்தைக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

கதைகூறலின் விளைவுகள்

கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் ஆசிரியர் கற்றல் சூழ்நிலையை உருவாக்கலாம். கதை என்றால் எல்லாக்குழந்தைகளுக்கும் மிகப்பிடித்த ஒன்று. கதை மூலம் குழந்தைகளுக்கு நாம் நிறைய கற்றுக்கொடுக்கலாம். அவர்களுக்குத் தெரிந்த, பிடித்த பொருள்களைக் கொண்டு  கதையை உருவாக்கலாம்.

அப்படிக் கதை சொல்லும் போது அவர்களுடைய கற்பனைத்திறன் வளர்ச்சி அடையும். அதன் மூலம் அவர்கள் கதையை வேறு பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். கதை கேட்பதன் மூலம் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். பலவகை உணர்ச்சிகளைக்( அழுகை, சோகம், மகிழ்ச்சி) கற்கிறார்கள். அவற்றை நம்மிடம் கதை சொல்லும் போது அவர்களுடைய நண்பர்களுக்குக் கதைசொல்லும் போதும் வெளிப்படுவதை நாம் கண்டறியலாம். கதை கூறும் போது வார்த்தைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளும், உடலில் நாம் செய்யும் அசைவுகளும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருப்பதால் குழந்தைகள் எளிதில் கதையைப் புரிந்து கொள்ள முடிகிறது. கதை கேட்பதனால் கவனிக்கும் திறனும் வினா கேட்கும் திறனும், அடுத்து என்ன இருக்கும் என்று ஆராயும் திறனும் வளர்கிறது.

வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது

படங்களின் மூலமாகக் கதை கூறினால் எழுத்துகள் தெரியாமலேயே கதையை மிக அருமையாக வாசிப்பார்கள். கதையைப் பார்த்துப்பார்த்து வாசிக்க அவர்களுக்கு எழுத்துகளும் நாளடைவில் பழகிவிடும். இதன் மூலம் வார்த்தைகள் மூலமாக எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்கலாம்

கதைசொல்லல்- பாடத்திட்டம்

*குறிப்பு:

குழந்தைகள் ‘க்ராபிகள் வாசிப்பின்’ முலம்’ விளையாடும் போது அல்லது ஓய்வு நேரத்தின் போது அல்லது எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் தாங்களாகவே வாசிப்பார்கள்.

வகுப்பறை செயல்பாடுகள்

கதையில் உள்ள உருவங்கள், பொருட்களை நாம் செயல்பாடுகள் மூலம் உதாரணமாக வண்ணம் தீட்டுதல், பொருத்துதல் செய்வதால், கதை அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கும். அவர்கள் வண்ணம் தீட்டிய பேப்பரைச் சுவரில் ஒட்டி வைத்தால் அவர்களுடைய மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை அளவிட முடியாது.

கதைமூலம் ஆசிரியர் குழந்தைகள் மனதில் இடம்பிடிப்பது மட்டுமின்றி, அவர்களுடைய கற்றல்திறன் ஊக்குவிப்பதற்குக் கதையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியடையலாம்.

 

சிவகாமசுந்தரி, அ.தொ.ப, இந்திராநகர்.

தமிழ்மலர், அ.தொ.ப, குண்டுபாளையம்.

Subject: 
Grade: 
Term: 
Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner