Towards a just, equitable, humane and sustainable society

பாதுகாப்பு

சமச்சீர் கல்வி, சமூக அறிவியல், வகுப்பு 4, பருவம் 3, பாடம் 2

ம. சாந்தகுமாரி

முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம்

ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்...

நோக்கம்:

1. ஆபத்து நேரக்கூடிய இடங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் பற்றி அறியச் செய்தல்.

2. விபத்து ஏற்பட காரணங்கள் பற்றி அறியச்செய்தல்

3. விபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளைப் பற்றி அறியச் செய்தல்

4. முதலுதவி பற்றி அறியச் செய்தல்

கற்றல் திறன்கள்:

1. நெருப்பு, நீர், மின்சாரம், வாகனம் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள் பற்றி அறிதல்.

2. நெருப்பு, நீர், மின்சாரம், வாகனம் போன்றவற்றால் விபத்துக்களின் காரணங்களை அறிதல்.

3. விபத்துகளிருந்து நம்மை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்த பாதுகாப்பு முறைகளை அறிதல்.

4. விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நாம் செய்ய வேண்டிய முதலுதவி அறிதல்.

கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

1. செய்தித் தாள் தொகுப்பு

2. வண்ணப்படங்கள்

3. சாலைவிதி குறியீட்டு படங்கள்

4. துண்டு அறிக்கைகள்

5. முதல் உதவிப்பெட்டி

6. தீயணைப்புக் கருவிகள்

7. பணித்தாள்கள் (worksheets)

8. வீடியோக்கள் (Videos)

இந்தப் பாடத்தை நடத்தத் துவங்குவதற்கு முன் வகுப்பில் உள்ள மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.

ஈடுபடுதல்:

செயல்பாடு 1:

ஆசிரியர் குழந்தைகளிடம் விபத்தைப் பற்றிக் கேள்விகளைக் கேட்டு விவாதித்தல், விபத்து நேரில் பார்த்தது உண்டா? கேட்டது உண்டா? அப்பொழுது உனக்கு எப்படி இருந்தது? போன்ற வினாக்கள் எழுப்பி அந்த விபத்தைப் பற்றிக் கூறச் செய்தல். அவ்வாறு கூறும்பொழுது மற்றவர்களைக் கவனிக்கச் செய்து அந்த விபத்து நிகழக் காரணம் என்ன என்பது குறித்து விவாதிக்கச் செய்தல். குழந்தைகள் தாங்கள் ஏதாவது விபத்தை நேரில் பார்த்திருந்தால் அல்லது தனக்கு நேர்ந்திருந்தால் அதைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுதல். அவ்வாறு கூறும் பொழுது மற்றவர்கள் அந்த விபத்து ஏன் நடந்திருக்கும், எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து விவாதித்தல்.

''முதலில் தாங்கள் தங்கள் குழுக்களில் கண்ட தீர்வுகளுக்கும்,

புத்தகத்தில் உள்ள பாடப் பொருளுக்கும் உள்ள தொடர்பை உணரச்செய்தல்."

ஆசிரியர் குழந்தைகளின் முன் அறிவைச் சோதித்தல்: தான் பார்த்த சம்பவம் அல்லது தனக்கு நேர்ந்த விபத்து குறித்துச் சரியாகக் கோர்வையாக எடுத்துக் கூற முடிகிறதா, கலந்துரையாடலில் பங்கேற்று, தங்கள் கருத்தைப் பதிவு செய்ய முடிகிறதா, மற்றும் காரணங்களை யூகிக்க முடிகிறதா என்பனவற்றைச் சோதித்தல்.

ஆராய்தல்:

செயல்பாடு 1:

செய்தித் தாள்களிருந்து எடுத்த விபத்து பற்றிய செய்திகளைக் குழந்தைகளிடம் கொடுத்துப் படிக்கச் செய்தல். ஒவ்வொரு குழுவிலிருந்தும் தாங்கள் படித்த செய்திகளை ஒவ்வொருவராக எடுத்துரைக்கச் செய்தல். அந்தச் செய்தியில் வரும் விபத்து எதனால் நடந்தது, அதைத் தவிர்க்க என்ன என்ன செய்திருக்க வேண்டும் அவ்வாறு விபத்து நடந்தால் என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களில் விவாதித்தல். (பக்கம் எண் 35-ல் செய்தித்தால்களிளிருந்து எடுத்த சில விபத்து செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது)

மாணவர்கள் குழுக்களில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட செய்தித் தாளில் உள்ள விபத்துச் செய்திகளைப் படித்த பின்னர் அந்தச் செய்தியைத் தெளிவாக மற்றவருக்கு எடுத்துரைத்தல். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேள்விக்கான பதிலை, குழுவில் விவாதித்து தீர்வு காணல். பின்னர் தெளிவாக எடுத்துக் கூறுதல்.

ஆசிரியர், குழந்தைகள் செய்திகளைச் சரியாகப் படித்துப் புரிந்து கொண்டு தெளிவாக எடுத்துரைக்க முடிகிறதா என மதிப்பிடவும். அவர்கள் தீர்வு பற்றி எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றனர் என்பதையும் மதிப்பிடவும்.

 

செயல்பாடு 2:

ஒவ்வொரு குழுவிற்கும் பாடப் பகுதிகளைப் பிரித்துக் கொடுத்துப் படிக்கச் செய்தல். படிக்கும் பொழுது தெரியாத பகுதிகளைக் குறித்துக் கொள்ள அறிவுறுத்தல்.

முதலில் தாங்கள் தங்கள் குழுக்களில் கண்ட தீர்வுகளுக்கும், புத்தகத்தில் உள்ள பாடப் பொருளுக்கும் உள்ள தொடர்பை உணரச்செய்தல்.

இதன் மூலம் தங்களுக்குத் தெரியாத, என்னென்ன புதிய செய்திகளைப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டனர் எனப் பட்டியலிடச் செய்தல். இறுதியில் மற்ற குழுக்களுக்கு எடுத்துக் கூறச் செய்தல். மாணவர்கள் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட செய்திகளைப் படித்து விவாதித்தல். தாங்கள் எழுதாமல் விட்ட குறிப்புகளை எழுதிக் கொண்டு மீண்டும் அதைப்பற்றி கலந்துரையாடல்.

மாணவர்களால் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறதா, சரியான தீர்வு காண முடிகிறதா என்பதைச் சோதித்தல்.

விளக்குதல்:

செயல்பாடு 1:

முதலுதவி செய்யும் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்து மாணவர்களைக் கவனிக்கச் செய்தல். மாணவர்கள் வீடியோ காட்சிகளைக் கவனமாகப் பார்த்து முதலுதவி செய்யும் முறைகளை அறிதல் மாணவர்கள் கவனமாகப் பார்த்து வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதை மதிப்பிடல்.

''மாணவர்கள் குழுக்களாக விபத்தை நடித்து காண்பித்தல்."

Video link:

 

https://www.youtube.com/watch?v=_WUDLgLwsro

https://www.youtube.com/watch?v=QonD60vfcak

https://www.youtube.com/watch?v=_mCWrQ3eMi0

செயல்பாடு 2:

கருத்தாளர்களை அழைத்து வந்து பேசச் செய்தல்

(உ.ம்) மருத்துவர், தீயணைப்புத் துறை அதிகாரி, சாரணர் (Scout) பயிற்சியாளர்.

மாணவர்கள் அவர்கள் கூறும் கருத்துக்களைக் கவனத்துடன் கேட்டல். தங்களுக்கு எழும் ஐயங்களை அவர்களைக் கேட்டு தெளிவு பெறுதல்; கருத்தாளர்களுடன் கலந்துரையாடல். மாணவர்களின் பங்கேற்றல் மதிப்பிடப்படுகிறது.

விரிவாக்குதல்:

செயல்பாடு 1:

ஆசிரியர் மாணவர்களிடம் ஒவ்வொரு குழுவாக வந்து ஏதேனும் ஒரு விபத்து நிகழ்வது போல் நடித்துக் காண்பிக்கச் செய்தல். அடுத்த குழு அதற்கான தீர்வு என்ன ஏன் நிகழ்ந்தது எப்படி தவிர்ப்பது போன்ற வினாக்களுக்கு விடையளித்தல். மாணவர்கள் குழுக்களாக விபத்தை நடித்து காண்பித்தல். உ.ம்: சாலையில் விளையாடிக் கொண்டு செல்லுதல், கவனமின்றி பட்டாசு வெடித்தல் போன்ற ஏதாவது ஒரு விபத்தை நடித்தல். மற்ற குழுக்கள் ஏன் நடந்தது, எப்படி தவிர்த்திருக்கலாம், தீர்வு என்ன, என்பதை ஒவ்வொரு குழுவும் விளக்குதல்.

நடித்தலில் சரியாகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தெளிவாகப் விளக்க முடிகிறதா, அதற்குரிய தீர்வைச்

சரியாக கூறுகின்றனரா என்பதை மதிப்பிடல்.

செயல்பாடு 2:

சாரணர் (Scout) பயிற்சியாளர் உதவியுடன் மாணவர்களுக்கு முதல் உதவி பயிற்சிகள் அளித்தல். மாணவர்கள் முதலுதவிகளை நன்கு கற்றல். மாணவர்கள் பங்கேற்று, செயலாற்றும் திறன், கவனித்தல், உற்றுநோக்கல் போன்றவை மதிப்பிடப்படுகிறது.

செயல்பாடு 3:

இதுவரை பேசாத வேறு விபத்துக்கள் யாவை என மாணவர்களைக் குழுக்களில் விவாதித்து பட்டியலிடச் செய்தல்.

1. பள்ளியில் ஏற்படும் விபத்துக்கள் யாவை?

2. வீடுகளில் நிகழும் வேறு விபத்துக்கள் யாவை?

3. விளையாடும் பொழுது ஏற்படும் விபத்துக்கள் யாவை?

4. விலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் யாவை?

ஆசிரியர் தந்த பெட்டியிலிருந்து தாங்கள் எடுத்த சீட்டில் கேட்கப் பட்ட வினாவிற்கான விடையைக் குழுக்களில் விவாதித்துப் பட்டியலிடுத்தல் பின்னர் மற்ற குழுக்களுக்கு முன் எடுத்துரைத்தல். இங்கு அவர்கள் சொல்லாமல் விட்ட செய்திகளை மற்ற குழுவினர் பதிவு செய்தல். மாணவர்களின் சிந்தித்தல் திறன், கற்பனைத்திறன், பங்கேற்றல் முதலியவை மதிப்பிடப்படுகிறது.

மேலும் பரிந்துரைக்கப்படும் சில விரிவாக்கச் செயல்பாடுகள்:

1. முதலுதவி பெட்டியின் பயனை முழுதும் அறிந்து, முதலுதவி பெட்டி வைத்தல்.

2. தீயணைப்புத் துறைக்குக் களப்பயணமாகச் சென்று உற்று நோக்கல்

3. சாலை விதிகளை அறிதல்

4. சாலைக்கு அழைத்துச் சென்று போக்குவரத்துக் காவலர்களின் (Traffic Police) செயல்பாடுகளை உற்று நோக்கி, சாலைவிதிகளைத் தெரிந்து கொள்ளுதல்.

5. செய்தித் தாள்களை தினம் படித்து, விபத்துச் செய்திகள், அதற்கான காரணம், தவிர்க்கும் முறை ஆகியவைகளைப் பட்டியலிடுதல்.

6. சுவரொட்டிகள் தயார் செய்து ஆங்காங்கே ஒட்டுதல்

7. கலைப் பேரவையில் தினம் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூறுதல்

8. துண்டு அறிக்கைகள் தயார் செய்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வழங்குதல்.

மதிப்பீடு:

செயல்பாடு 1:

பயிற்சித்தாள் கொடுத்து மாணவர்களை விடை எழுதச் செய்தல்

1. சாலையில் செல்லும் பொழுது அதிக _____________ தேவை

2. வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தை முதலில் தூய ____________ கழுவ வேண்டும்.

3. கண்களில் தூசு விழுந்தால் கண்களை_________________ கூடாது

4. கால்களில் ________________ அணிவது அவசியம்.

விடையளி:

1. பட்டாசு வெடிக்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டியவை யாவை?

2. மழைக்காலங்களில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை?

மேலும் சில மதிப்பீட்டு முறைகள்:

1. புத்தகப் பயிற்சிகள்

2. விவரத்தைச் சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு முதல் உதவி செய்யச் செய்யதல்

3. தீயணைப்புக் கருவிகளின் மாதிரிகள் செய்தல்

4. விலங்குகளிடம் பழகும்பொழுது நாம் கவனிக்க வேண்டியவை யாவை?

 

Grade: 
4

Subject: 
EVS

Term: Term 3