Towards a just, equitable, humane and sustainable society

கைவினையும் கற்றலும்

0
No votes yet
0
Post a comment

கைவினையும்  கற்றலும் – பட்டாம்பூச்சி

படம் வரைவதற்கும் மொழிக் கற்றலுக்கும் என்ன தொடர்பு? என்பதைத் தெரிந்து கொண்டோம்.  திரு.எழில் அவர்களின் பயிற்சிப் பட்டறையில் காகிதத்தில் பட்டாம்பூச்சி செய்யக் கற்றுக்கொண்டோம். சரி, இதை என் குழந்தைகளுக்கும் கற்றுத் தரலாம்.  ஆனால் அது வெறும் கைவினையாகக் இருக்கக் கூடாது, அவர்களது மொழித்திறன் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா?

ஆகையால், நாங்கள் வகுப்பறையில் காகித பட்டாம்பூச்சி செய்தோம். பிறகு அதற்கு வண்ணம் தீட்டினோம். பட்டாம்பூச்சிகள் பற்றி உரையாடினோம். இறுதியாக குழந்தைகள் அனைவரும் தனித்தனியாகப் பட்டாம்பூச்சியைப் பற்றி 5 முதல் 6 வாக்கியங்கள் தங்களுக்கு தெரிந்ததை எழுதினார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் சிந்தனைத் திறன் வேறுவேறாக இருந்தது. அவர்களது சொற்களில் பிழை இருந்தது. திரும்பத் திரும்ப உச்சரிக்கச் செய்து எழுதி பிழைகளைக் களைந்தேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கதாப்பாத்திரங்களை ஆராய்தல் - போண்டா பள்ளியில் போண்டாட்டம்

போண்டா பள்ளியில் போண்டாட்டம் என்ற கதை குழந்தைகளுக்குச் சொல்லப்பட்டது. இந்தக் கதையில் இடம் பெற்றுள்ள படங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை கூறும் போது ராஜா ராணியின் குழந்தைக்கு என்னவென்று சொல்வோம் என்ற கேள்விக்கு உடனடியாக அரண்மனை இளவரசன் என்ற பதில்கள் வந்தது ஆச்சரியமாக இருந்தது.

போண்டா எப்படி இருக்கும்? என்றதற்கு,

லைட் ஆரஞ்சு கலர்ல, மெது மெதுண்ணு உள்ள சாப்டா , சூப்பரா இருக்கும் என்று அனுபவித்து குழந்தைகள் கூறியபோது நிஜமாகவே போண்டா சாப்பிட்டு சொல்வது போல் இருந்தது.

சமையல்காரருக்கு ஏன் வியர்த்தது? என்றதற்கு,

மற்றவர்கள் விட நிறைய வேல செய்றாரு அதனால் என்றனர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் பயந்தான் என்று கூறினான். கதை சொல்லும் நேரம் முழுவதும் குழந்தைகள் உற்சாகத்துடனும் ஈடுபாட்டுடனும் இருந்தனர்.

கதை கூறலின் தொடர் பணியாக முதலில் character Mapping/ Analysis என்ற செயல்பாட்டைச் செய்தோம்.

குழந்தைகள் கதையில் தங்களுக்குப் பிடித்த கதை மாந்தர் ஒருவரை பற்றி பிடித்தது என்ன? பிடித்தது என்றதற்குக் காரணங்களும் கூறினால் அதுவே character Mapping எனலாம்.

உதாரணமாக,

ராணியைப் பிடிக்கும் என்று சொன்ன குழந்தை, இளவரசனுக்குப் பிடிச்ச சாப்பாடு சமைக்கச் சொன்னாங்க என்று காரணம் கூறினான்.

ராஜாவைப் பிடித்தற்குக் காரணமாக, அவர் நாட்டு மக்கள் எல்லாரையும் போண்டா சாப்பிடச் சொன்னார் என்றான்.

இளவரசனை பிடித்தற்குக் காரணமாக, எதிரி நாட்டைத் தோற்கடித்ததற்குப் பிடித்தது என்றான்.

இதற்குப் பிறகு குழந்தைகள் இருகுழுக்களாக பிரிந்தனர்.

ஒரு குழுவினர் கதையை நாடகமாக நடித்துக் காட்டினார்

மற்றொரு குழுவினர் கதை நிகழ்வுகளைப் படமாக வரைந்தனர்.

Term:

0
No votes yet
0
Post a comment