Towards a just, equitable, humane and sustainable society

அறிவியல் கற்பித்தலில் இணையமும் மன வரைபடமும்

அறிவியல் கற்பித்தல்:

அறிவியல் கற்பித்தல் என்ற தலைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து நோக்கங்களையும்  வென்றடைவதன் மூலம் மாணவர்களை மாசற்ற பண்புடைய, அறிவியல் திறனுடைய  குடிமக்களாக  உருவாக்குவதற்கு மிகவும் பயனளிக்கும்.

கற்பித்தலுக்கு வலைப்பின்னல்:

பாடத்தின் ஒரு தலைப்பிற்கு இன்றைய இணையதள  கணினி உலகில், you tube-ல்  இருக்கிற பல்வேறு விஷயங்களைத் தேடி, ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கப்படங்களை மாணவர்களுக்கு வழங்கும்போது,  வெவ்வேறு கற்றல் படி நிலைகளில் உள்ள மாணவர்கள் எளிதாக அவரவர் திறமைக்கேற்ப பல முயற்சிகளை மேற்கொண்டு கற்கின்றனர்.  இறுதியில் புரியாத நிலையில் உள்ள மெல்ல மலரும் பூக்களைப்போன்ற மாணவர்கள் (SLOW LEARNERS) தெளிவுபெற, ஆசிரியர்  மேலும் புதியதொரு செயல் விளக்கம் தருவதோடு மட்டுமல்லாமல் ,  மாணவர்களே அவரவர்தம்  பாணியில் கற்றுக்கொள்வதற்கான அடிப்படைகளைச் சொல்லிக்கொடுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டும்.

ஒரு கருத்தினை பலவகையான செயல் விளக்கங்களுடன் தெளிவுபடுத்தும்போதே சிலநேரங்களில் மாணவர்களிடையே தேக்கம் ஏற்படும்,  இம்மாதிரியான இணையக் கற்பித்தல் கருவிகளின் உதவி இருக்கும் சூழலிலேயே  இந்நிலை என்றால், மாணவர்களின்  வயது மற்றும் IQ புரிதலுக்கு ஒவ்வாத  ஒற்றை முறையான போதித்தல்(Lecture) வழியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்பொழுது  பெரும்பான்மையான மாணவர்கள் மனதளவில் விளக்கம் தேவைப்பட்டாலும்,  வாய்திறவாதவர்களாய் அமர்ந்திருப்பதை எல்லாம்  ஆசிரியர்களாகிய நாம் உணர்ந்தும்  உணராமல்  இருப்பது நமது தற்காலக் கல்வி நிலையின் அவலமாகும். இந்த அவலநிலையை உணர்ந்து  நம்முடைய கற்றல்-கற்பித்தல் முறைகளை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

அறிவியல் கற்றலுக்குத் தடையாக இருக்கும் எழுத்தறிவு இடைவெளியைச் சரிசெய்தலில் மனவரைபடத்தின் பங்கு:

மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே அவர்கள் பருவமடைவதற்கான மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த வயதில் மாணவர்கள், ஆசிரியர் சொல்லிக் கற்றுக்கொள்வதை விட சக மாணவர்களுடன் சேர்ந்து விவாதித்து அறிந்துகொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் புரிந்துகொள்ளும் திறனும் அதிகரிக்கும். அதுபோன்ற நிகழ்வுகளுக்கு இம்மாதிரியான குழுக்கற்றல் முறை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மனவரைபடமானது பல கருத்துகளின் எளிய படம் (picture) வடிவம் கொண்டதாகும். மனவரைபடம், மாணவர்கள் பாடத்தை நினைவு கூறுவதை  எளிமைப்படுத்துவதோடு நேரத்தை மிச்சப்படுத்தி கருத்தியல் புரிதலை அதிகப்படுத்துகிறது.

அறிவியல் கற்றலுக்குத் தடையாக இருக்கும் எழுத்தறிவு இடைவெளியைச் சரிசெய்தலில் மனவரைபடம் பெரும் பங்கு வகிக்கின்றது.  நான்கு வரிகளை விடைகளாகக் கொண்ட கேள்விக்கு மாணவர்கள் மனவரைபடத்தின் ஒரு சிறிய பகுதியை (அ) தொகுப்பினை (அ) கிளையைத் தருவது  எழுத்தறிவு இடைவெளியைச் சரி செய்யப் பயன்படுகிறது. மாணவர்கள் பொருள் விளங்கித்தான் பதில் அளித்துள்ளனர் என்பதை ஆசிரியர்களால்  இதன் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது.

(எ-கா) ஒன்பதாம் வகுப்பு அறிவியலில், பலவகையான நிலைமாற்றங்களைக் கண்ணாடி போன்று வரைந்து அதைத் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் மூக்குக்கண்ணாடியாக மாணவர்கள் மனதில் நிலைக்கச்செய்வது  கற்றலை எளிமையாக்கும்.

மேற்கண்ட பலவகையான நிலைமாற்றங்களைப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் மாணவர்களுக்கு விளக்கி, பிறகு வினவியபோது, ஒரு சில மாணவர்கள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டது இதைவிட  எளிமையாக இருக்கிறது என்றனர்.  மாணவர்களின் கற்கும் கோணங்கள் பலதரப்பட்டவை என்பதையும் மாணவர்களின் தனியார் வேறுபாடுகளையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

மனவரைபடத்தில் மாணவனுக்கு முதல்நாளே மறுநாள் கற்க வேண்டிய பாடத்தின் சிறு பகுதி குறித்துத் தரப்படுகிறது.  அந்தப் பாடப்பகுதியில் உள்ள கடினமான வார்த்தைகளுக்கு சகமாணவர்களிடமே விளக்கங்களைப் பெற முயலும் போது,  தெரியாத மாணவனும் நாளைய பாடப்பகுதியில் தானே முயன்று தன் வகுப்பு மாணவர்களிடம் இருந்து  பொருள் கற்றுக்கொள்ள முயற்சி செய்யத் தூண்டுகிறது. மாணவர்களால் சரியான விளக்கங்கள் தர இயலாத போது, வழிகாட்டி ஆசிரியர் (Facilitator) பல கிளர்வினாக்களைக் கேட்டு மாணவர்களைக்கொண்டே  விளக்கங்கள் தர முயல வேண்டும்.  விளக்கங்கள் பெற்ற மாணவர்கள் மறுநாள் அவர்களுக்கு உரித்தான முறையிலும் புரிந்த அளவிற்கும் முக்கியமான வார்த்தைகளைக்கொண்டு மனவரைபடம் வரைந்து மறுநாள் வகுப்பறையில் மாணவர்கள் முன்பு,  ஏன்?  எவ்வாறு?  எப்படி? வரைந்தேன் என்று விளக்ககங்களைக் கொடுக்க  வேண்டும். பாடத்தின் அந்தப்பகுதி அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா?  என்று பார்க்கப்பட வேண்டும்.  மனவரைபடத்தில் பிழைகள்  என்பதே கிடையாது. இவ்வாறு பாடத்தின் ஒரு பகுதியை மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் விளக்கிய பிறகு இறுதி ஆலோசனைகள் கொடுத்து வழிகாட்டி ஆசிரியர் (Facilitator) கற்றலை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச்செல்வார். இப்படியாகப் பாடத்தின் பகுக்கப்பட்ட எல்லாப் பகுதிகளையும் இணைத்து,  பாடத்தின் ஒட்டுமொத்த மனவரைபடம் வரையப்பட்டால், மேற்கண்ட பாடத்தின் கற்றல் ஆழமாக நிகழ்ந்து,  அடுத்த ஆண்டிற்கான தொடர் கற்றலை அதிகப்படுத்தி அறிவை விரிவடையச்செய்யும்.

செயல்வழிக்  கற்றலில் (ACTIVE LEARNING METHODOLOGY(ALM))

  1. தனிநிலைக்  கற்றல் (INDIVIDUL STUDY)
  2. குழுக் கற்றல்( PEER STUDY)
  3. (SQAR METHOD)
  4. செய்முறைக் கற்றல் (DEMONSTRATION METHOD )

ஆகிய நான்கு முறைகளைப் பின்பற்றி அனைத்துப் பாடங்களின் (ALL SUBJECTS) கற்றலைக் கரும்பின் சுவையைவிட இனிமையானதாக்கலாம்.

RULES TO BE FOLLOWED TO DRAW A MIND MAP 

Teacher: Fazoul

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management