Towards a just, equitable, humane and sustainable society

கல்வி கண்ணோட்டம்

கல்வி சம்பந்தமாக எழும் நிறைய கேள்விகளுக்குக் கவிதைகளின் மூலம் விளக்கம்

முன்னுரை:

கல்வி என்பதைப் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் பலவாகப் பகிர்ந்துள்ளனர். கல்வி என்பது,

க - கல்லாமையை (அறியாமையை)

ல் - இல்லாமல்

வி – விளைவிப்பது, சிந்தனைகளைத் தெளிவிப்பதும் எனலாம்.

'கல்வி என்பது, அறியாமை இருள்போக்கும் அகல் விளக்கு”

'கல்லாமையைக் களையெடுக்கும் கருவி”

கல்வி எனும் போது... சில கேள்விகள் எனக்குள்ளே... கல்வி என்பது பேனா முனை மட்டுமா? கல்வி என்பது புத்தகம் மட்டுமா? கல்விக்குப் பணம் தடையா? கற்றவரால் மட்டும்தான் பண்பாளராக இருக்க முடியும்? கல்விக்கும் அன்பிற்கும் தொடர்புண்டா? கல்வி ஆளுமைத்திறனை வளர்க்கிறதா? கற்றல் பள்ளிக்கூடத்தில் மட்டும் தானா? ஆசிரியர் என்பவர் யார்? கற்றல் - கற்பித்தல் எப்படி நிகழ்கிறது?

என்னைப் பொறுத்தமட்டில் கல்வி என்பது...

 

பேனா முனை மட்டுமா...

கல்வி என்பது பேனா முனையல்ல...

விரல் நுனி ஆடும் விளையாட்டு...

கற்றலின் - மூளை கூறும் பதில் கேட்டு

கோலம் போடும் பேனா முனை

 

கல்வி என்பது புத்தகம் மட்டும் தானா...

புத்தகம் விழிக்கும் வேளையிலே..

கண்கள் திறக்கும் பார்வையிலே

மூளையின் ...

 

கல்வி - அன்பிற்கும் தொடர்புண்டா..

நீர் புத்தகத்தை நேசிக்கனும்

புத்தகம் உம்மை சுவாசிக்குமே..

அதன் கருத்துகள் உம்மை வாசிக்குமே..

நீர் புத்தகத்தை நேசி

உண்டு - கல்விக்கும் அன்பிற்கும் தொடர்புண்டு

 

யார் யார் ஆசிரியர்?

கருவறைத் தாய் முதல் ஆசிரியர்

வகுப்பறையிலும் ஆசிரியர் தாய்

நல்லது சொல்லும் ஆசானை

நாமும் இனம்காணும் வேளையிலே

எல்லோரும் ஆசிரியர்...

 

கல்வி ஆளுமைத் திறனை வளர்க்குமா!

நிச்சயம் ஆளுமை வளர்க்கிறதே..

ஊற்றும் - நீரும் உரமும் வேரினிலே

அளவுக்கு மீறி வேண்டியில்லை

அளவோடு இருந்தால் போதுமென்றே

காயும், கனியும், ருசியாகும்

நிழலும் கூட நிதம் தருமென்றேன்

கல்வி ஆளுமைத் திறனை வளர்க்கின்றதே...

 

கற்றல் பள்ளிகூடம் ... மட்டும் தானா...

கற்றல் எங்கும் நிறைந்திருக்கும்

கண்களைத் திறந்துக் கொண்டிருந்தால்

கற்றல் கண்ணைக் கவர்ந்திடுமே...

வீடும் நாடும் பள்ளியுமே

கற்றலை அள்ளித் தருகிறதே

கரம் நீட்டி வாங்கிடத்தான்

இரண்டு கைகள் வேண்டுமென்றே

அள்ளித் தரும் வானம்போல்

கற்றல் எங்கும் நிறைந்திருக்கும்.

 

கல்விக்குப் பணம் ஒரு தடையா...

பணம் ஒன்றும் வேண்டியில்லை

பந்தயக் கார உலகினிலே - கல்விக்குப்

பணம் ஒன்றும் வேண்டியில்லை (தடையில்லை)

கற்றல் எங்கே இல்லையென்று

கேள்வி எழுப்பும் வேளையிலே

கற்றல் இல்லா இடமில்லை

வீதியிலே... வீட்டிலே.. பள்ளியிலே..

செல்லும் இடமெங்கும் கற்றலின்

கண் திறக்கையிலே...

உற்று நோக்கி கற்க பணம் எதற்கு?

கல்விக்குப் பணம் ஒரு தடையில்லை..

கற்றவரால் மட்டும் தான்

பண்பாளராக இருக்க முடியுமா!

இல்லை.. இல்லை

பாமரர் கூட கற்கின்றார்...

அனுபவ அறிவை தழுவையிலே - நல்ல

அனுபவ அறிவை தழுவையிலே

கற்றல் ஒன்றும் தடையில்லை...

கேட்கும் செவிக்கும் விருந்தளிக்கும்

கற்றல் அங்கும் நடக்கிறதே...

பாமரரும் பண்பாளனே...

 

கற்றல் கற்பித்தல் எப்படி?

பூவும் நாரும் போலவே..

உடலும் உயிரும் போலவே...

நகமும் சதையும் போலவே..

கற்றல்-கற்பித்தல் இரண்டுமே

சேர்ந்து வெளிச்சம் தந்திடுமே

கல்வி வெளிச்சம் தந்திடுமே..

 

லீனா, அ.தொ.ப., தவளக்குப்பம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management