Towards a just, equitable, humane and sustainable society

கல்விச் சாரல்

0
No votes yet
0
Post a comment

கல்விச் சாரல்

 

தொடக்கப் பள்ளி மாணவர்களின் பன்முக ஆற்றலை வளர்த்தெடுக்கும் பள்ளி அளவிலான அமைப்பு.

எங்களது பள்ளியில் தற்போது வேலை செய்யும் அனைத்துத் தொடக்கப் பள்ளி  ஆசிரியர்களும் பிப்ரவரி 2016 பள்ளிக் கல்வித்துறை மூலம் பணியிட மாற்றம் பெற்று அரசு உயர்நிலைப் பள்ளி பனித்திட்டில் பொறுப்பேற்றவர்கள்.

          இந்தப் புதிய பள்ளிக்கு வந்தடைந்து ஐந்து மாதங்கள் கழிந்தன. மாணவர்களின் அறிமுகம், அவர்களின் கற்றல் திறன், பாடம் சார்ந்த திறன்கள் குறித்தும் எங்களால் அறிய முடிந்தது.  2016-2017 புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் தலைமையாசிரியர் தலைமையில்  எங்களது பள்ளியில் பணிபுரியும் ஐந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்கள் குறித்தும், கல்வியாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்தோம், இறுதியாகச் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.   அவை,

          1. Mission - 3 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கற்றல் திறனை ஒவ்வொரு மாணவனும் பெறும் வகையில் கற்பிக்கும் செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது.

          2. பள்ளி அளவில் மாணவர் தின விழா, சுதந்திர தின விழா, குழந்தைகள் தின விழா, குடியரசு தின விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா போன்ற  விழாக்களை ஏற்பாடு செய்து பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் நிக்ழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது.

          3. வட்ட , மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படும் ஓவியப் போட்டி , விளையாட்டுப் போட்டி, அறிவியல் கண்காட்சி போன்ற  போட்டிகளில் எம் பள்ளி மாணவர்களைப் பங்கேற்கச் செய்து வெற்றி பெறச் செய்வது.

          4. ஒவ்வொரு பருவத்தேர்வின் முடிவிலும் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடத்தி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த வழிவகை செய்வது.        

          மேற்கூறப்பட்டுள்ள குறிக்கோள்கள் , எங்களது பள்ளியை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக உயர்த்தும், மேலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் என்று எண்ணினோம்.

          எனவே, குறிக்கோள்கள் வெற்றி பெறும் வகையில் எங்களது கற்பித்தல் செயல்பாடுகளை  வகுத்துக் கொண்டோம்.

          இதனிடையே பள்ளி நிகழ்ச்சிகளிலும், வட்ட அளவிலான போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்க அச்சம் கொள்வதையும், அவ்வாறு பங்கேற்ற மாணவர்களால் சாதிக்க முடியாமல் போவதையும், இது குறித்து மீண்டும் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் கூட்டத்தில் மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்படுகளில் அவர்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிக் கலந்தாலோசித்த போது தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்குக் கேட்டல் ,பேசுதல்,  எழுதுதல், படித்தல், கணக்கிடுதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குப் பாடம் சார்ந்த செயல்பாடுகளான,

          1. விளையாட்டு

          2. ஓவியம்

          3. கைவினை

          4. ஆங்கிலம் பேசுதல்

          5. கணினி

          6. பொதுஅறிவு

          7. நன்னெறி

          போன்றவைகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று. இந்த இடத்தில் தான் கல்விச்சாரல் என்ற அமைப்பு எங்களது பள்ளியில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த அமைப்பை முறையாக துவங்குவதற்கு முன் சோதனை முறையில் வாரத்தின் மூன்று நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) இறுதி பாடவேளையில் இப்பயிற்சி அளிப்பதற்கு ஆவன செய்யப்பட்டது. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இறுதி பாடவேளையின் பொழுது  அனைவருக்கும் ஒரே வகுப்பறையில் பயிற்சி அளிக்கப்பட்டது, கால அட்டவணைகளின் வகுப்புகள் பாதிக்கப்படாதவாறு மாற்றம் செய்யப்பட்டது.

           பாட இணைச்செயல்பாடுகள் ஆசிரியரின் விருப்பத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்றாற்போல் பிரித்து வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் உறுதி செய்தோம்.

 

 

கல்விச்சாரல் அமைப்பின் உறுப்பினர்கள்:

வரிசை எண்

பெயர்

நிர்வகிக்கும் குழு

கற்பிக்கப்படும் பாட இணைச்செயல்பாடுகள்

1

K. கவிச்செல்வன்

தலைவர்

 

2

S. இந்துமதி

உறுப்பினர்கள்

வாழ்வியல் நெறிகள்

3

R. குருநாதன்

உறுப்பினர்கள்

பயன்பாட்டு அறிவியல்

4

G. தமிழ்வேந்தன்

உறுப்பினர்கள்

மொழியறிவோம் ( ஆங்கிலம்)

5

S. தேவிமணி

உறுப்பினர்கள்

உலகை அறிவோம் (பொது அறிவு)

6

K. கார்த்திக்குமரன்

உறுப்பினர்கள்

நுண்கலைத் திறன் (கைவினை)

7

M. பாரதி ராஜா

உறுப்பினர்கள்

ஓடி விளையாடு

8

S. சத்தியராஜ்

உறுப்பினர்கள்

கணினிப் பயிற்சி

 

வகுப்புகள் தொடர்ந்து எடுக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் பங்கேற்றுச் செயல்பாடுகளைச் செய்ய முன்வந்தனர். மாணவர்கள் தனிநபர்களாக அல்லாமல் குழுக்களாகப் பாரட்டப்பட்டனர். கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அதிக அளவில் ஈடுபாட்டுடன் கலந்துகொள்வது ஒரு ஆசிரியராக எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

          மேலும், 1. எரிசக்தி சேமிப்பு குறித்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில்  தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர்களில் எங்கள் பள்ளியில் இருந்து 1.V.ஜெயராம்,   2. S. சாரதி ஆகிய 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

          2. பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சியில் எங்கள் பள்ளி மாணவி     s. மகாவிஷ்ணி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய செயற்கைக் கையைக் காட்சிப்படுத்தி அனைவரின் பாரட்டையும் பெற்றதால் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட்டாள்.

          இதுபோன்ற சிறு சிறு வெற்றிகளால் எங்கள் பள்ளியில் கல்விச்சாரல் அமைப்பு முறைப்படி “நவம்பர் 14” குழந்தைகள் தினத்தன்று திரு V. நடராஜன் தலைமையாசிரியர் நிலை-I மற்றும் திரு. T. கவிச்செல்வன் தலைமையாசிரியர் நிலை -II, பொறுப்பாசிரியர்  திரு.S. ஞானவேல் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி R.ஜெயந்தி அவர்களின் திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றி பெயர்ப் பலகையோடு தொடங்கி வைக்கப்பட்டது.

           எங்கள் பள்ளி மாணவர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற கல்விச்சாரல் அமைப்பின் உறுப்பினர்களான ஆசிரியர்கள் தொடர்ந்து அவர்களது பங்களிப்பை வழங்கிகொண்டிருக்கிறார்கள்.

          மேலும் மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி – 2016 ல் ஆசிரியர் காட்சிப்பொருளில் ஆசிரியர் திரு. R.குருநாதன் அவர்கள் கல்விச்சாரல் அமைப்பு பற்றியும், கற்பிக்கச் செய்யப்பட்ட மாதிரிகளையும் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படைப்புக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்தப் பரிசு எங்கள் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

Term:

0
No votes yet
0
Post a comment