Towards a just, equitable, humane and sustainable society

பயண அனுபவம்

0
No votes yet
0
Post a comment

கலாச்சாரப் பரிமாற்றத்   திட்டத்தின் கீழ் புதுவையிலிருந்து டையூவிற்குப்  பல அரசுப் பள்ளியிகளிலிருந்து புறப்பட்ட 40 மாணவர்களுள், வீரமா முனிவர் பள்ளி மாணவர்களான  ராஜேஷ், சூர்யா, ஆகியோரின் பயண அனுபவங்களைக் கீழே பகிர்ந்து கொள்கிறேன்.

எம்பள்ளி மாணவர்கள் டையூ சென்று வந்த மகிழ்ச்சியான அனுபவங்களை இங்குக் கட்டுரையாகத் தருகிறேன்.

29.11.2018 புதுவையிலிருந்து புறப்பட்டுச் சென்னை விமான நிலையம் அடைந்தனர்.  சூர்யாஸ்ரீ, இராஜேஷ் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் சென்னையிலிருந்து டையூ விமானத்தில் சென்றது முதல் அனுபவம்.  அவர்கள் கயிற்றில் மிதப்பது போல / சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்ந்தார்களாம்.

விமானத்தில் செல்லுகையில் பறவைகள் ஆகாயத்தில் பறப்பது போல் சந்தோஷப்பட்டோம்.

-ராஜேஷ்

அகமதாபாத்தில் இருந்து 17 முறை கஜினி  படையெடுத்த சோம்நாத் கோவிலைச் சுற்றிப் பார்த்து அங்கிருந்து டையூவை அடைந்தார்கள்.

டையூவில் போர்ச்சுகீசியர் கட்டிய கோட்டை மற்றும் பீரங்கிகளைக் கண்டு, போட்டோ எடுத்துக்கொண்டபொழுது,

அங்குத் தனியார் பள்ளிகள் இல்லை.  அரசுப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட்டன. நாம் தமிழும், ஆங்கிலமும் படிப்பது போல அவர்கள் ஆங்கிலமும், குஜராத்தியும் படிக்கின்றனர்.

நம் மாணவர்கள் அந்த மாணவர்களுடன் கலந்துரையாடியபொழுது, அப்பள்ளி நல்ல கட்டமைப்புடன் சுத்தமாகக் காணப்பட்டது என விவரித்தார்கள்.

அடுத்து அவர்கள் ‘கிர்’ காடுகளுக்குச் சென்று, அங்குச் சிங்கம்,  சிறுத்தைகள் பெரிய கழுகுகள், நரிகளைக் கண்டு, ஆச்சரியமும் அதிர்ச்சியும் நிறைந்த  ஒரு தகவலைத் தெரிந்து கொண்டார்கள்.

உலகத்திலேயே 500 சிங்கங்கள் மட்டுமே உள்ளது. அதில், அதிகம் இங்கு உள்ளது என்று தெரிந்து வியந்தார்கள்.

காட்டு இலாகா அதிகாரி காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் காப்பதன் அவசியம் பற்றி விளக்கினார். அங்கு organic Farming – யை கண்டு களித்தப்பிறகு  , பழங்குடி மக்களுடன் பழமையான நடனம் ஆடினார்கள்.

அவர்கள்  டையூவில் இருந்து அகமதாபாத் வந்து அங்குக் காந்தி அடிகளின் சபர்மதி ஆசிரமத்தைப் பார்த்து,   உலகுக்கு அகிம்சை விதையை விதைத்த காந்திஜியின் தியாகம், சத்தியாகிரகப் போராட்டம் பற்றி அறிந்து கொண்டார்கள்.

அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டுச் சென்னை விமானம் மூலம் வந்தடைந்து. சென்னையிலிருந்து புதுவைக்கு  6ஆம் தேதி டிசம்பர் 2.30 மணியளவில் மகிழ்ச்சியாகப் புதுவைத் திரும்பினார்கள். அவர்களைக் கலாச்சாரப் பரிமாற்றச் சுற்றுப்பயணம் (Cultaral exchange program)  செல்ல தேர்ந்தெடுத்த எங்கள் Headmistress மற்றும் புதுவைக் கல்வித்துறைக்கு எங்கள் நன்றி !

கற்றல்

கலாச்சாரப் பரிமாற்றம் மூலம்  இந்தியாவில் உள்ள பகுதிகள் கல்விமுறை, மாணவர்கள், அவர்கள் பேசும் மொழி, நடனம், உணவு, உடைகள், கலாச்சாரம், விழாக்கள் பற்றி அறிய முடிந்தது, டையூ வில் இருந்தது போல் நம்மூரிலும் அரசுப் பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் மாணவர்களின் ஆசை.

புதுவையைப்போல டையூ ஒரு UT என அறிந்துகொண்ட இந்தப்பயணம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.

தொகுத்து வழங்கியவர்: திருமதி. மணிமொழி - தமிழ் ஆசிரியை, வீரமாமுனிவர் அரசு ஆண்கள் பள்ளி.

மாணவர்கள் : நு. இராஜேஷ், ளு. சூரியாஸ்ரீ

Grade: 
5, 6, 7, 8

Subject: 
Social Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment