Towards a just, equitable, humane and sustainable society

காந்தி 150 - சத்தியம், சாந்தி, அகிம்சை

0
No votes yet
0
Post a comment

காந்தி என்றால் நம் அனைவருக்கும்  முதலில் நினைவுக்கு வருவது அகிம்சை. ஆம்! வன்முறையில்லா வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நம்மை ஆழமாக உணரச் செய்தவர் காந்தி. அவர் நம்மை விட்டு விலகினாலும் அவரது எளிய வாழ்க்கை முறைஎடுத்துரைத்த சிந்தனைகள் நம்மைச் சுற்றித்தான் உள்ளன. காந்தியின் 150 வது பிறந்தநாள் வருடத்தையொட்டி அவர் பின்பற்றிய சத்யம்சாந்தி மற்றும் அகிம்சையை இந்தச் சிறு காணொளி நமக்கு  நினைவுபடுத்தும். 

காந்திய  சிந்தனைகளை கதை மூலம் சுவாரசியமாக நினைவுப் படுத்துகிறார் கவிஞர் மீனாட்சி அக்கா. 

 

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வன்முறைகளை பார்த்திருப்போம். நம்மைப் போல குழந்தைகளும் பல வன்முறைகளைப்  பார்கிறார்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்அவற்றை எப்படிப்  பார்க்கிறார்கள்என்ன தீர்வு காண விரும்புகிறார்கள்என்பவற்றை அவர்களிடையே கதையாடி உரையாடல் மூலம் வெளிக்கொண்டு வர வேண்டியுள்ளது. இந்தக் காணொளி அந்த விவாதத்திற்கான  ஒரு தூண்டுகோலாக அமையும்.  

 

கோயம்புத்தூர் அடுத்த ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில்  யானைகளின் நடமாட்டம் அதிகம். யானைகள் காலங்காலமாகப்  பயன்படுத்தி வரும் வழிகளில்  நாம் வீடுகளைக் கட்டியுள்ளோம். இது ஒரு வகை வன்முறை. அதன் வழியில் செல்லும் யானைகளை  வெடிகுண்டு,  தீப்பந்தம் போன்றவற்றைக் கொண்டு விரட்டுவது வேறொரு வகை வன்முறை. இச்சூழலில் ஒரு பதிமூன்று வயதுச்  சிறுவனுக்கு வந்த ஒரு யோசனை -  வன்முறையில்லாமல் யானைகளை எப்படி காட்டுக்குள் விரட்டலாமென்று! அவன் அப்படி என்ன செய்தான்?! அவன் யோசனையால்  யானைகள் திரும்பிச் சென்றனவா?  வாருங்கள் கேட்போம் மீனாட்சி பாட்டி சொல்லும் கதையை!  

Image credit: mkgandhi.org

 

 

Grade: 
1, 2, 3, 4, 5, 6, 7, 8

Term:

Subject: 
English, EVS, Social Science, Tamil

0
No votes yet
0
Post a comment