Towards a just, equitable, humane and sustainable society

GMS நல்லவாடுவில் நடந்த ஆண்டு விழாவின் சிறப்பு அம்சங்கள்

எமது பள்ளியில் 27.03.2018 செவ்வாய் அன்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. மாலை 3.00 மணியளவில் தொடங்கப்பட்ட விழாவிற்கு திரு.எஸ்.ஜோசப் (TGT) வரவேற்புரை வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் திரு.பி.சங்கர (HM) விழாவிற்குத் தலைமையேற்று நோக்கவுரை வழங்கினார். திருமதி.பி.இராஜலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திரு.சி.குமார் (DIS.ZONE III) திரு.எம்.ஜி.இராபர்ட் கென்னடி (DIS ZONE IV ) திரு. பக்கிரிசாமி (DIS. ZONE V) பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. வேளாங்கன்னி வீரகுமார், ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், திருமதி விமலா மற்றும் பூரணாங்குப்பம் கிராம நிர்வாகி அதிகாரி திரு T.சிவப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

ஒவ்வொரு வகுப்பிலும் கல்வி, வருகை ஒழுக்கம், தூய்மை ஆகியவற்றில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவ – மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக திரு.ஆர்.தனராஜா FAT நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Author: Dhanavandhini 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management