Towards a just, equitable, humane and sustainable society

திறன் வளர்க்கும் உரையாடல்

குழந்தைகளிடையே தேடலை உருவாக்காமல் தேடி அடைந்த அனைத்தையும் போதிக்கும் இடமாகப் பள்ளி இருக்கிறது. கல்வி அமைப்பு, பாடத்திட்டங்களின் வழியே குழந்தைகளிடையே கற்றல் திறனைக் குறித்த காலத்தில் அடையச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பினையும் ஆசிரியர்களிடையே  கட்டாயப்படுத்துகிறது. இப்படியான சூழல் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இயந்திரங்களாகவே மாற்றுகிறது.

மாணவர்களின் தயக்கம் :

"Out in the field with God” - எட்டாம் வகுப்புப் பாடத்தில் வரும் கவிதை. கவலை தோய்ந்த மனதுடைய ஒருவன் இயற்கை வெளியில் புத்துணர்வு பெற்று, தன்னைச் சூழ்ந்து நின்ற பயத்தை வென்று, மீண்டும் நம்பிக்கை நிறைந்தவனாகத் தன்னைக்  கண்டடைவது குறித்த பாடலாகும்.

இப்படியான பயம் சூழ்ந்த மனிதர்களாகவே  இன்றைய குழந்தைகள் வாழ்ந்து வருவதால் பேசுவதில், வினா எழுப்புவதில், போட்டிகளில் கலந்து கொள்வதில், புதிய ஒரு செயலை முயற்சித்துப் பார்ப்பதில் என எல்லாவற்றிலும் தயக்கத்தோடு ஒதுங்கி இருப்பவர்களாகப் பெரும்பான்மை மாணவர்கள் இருக்கின்றனர்.

தயக்கத்தை வென்ற உரையாடல்:

மாணவர்களின் தயக்கத்தைப் போக்குவதற்காக, பின்வரும் தலைப்புகளில் உரையாடலை வகுப்பில் ஆரம்பித்தேன்:

  1. அவர்களுக்காக அவர்கள் செலவிடும் நேரம் எத்தன்மை வாய்ந்தது
  2. சிக்கல் நிறைந்த நேரங்களில் அவர்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொண்டார்கள்
  3. ஒரு நாளில் குறைந்தபட்ச  நேரமாவது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு பிடித்த காரியங்களில் ஈடுபடுதல்
  4. புதிய செயல்களை முயற்சித்துப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சி

அடைவுகள்:

  1. வகுப்பறையில் இயல்பான உரையாடல்
  2. பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளுதல், நடிப்பில் ஆர்வம் கொள்ளுதல், மேடையேறி நடித்தல்.

இவ்வாறான உரையாடல்களை  மேற்கொள்வதன் மூலம் மாணவர்களிடையே நிலவும் பய உணர்வைப் போக்கி அவர்கள் தங்களாகவே புதிய முயற்சிகளை  மேற்கொள்ளவும், தயக்கமின்றி முன்னேற்ற பாதையில் பயணிக்கவும் உறுதுணையாக இருக்க முடிகின்றது.

Teacher: க.சம்பத், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அவினாசி ஒன்றியம்.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management