Towards a just, equitable, humane and sustainable society

சுற்றியுள்ள தவரங்களை அறிவோம்

0
No votes yet
0
Post a comment

பாட நோக்கம்

  • உயிருள்ளவை உயிரற்றவை வேறுபாடறிதல்
  • சுற்றி உள்ள தாவரங்களை அடையாளம் கண்டறிதல்
  • தாவரங்களின் பாகங்களையும் அவை எவ்வகையில் வேறுபட்டுள்ளன என்பது பற்றியும் புரிய செய்தல்
  • தாவரங்களை அவற்றின் பாகங்கள் மற்றும் முழுமையாக வளர்ந்த அளவை வைத்து வகைபடுத்துதல்

வகுப்பறை செயல்பாடுகள்

1. உயிருள்ளவை/உயிரற்றவை வேறுபாடறியச் செய்தல்

      மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு உயிருள்ளவை, உயிரற்றவை வேறுபாடுகள் அறியச் செய்வதேன். வகுப்பறையில் நடந்த உரையாடல் கீழே,

இவ்வாறு உயிருள்ளவை நகரும், சுவாசிக்கும், வளரும், இனபெருக்கம் செய்யும் என்பதனை வினாக்கள் மூலம் புரியச் செய்தேன். பின்னர் உயிருள்ளவை, உயிரற்றவை பற்றி powerpointஐப் பயன்படுத்திக் கலந்துரையாடினோம். இந்தக் கட்சிப்படுத்துதலின்  மூலம் மாணவர்கள் எளிதாகப் புரிந்தது கொண்டனர்.

2. தாவரங்களின் பாகங்களை அறிதல்

குப்பைமேனி செடியைக் கொண்டு வந்து அதன் பாகங்களை நினைவு கூறச் செய்தேன். பின்னர் தாவரங்களின் பாகங்கள் உள்ள அட்டைகளை வைத்து அது எந்தத் தாவரத்தின் பாகங்கள் (இலை, பூ, தண்டு) என்பதை பாகுபடுத்தினோம். மாணவர்கள் தாவரங்களின் பாகங்களை ஆர்வமுடன் பாகுபடுத்தினர். நெற்செடியின் பாகங்களைப் பாகுபடுத்தும் போது  மாணவர்கள் அதை அரிசி என்று சொன்னார்கள். பின்னர் உரையாடலின் மூலம் அது நெல் என்பதை அறிந்து கொண்டனர்.

3. மரங்களை உற்றுநோக்கல்

பள்ளியைச் சுற்றியுள்ள இடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று உற்றுநோக்கச் செய்தேன். அந்தத் தாவரத்தின் பெயர், உயரம், பூவின் நிறம், இலையின் அமைப்பு, தொட்டுப்பார்த்து அதன் தன்மைகள் ஆகியவற்றை அறியச் செய்தேன். முருங்கைமரம், நாவரசமரம், மல்லிகை, கற்பூரவல்லி, கொய்யா, பப்பாளி, செம்பருத்தி, தென்னைமரம், வேப்பமரம், போன்றவற்றை உற்றுநோக்கினர். வகுப்பறைக்கு அவற்றின் இலை, பூ, தண்டு, போன்றவற்றைக் கொண்டு வந்தனர். பின் அவற்றின் அமைப்பு, அளவு, நிறம், நரம்பமைப்பு, செடியா /மரமா/கொடியா என்பதைப்பற்றி கலந்துரையாடி மகிழ்ந்தனர். இதன் மூலம் மாணவர்களின் உற்றுநோக்கல் திறன் அதிகமானது. இந்த நேரடி அனுபவம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

          

4. வேறுபாடறியச் செய்தல்

மாணவர்களைப் பல இலைகள், பூக்களை வகுப்பறைக்குக் கொண்டு வரச் சொன்னதும் ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, வேப்பம், பூவரசன், கற்பூரவல்லி, போன்ற செடிகளின் இலைகளைக் கொண்டு வந்தனர். இலைகளை உற்றுநோக்கச் செய்து அது எந்த தாவரம் எனக் கூறச் செய்தேன். பின்னர் இலைகள், பூக்கள் அதன் வடிவம், அளவு, நிறம், மணம் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளைப் புரியச் செய்தேன்.

5. இலைகளை அச்சு எடுத்தல்

இலைகளைத் தாளில் வைத்து அச்சு எடுப்பதன் மூலம் இலையின் அமைப்பு, அதன் வெளிவடிவம் (margin), உள் நரம்பு அமைப்பு (venation) ஆகியவற்றை அறியச் செய்தேன். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

6. மரங்களின் தொகுப்பு (album) தயாரித்தல்

மாணவர்கள் ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு மரத்தை வரையச் செய்தேன். பின்னர் அம் மரம் தொடர்பான இலை, பூ, காய், தண்டினைச் சேகரித்து ஒட்டினர். பூவரச மரம், முருங்கை மரம், கொய்யாமரம் ஆகிய மரத்தின் பாகங்களைக் கொண்டு தொகுப்பைத் தயாரித்து இருந்தனர். பின்னர் வகுப்பறையில் மற்ற மாணவர்களின் தொகுப்பைக் கண்டு உரையாடினர். இது மாணவர்களிடம் தாங்களே ஒரு album தயாரிக்க முடியம் என்ற மனப்பான்மையை வளர்த்தது.

நன்றாகச் சென்றது

  • வகுப்பறையை விட்டு வெளியே சென்று கற்றல் மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், கற்றலை எளிதாகவும் மாற்றுகிறது. அனைத்து செயல்பாடுகளும் மாணவர்களிடையே ஆர்வத்தினைத் தூண்டி கற்றல் – கற்பித்தல் சிறப்படையச் செய்தது. பாடநோக்கம் மாணவர்களைச் சென்றடைந்தது.
  • பாகங்களைப்  பாகுபடுத்தல் செயல்பாடு அவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது.
  • குழு அமைப்பு கற்றலை எளிமையாக்கியது    

மாற்ற வேண்டியது

  • மாணவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள தாவரங்களின் பெயர்களை அறியச் சில செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • தாவரங்களின் பயன்கள், முக்கியத்துவத்தை விளக்கும் காணொளியை அதிகம் காண்பிக்க வேண்டும்.

Grade: 
3

Subject: 
EVS

Term: Term 1

0
No votes yet
0
Post a comment