Towards a just, equitable, humane and sustainable society

சமையல் என்றால் என்ன

0
No votes yet
0
Post a comment

சமையல் முறைகள், பாத்திரங்கள் பற்றி உரையாடல் மற்றும் களப்பயணங்கள் மூலம் நடந்த கற்றல் கற்பித்தல் அனுபவம்

சமையலைப் பற்றிய பாடத்தில் உணவு தயாரிக்கும் முறைகளும், உணவு தயாரிக்க பயன்படும் பொருட்களைப் பற்றியும் வருவதால் அதற்காக வகுப்பறையில் நடந்த உரையாடல்களையும், செயல்பாடுகளையும் இங்கே பகிர்கிறேன்.

முன் ஆயத்தம்:

முதலில் வாயைக் காண்பித்து என்ன என்று கேட்டதற்கு ‘வாய், mouth’ என்று பதில் கூறினார். பின்பு அதன் பயன் என்ன என்று கேட்டதும் லோகநாதன் ‘பேச’ என்றார். அதற்கு ‘speaking’ என்று கரும்பலகையில் எழுதினேன். தொடர்ந்து ‘வேறு எதற்கு பயன்படும்?’ என்றவுடன் ஷர்மிளா சாப்பிட என்று செய்கை செய்தார், லோகநாதன் ‘eating’ என்றவுடன் அதைக் கரும்பலகையில் எழுதினேன். ‘what all do we eat?’ என்று கேட்டவுடன் முதலில் தயங்கிய குழந்தைகள் பின்பு ‘Rice, Poori, Vadai, Lemon rice, Puli rice, Tomato rice, fruits, vegetables, bread, cake’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பட்டியலிட்டனர். அவற்றை நான் கரும்பாலகையில் எழுதி போட்டேன். பின்பு இவ்வாறு நாம் சாப்பிடும் அனைத்து உணவும் ‘food items’ என்று கூறி கரும்பலகையில் எழுதினேன்.

அடுத்ததாக இந்த food items எங்கு கிடைக்கிறது என்றதற்கு கடையில் என்று பதில் வந்தது. ‘சாப்பாடு எப்படி கிடைக்கிறது?’ என்று கேட்டதற்கு ‘அம்மா சமைப்பாங்க’ என்றனர். சமைப்பதை எப்படி கூறலாம் என்று வினவி ‘Cooking’ என்று கரும்பாலகையில் எழுதி அதைப் படிக்க செய்தேன். பிறகு ‘I cooked Idly and sambar in the morning' என்று கூறி எழுதிப் போட்டேன். தொடர்ந்து இதைப் போல் குழந்தைளைச் சொல்லச் சொன்னதற்கு நிதிஷ் ‘I cooked puli rice’ என்றார். ‘நீ செய்தாயா?’ என்றதற்கு ‘இல்லை, அம்மா’ என்றார். அதற்கு நான் ‘my mother cooked என்று சொல்ல வேண்டும்’ என்றேன்.

சமையல் பாத்திரங்கள்

பின்னர் சமைப்பது எங்கே என்று கேள்வி எழுப்ப ‘kitchen’ என்று பதில் கூற கரும்பலகையில் எழுதினேன். இதுபோல ஒரு சில வீடுகளில் சமைப்பதற்கென்று தனியாக சமையல் அறை உண்டு வீடுகளில் சமைப்பதற்கு தனி இடம் ஒதுக்கி இருப்பார்கள். அடுத்து ‘நான் சமைக்க முடியுமா?’ என்று கேட்டதற்கு அதற்கு சாமான், அரிசி, தண்ணீர், காய்கறிகள் தேவை என்று பட்டியல் செய்ததும் கரும்பலகையில் எழுதினேன். ‘என்ன சாமான்கள்?’ என்று கேட்டதற்கு அண்டா, குண்டா, சட்டி, கரண்டி, கூடை, பானை அன்று கூறினார். இது எல்லாம் பத்திரங்கள், ஆங்கிலத்தில் ’Utensils’ என்று கூறி கரும்பலகையில் எழுதினேன். மேலும் அவர்கள் வீட்டிலுள்ள சமையல் பாத்திரங்களை வரைந்து பெயர் எழுதி வர வேண்டும் என்று தொடர்பணி அளித்தேன். கரும்பலகையில் எழுதிப் போட்ட வார்த்தைகள் புத்தகத்தில் பாடத்தில் இருந்தால் அதை வட்டமிட்டு வரும்படி அறிவுறுத்தினேன்.

இந்த விரிவான கலந்துரையாடலின் மூலம் குழந்தைகளின் சூழலும் புரிந்தது. சமையல் அரை அமைப்பைப் பற்றி குழந்தைகளுக்கு காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.

‘சமையல் பாத்திரங்கள் எதனால் செய்யப்பட்டது?’ என்ற உரையாடலை தொடங்கினோம். குழந்தைகள் ‘Iron, plastic, mud, silver, glass’ என்று பட்டியலிட கரும்பலகையில் எழுதினேன். பின்னர் தீர்த்தம் தருவதற்கு பயன்படுவது செம்பு என்று கூறி ‘Copper’ என்று எழுதினேன். உடனே இரு மாணவர்கள் தங்கம் பத்திரம் பயன்படுத்துவதாக கூறினர். அது பித்தளை என்று பின்பு தெரிந்ததும் ‘Brass’ என்று அறிமுகப்படுத்தி எழுதினேன். இதே போல் அலுமினியம் அறிமுகப்படுத்தி எழுதினேன். தொடர்ச்சியாக அவர்களின் சமையல் அறையில் உள்ள பாத்திரங்கள் எதனால் செய்யப்பட்டது என்று பார்த்து எழுதி வர அறிவுறுத்தினேன்.

சமையல் அரை

சமையல் அறையின் வரைபடம் ஒன்றை காண்பித்தேன். அதைப் பார்த்ததும் அது ‘kitchen’ என்றும் அதில் உள்ள பொருட்களை ‘gas, glass, pot, cooker’ என்று பட்டியலிட்டனர். பின்பு அருகில் இருக்கும் மூன்று வீடுகளின் சமையல் அறையைப் பார்க்க புறப்பட்டோம். அதற்கு முன் அங்கு சென்றதும் எனென்ன பொருட்கள் எப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது, அப்பொருட்களின் பயன்கள், போன்றவற்றை உற்று நோக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்தினேன். அங்கு அஞ்சலை பெட்டி பற்றியும், மரத்தினால் செய்யப்பட்ட மத்து சப்பாத்தி கட்டை போன்றவற்றையும் கல்லால் செய்யப்பட்ட உரல், அம்மி போன்றவற்றைப் பற்றியும் செம்பு, பித்தளை குடங்களைப் பற்றியும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. காஸ் அடுப்பு, விறகு அடுப்பு, மின்சார அடுப்பு போன்றவற்றையும் அவை எவ்வாறு எதனைக் கொண்டு எரிகின்றன என்று உரையாடினோம். பின்பு தொடர்பணியாக, ஒரு சமையல் அறையின் படம் வரைந்து பொருட்களின் பெயர்களை எழுதி வர அறிவுறுத்தினேன்.

 

      

சமையல் அறையை காண களப்பயணம்

சமையல் முறை

மாணவர்கள் பள்ளியில் டீ போடுவதை நோக்க செய்து ஒவ்வொரு நிலையையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கினேன். பின்னர் வகுப்பறைக்குயில் டீ போட தேவையான பொருட்களை கூறி கரும்பலகையில் எழுதினர். செயல்முறையை அவர்கள் கூற நான் கரும்பலகையில் எழுதினேன்.

       

டீ செய்முறை

பின்னர் இதே போல் தோசை செய்ய தேவையானப் பொருட்களை அரிசி, உளுந்து, தண்ணீர், வெந்தயம், உப்பு என வரிசைபடுத்தி செய்முறைகளையும் washing, soaking, adding, grinding, fermenting, pouring, spreading, roasting வரிசைப்படுத்த கரும்பலகையில் எழுதி அனைவரையும் படிக்க வைத்தேன். பிறகு எழுத்து அட்டைகள் கொடுத்து அதை ஒவ்வொருவராக படித்து அந்த வகையில் செய்யப்படும் உணவுப் பொருட்களைப் பகிர்ந்தனர். (எ.கா) Boiling என்றால் பால், டீ, வெந்நீர், சாதம் என்று வரிசைப்படுத்தினர். Preserving என்று வந்ததும் fridgeல் வைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் உரையாடலின் பின் ஊறுகாயைக் கூறினர். பின்னர் தொடர்பணியாக இட்லி, தோசை போன்ற அவர்களுக்கு தெரிந்த உணவை தயாரிக்கும் முறைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் பத்திரங்களை வரைந்து வரும்படி அறிவுறுத்தினேன்.

ஆங்கில வார்த்தைகளைப் படிக்க சொன்னால் முதலில் spelling படித்து பிறகு முழு வார்த்தையை படிக்க சிரமப்படுகின்றனர். இவ்வாறு படிக்க சிரமப்படுவது வார்த்தைகள் புதிதாக இருப்பதாலோ என்று தோன்றியது. செய்முறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சில காய்கறிகளை எடுத்து வைத்து அவற்றின் பெயரைக் கூறச் செய்தேன். பின்னர் எவற்றை பச்சையாகவும் (raw), சமைத்தும் (cooked) உண்ணலாம், எவற்றை எல்லாம் இரண்டு வழியிலும் (raw & cooked) உண்ணலாம் என்று வரிசைப்படுத்தினர். இவற்றில் சமைத்து உண்பதில் brinjal, potato, drumstick, beans என்றும் இரண்டு வழியிலும் (raw & cooked) உண்பதில் carrot, capsicum, cabbage, cucumber, coconut, tomato, lady's finger என்றும் வரிசைப்படுத்தினர். சமைக்காமல் உண்ணலாம் என்று உள்ள காய்கறிகளை வைத்து Salad  செய்தோம். இதன் மூலம் washing, peeling, cutting, beating, squeezing (lemon) போன்ற செய்முறைகளை நேரடியாக பார்த்தும் செய்தும் புரிந்து கொண்டனர். மேலும் அவற்றை நான் கரும்பலகையில் எழுதி மீள்பார்வையும் செய்தேன்.

பிறகு மைதா, உப்பு கலந்த மாவு பதமாக்கி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு உருண்டை தந்து பாத்திரங்கள் செய்ய கூறியதும் ஆர்வமாக தோசைக்கல், கரண்டி என்று செய்தனர். இந்த செயல்பாட்டில் ஆசியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு குழிபணியார சட்டி, முறுக்கு அச்சு, குக்கர், மிக்ஸி, அஞ்சறைப்பெட்டி என்று செய்து அசத்தினர். அதை மாதிரியாக கொண்டு சில மாணவர்கள் செய்தனர். பின்னர் ஒவ்வொரு பாத்திரத்தின் பயன்பாடு குறித்து உரையாடினோம். இதே போல களிமண்ணிலும் செய்து வரும்படி அறிவுறுத்தினேன்.

பத்திரங்களின் மாதிரிகளை செய்யும் மாணவர்கள்

ஆசிரியரின் குறிப்பு

குழந்தைகளின் கற்கும் திறன் ஒவ்வொரு நாளும் எனக்கு வியப்பையும் குழப்பத்தையும் தந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் கேள்விகள் என்னுள்ளே தேடலை அதிகரித்து அவர்களின் தேவை அறிந்து செயல்படும் போது என் பணியை சிறப்பாக செய்ய முடிகிறது. என்னை ஆசிரியர் பணிக்கு தகுதியாக்குவது இத்தகைய மாறுபட்ட வாய்ப்புகளே. இத்தகைய அனுபவத்தின் மூலம் தான் என்னை நான் மெருகேற்றிக் கொள்ள முடிகிறது.

Grade: 
2, 3, 4, 5, 6, 7, 8, 9

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment